சரமாரி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சரமாரி(பெ)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
- இந்தச்சொல்லில் சரம் என்றால் இழை அதாவது மெல்லிய நூலைப்போன்ற என்றும் மாரி என்றால் மழை என்றும் பொருள்...மழைநீர் வானிலிருந்து பலவித வடிவங்களில் நிலத்தை வந்தடையும்...சிறு, பெரு தூறலாக, சாரலாக, சிறு, பெரு மழையாக இன்னும் பல வகைகளில்...பெருத்த மழை பெய்யும்போது இழை இழையாக அடர்ந்து, தொடர்ந்து, ஒரே சீராக நீர் வானிலிருந்து கொட்டுவதைக் காணமுடியும்... இதுவே சர (இழை)மாரி (மழை) ஆகும்... இதைப் போலவே ஒரு நிகழ்வு வேகமாக, இடைவிடாது, ஒரே சீராக நடந்தால் அதை சரமாரியாக என முற்சொல்லிட்டுக் குறிப்பிடுவது வழக்கம்...
பயன்பாடு
- சரமாரியாக - விடாமல் தொடர்ந்து
- சரமாரி பொழியும் போர்க்களத்தில் சஞ்சலமின்றி நின்று போர் புரிந்தனர் தமிழ் நாட்டு மெய்வீரர். மாற்றார் வில்லினின்று எழுந்து வந்த அம்புகளை மலைபோன்ற தன் மார்பிலே தாங்கி நிலை குலையாமல் நின்றான் ஒரு வீரன். அவ்வீரத்தைக் கண்டு வியந்தனர் இரு திறத்தாரும். "சரந்தாங்கி" என்னும் சிறப்புப் பெயர் அளித்துச் சீராட்டினர். (பெயர் தெரியாப் பெருவீரர்!, தமிழ்மணி, 17 Jun 2012)
- தீவிரவாதிகள் அந்தக் கட்டிடத்திற்குள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர்...
- அந்தக் கட்சியினர் கூட்டிய பொதுக்கூட்டத்தில் அனைவருமே சரமாரியாகச் சொற்பொழிவாற்றினர்.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---சரமாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +