ஞெகிழி
ஞெகிழி(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- plastic
- fire-brand
- piece of wood used for kindling fire by friction
- fire, spark
- fuel
- ceylon leadwort
- tinkling anklet
விளக்கம்
பயன்பாடு
- ஞெகிழி (பிளாஸ்டிக்) பைகள் மிகப் பெரிய சூழல் கேட்டை உருவாக்குகின்றன. ஞெகிழி என்பது பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் சுத்திகரிக்கப்படும்போது, பாலிஎதிலின் என்ற துணைப்பொருளாகக் கிடைக்கிறது. ஞெகிழி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஆறு பொருள்களில் ஐந்து மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை.
- ஞெகிழிப் பைகளை உண்டு ஆயிரக்கணக்கான காட்டுயிர், கடலுயிர்கள் ஆண்டுதோறும் அழிகின்றன. கடலாமைகள் இவற்றை இழுதுமீன் என்று கருதுகின்றன. உணவுக்குழலில் சிக்கி இறந்துபோகின்றன. (ஞெகிழியா? காகிதமா? எந்தப் பை நல்லது? , கீற்று)
- "சிறுதினை காக்கும் சேணோன் ஞெகிழியின் பெயர்ந்த நெடுநல் யானை மீன்படு சுடர் ஒளி வெரூஉம்" - கபிலர். "என்ன அர்த்தம் அதுக்கு?" என்றேன். "தினைப்புனம் காக்கக்கூடிய குறவனோட பந்தத்திலே இருந்து விழுந்த தீப்பொறிய பாத்து பயந்த யானை நட்சத்திரங்களை பாத்தும் பயந்துக்குமாம்" (யானைடாக்டர், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- விடுபொறி ஞெகிழியிற் கொடிபடமின்னி (அகநானூறு. 108).
- .கானவர் . . . ஞெகிழி பொத்த (குறிஞ்சிப். 226).
ஆதாரங்கள் ---ஞெகிழி--- DDSA பதிப்பு + வின்சுலோ +