தமிழ் நாட்டின் பாரம்பரியமான நெல் வகைகளுள் ஒன்று...இதனிலிருந்து கிடைக்கும் அரிசி குழியடிச்சான் அரிசி எனப்படும்..
இது கடும் வறட்சியையும் தாங்கக்கூடிய நெல் வகை... மழை, ஆழ்குழாய் கிணற்றுத் தண்ணீர் பொய்த்தாலும் மகசூல் தரும் நெல்...
ஐப்பசி மாதத்தில் இந்த நெல்லை விதைத்து ஒரு மழை பெய்து நெல் முளைவிட்டாலே போதுமானது... அதன் பிறகு குறைந்த தண்ணீர் அல்லது ஈரப்பதம் இருந்தாலும், குழியில் கிடக்கும் நீரைக்கொண்டே துளிர்விட்டு தூர் வெடிப்பதால் குழியடிச்சான் என்ற பெயர் வந்தது..
பயிர் தை மாதம் அறுவடைக்கு வந்துவிடும்...சுமார் நூறு நாட்களில் மகசூல் தரும் நெல் வகை...நான்கடி உயரம்வரை பொன்னிறமாக வளரும்...அரிசி சிவப்பு நிறத்தில், தடிமனாக, முட்டை வடிவில் இருக்கும்...குழியடிச்சான் அரிசி தாய்ப்பாலை நன்றாகச் சுரக்கச் செய்யும் குணமுடையது...