சிம்ஹவலோகனம்

தமிழ்

தொகு
 
சிம்ஹவலோகனம்:
சிங்கம் பின்னோக்கித் திரும்பிப் பார்க்கிறது
 
சிம்ஹவலோகனம்:
சிங்கம் பின்னோக்கித் திரும்பிப் பார்க்கிறது
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--सिंहावलोकन--ஸிம்ஹவலோகந--மூலச்சொல்

பொருள்

தொகு
  • சிம்ஹவலோகனம், பெயர்ச்சொல்.
  1. சொல்லுக்கு சொல் --சிங்கத்தின் (பின்னோக்கியப்) பார்வை
  2. வந்தப் பாதையை மறவாமை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. lion's backward look
  2. to look at/ not to forget- the past way through which a person progressed

விளக்கம்

தொகு
  • सिंह--ஸிம்ஹ-சிங்கம் + अवलोकन--அவலோக1ந-பார்வை/ஆய்வு/சீராய்வு ஆகிய இரண்டு சமஸ்கிருதச் சொற்களாலான கூட்டுச் சொல் சிம்ஹவலோகனம்...நேரடிப்பொருள் சிங்கத்தின் பார்வை என்றாலும், சிங்கத்தின் பின்னோக்கியப் பார்வையைக் குறிக்கும்...இந்தச்சொல்லை மனிதச் சமுதாயத்திற்கு ஓர் அறிவுரையாகப் பயன்படுத்துவர்...விலங்கினத்திலேயே மிக்க வலிமையுடைய சிங்கம் காடுகளில் குகைகளில் வசிக்கும்...ஏனைய விலங்குகள் சிங்கத்தின் குகையில் புக அச்சம் கொண்டு அவற்றிலிருந்து விலகியே யிருக்கும்...இருந்தபோதிலும் சிங்கமானது பசியெடுக்கும்போது வேட்டையாட குகையைவிட்டு வெளியேறும்போது, சிறிது தூரம் சென்றவுடன் தன் குகையைத் திரும்பிப் பின்னோக்கிப் பார்த்து ஓர் உறுமல் சத்தம் போடும்...அதன் பிறகே மேற்செல்லும்...இதன் காரணத்தை எவரும் அறியார்...என்றாலும் மனிதர்கள் சிங்கத்தின் இச்செயலை ஓர் அறிவுரையாக எடுத்துக்கொண்டு எவ்வளவுதான் வலிமையும், செல்வமும், செல்வாக்கும் உடையவராக ஒருவர் வாழ்க்கையிலுயர்ந்தாலும், தன் இருந்த இருப்பையும், முன்னேறி வந்தப் பாதையையும் திரும்பிப் பார்த்துக்கொண்டு அவைகளை மறவாமலிருத்தல் வேண்டும் எனும் கோட்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்வர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிம்ஹவலோகனம்&oldid=1881229" இலிருந்து மீள்விக்கப்பட்டது