ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

சுதை(பெ)

  1. சுண்ணாம்பு, சுண்ணச்சாந்து
    • வெள்ளி வெண்சதை யிழுகிய மாடத்து (மணி. 6, 43)
  2. வெண்மை (சூடாமணி நிகண்டு)
  3. பால்
    • சுதைக்க ணுரையைப்பொருவு தூசு (கம்பரா. வரைக். 16)
  4. தேவாமிர்தம், அமிழ்து, அமுது
    • சுதையனைய வெண்சோறு (கம்பரா.குலமுறை. 18)
  5. பொருள், செல்வவளம்
    • அவன் சுதையுள்ளவன்.
  6. சுவை
  7. நட்சத்திரம் அக. நி.
  8. மின்னல் (சங். அக.)

(பெ)

(பெ)

  • வருகன் றூட்டாப் புன்சுதை (குற்றா. தல.தக்கன் வேள்விச். 117)

(பெ)

  • கேடு.சுதையொன்றி யக்களத்தேவிழ (கந்த பு. அக்கினிமு.85)

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம் (பெ)

  1. lime, plaster
  2. whiteness
  3. milk
  4. ambrosia
  5. riches, property
  6. taste,savour, deliciousness, sweetness
  7. star
  8. lightning

(பெ)

(பெ)

(பெ)

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்
மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்
கண்ட சர்க்கரையும் மெழுகும் என்று இவை
பத்தே சிற்பத் தொழிற்கு உறுப்பு ஆவன (திவாகர நிகண்டு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளப் பகுதி

தொகு

ஒத்த சொற்கள்

தொகு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுதை&oldid=1242591" இலிருந்து மீள்விக்கப்பட்டது