குலுக்கை
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
குலுக்கை(பெ)
பொருள்
- விதைநெல் முதலிய தானியங்களைச் சேமித்து வைக்க பயன்படுத்தப் படும் ஒரு வகை மண்கலம்; குதிர்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
- இது பண்டை தமிழரின் பாரம்பரிய வேளாண் கருவியாகும்.
பயன்பாடு
- ”தானியத்தை எடு பார்க்கலாம்”
- “எடுத்தா என்ன செய்வே?”
- “நீ எடு, எடுக்கிற கையை ஒடிக்கிறேன்”
- “என் வீட்டிலே இருக்கிறதை எடுக்கிறதுக்கு நீ யாருடி?”
- ”ஒன் வீட்டிலே இருக்கிறது யார் கொண்டு வந்து போட்டது?” தும்மக்கா, குலுக்கைப் பக்கத்தில் போய் நின்றுகொண்டாள். சிமிண்டுத் திண்ணைக்கு மேலிருந்த குலுக்கைப் பக்கத்தில், இந்தச் சண்டை நடந்தது. குலுக்கை நிறைய தவசம் (தானியம்) தளும்பியது. அது முழுதும் அவளுக்குரியது. ஒரு கையை இடுப்பில் ஊன்றி, இன்னொரு கையை குலுக்கை மேல் வைத்து, சாய்ந்து நின்றபடி தும்மக்கா கேட்டாள். “நீ எங்கே கொண்டுபோறேன்னு தெரியும். ஊரிலே இருக்கிற பள்ளச்சிக்கும் பறைச்சிக்கும் கொட்டிக் கொடுக்கிறதுக்காக நான் சேத்து வைக்கலே.” (தாலியில் பூச்சூடியவர்கள் - பா. செயப்பிரகாசம்)
- குலுக்கையில் இருக்கிற தவசமெல்லாம் அவளுக்குச் சொந்தம். புருஷன் வீட்டுக்கு வருகிறபோது, தாய்வீட்டிலிருந்து அவளுக்குக் கொடுத்த புஞ்சையில் விளைந்தவை. அவள் பேருக்கு உள்ள புஞ்சையிலிருந்து வரும் வெள்ளாமையை எல்லாம், அவள் தனியே எடுத்துக்கொண்டாள். குலுக்கை வாய் தளும்பத் தளும்ப இருக்கும் தவசமும், திண்ணையில் அம்பாரமாய் குவிக்கப்பட்டுள்ள பருத்தியும் அவளுக்குச் சொந்தமானவை. விளைந்து வருகிறபோது அதன் விளைவு கூலியை மட்டும் புருஷனுக்குக் கொடுத்து விட்டாள். ஒரே வீட்டில், ஒரே வாசலுக்குள், ஒரே படுக்கையில் வாழ்ந்தபோதும் அவர்கள் சொத்துக்கள் தனித்தனியேதான் இருந்தன. (தாலியில் பூச்சூடியவர்கள் - பா. செயப்பிரகாசம்)
- கிட்டப்பன் களத்தில் பொலியை வாளித்துக் கொண்டிருந்தான். அச்சிந்த்தலுவின் அம்மா அவனைத் தேடி வந்தாள், குத்திப் போட குலுக்கையிலிருந்து கம்மம்புல் எடுக்க வேண்டுமென்று, "வீட்டு வரை வந்துட்டுப்போ" என்று கிட்டப்பனைக் கூப்பிட்டாள். (கி. ராஜநாராயணன், கோபல்லபுரத்து மக்கள் - பகுதி 6)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளப் பகுதி
தொகுஆதாரங்கள் ---குலுக்கை--- DDSA பதிப்பு + வின்சுலோ +