கொல்லன்
கொல்லன்(பெ)
- கருமான் - இரும்பைக் காய்ச்சி அடித்து பொருட்கள் செய்யும் தொழிலாளி
- வேல் வடிப்பவன்
- கஜானாக்காரன்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- கொல்லன் வேறு, கொல்பவர் (கொலையாளி) வேறு.
- கொல்லன் = இரும்புக்கடியைக் கொன்று, பொன்னுருக்கி அணி செய்பவன். கொல்லுதல் ( சிதைத்தல் ) என்ற வேர்ச்சொல்லில்லிருந்து உண்டான தொழில் ஆகுபெயர் கொல்லன்
பயன்பாடு
- கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை? (பழமொழி)
- இந்த வாளை நான் அடிக்கடி கொல்லன் உலைக்கு அனுப்பித் துரு நீக்கிப் பதப்படுத்திக் கூராக்கி வைத்துக் கொண்டு வருகிறேன். (பொன்னியின் செல்வன், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
- கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென்வயிறு
- நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை (அழுகணிச் சித்தர் பாடல், மதுரைத் திட்டம்)
- மென்றோன் மிதியுலைக் கொல்லன் (பெரும்பாண். 207).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கொல்லன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +