திருக்குறள்அகரமுதலி இகரவரிசை

இகரவரிசை

தொகு
இ=இந்த
குறள் 247, 336, 382, 383, 387, 392, 513, 571,
578, 662, 684, 688, 738, 743, 952, 992, 1085,
1129, 1130, 1142, 1147, 1150, 1162, 1169, 1176,
1220, 1227, 1247, 1319.
இஃதோ=(இ+ஃ+து) இது
குறள் 1161.
இகந்து= (இக+த்+ந்+த்+உ) பிரிந்து,
குறள் 1130;
=ஒழிதலால், குறள் 113.
இகல்=மாறுபாடு,
குறள் 481, 647, 691, 851, 852,
853, 854, 855, 857, 859;
இகல் அதிகாரம், 86.
இகலான்= (இகல்+ஆன்)மாறுபாட்டினால்
குறள் 860.
இகலிற்கு=இகல்+இன்>இற்+கு) மாறுபாட்டினை,
குறள் 858.
இகலின்=(இகல்+இன்) மாறுபடுதற்கண்,
குறள் 856.
இகவா= (இக+வ்+ஆ) நீங்கமாட்டா,
குறள் 146, 869.
இகவாமை= (இக+வ்+ஆ+மை) தப்பாமல்,
குறள் 779.
இகழாமை= (இகழ்+ஆ+மை) பழிசொல்லாதிருத்தல்,
குறள் 891, 953.
இகழார்=(இகழ்+ஆ+ஆர்) பழிக்கமாட்டாராய்
குறள் 698.
இகழ்ச்சி=(இகழ்+ச்+சி) பழித்தல்
குறள் 995.
இகழ்ச்சியின்=(இகழ்+ச்+சி+இன்) சோர்வால்
குறள் 539.
இகழ்ந்தார்க்கு=(இகழ்+த்+ந்+த்+ஆர்+க்+கு) மறந்தவர்க்கு
குறள் 538.
இகழ்ந்து=(இகழ்+த்+ந்+த்+உ)அவமதித்து
குறள் 1057.
இகழ்வார்=அவமதிப்பாரை
குறள் 151.
இகழ்வாரை=பழிப்பவரை
குறள் 237.
இகழ்வார்பின்=அவமதிப்பார்பின்னே
குறள் 966.
இகழ்வார்முன்=பழித்துரைக்கும் பகைவர்முன்
குறள் 59.


இசை=புகழ்
குறள் 231, 238, 239, 240, 777, 1003;
=சொல்
குறள் 1199.

இடத்த

தொகு
இடத்த=தன்மையுடையன
குறள் 292.
இடத்தது=இடத்தையுடையதாய்
குறள் 744.
இடத்தால்= (இடம்+அத்து+ஆல்)புலத்தின்கண்
குறள் 422;
=இடத்தொடுபொருந்த (=மூவகை ஆற்றலொடும், நால்வகை உபாயத்தொடும் பொருந்த)
குறள் 484, 497.
இடத்து=(இடம்+அத்து) இடத்தில், குறள் 301, 302, 597, 762, 806, 883, 1153;
=எல்லைக்கண், குறள் 746; 250, 490, 736, 879, 1124, 1285.
இடம்=நிலம்,
குறள் 491;
=(வாய்க்கும்) இடம், குறள் 821;
= உலகம், குறள் 1064;
=இருக்குமிடம், குறள் 1123;
=புகலிடம், குறள் 498;
=செல்வம், குறள் 1064.
இடர்ப்பாடு=(இடர்+ப்+பாடு) துன்பம் உறல்,
குறள் 624.
இடல்=(இடு+அல்) (விதை)தூவுதல்,
குறள் 85.
இடன்=(இடம்>இடன்) நிலம்,
குறள் 493, 494;
= சந்தர்ப்பம், குறள் 687;
= செல்வம், குறள் 218, 910;
= இடனறிதல் அதிகாரம், 50.
இடனொடு=(இடம்>இடன்+ஒடு) இடமும்,
குறள் 675.
இடி= கடுமையாகச் சொல்லுதல்,
குறள் 607.
இடிக்கும்=(இடி+க்+கு+உம்) நெருங்கிச்சொல்லும்,
குறள் 447.
இடித்தல்= (இடி+த்+தல்) கடிந்து சொல்லல்
குறள் 784.
இடித்து= (இடி+த்+த்+உ)கடிந்து சொல்லி, நெருக்கி,
குறள் 795.
இடிப்பாரை=(இடி+ப்+ப்+ஆர்+ஐ) கழறுதற்கு-சொல்லுதற்கு-உரியவர்களை
குறள் 448.
இடு= தா
குறள் 552.
இடுக்கண்=(இடுங்கு+கண்/இடு+க்+க்+கண்) துன்பம்
குறள் 621,624,625,1030;
=துன்பத்தில்
குறள் 625,654;
= துன்பத்தை
குறள் 788;
= இடுக்கண்அழியாமை, அதிகாரம் 63.
இடுதல்=(இடு+தல்) செய்தல்
குறள் 1038.
இடும்பை=(இடும்பு+ஐ)பிறவித் துன்பம்,
குறள் 4;
=துன்பம்,
குறள் 138,508,510,622,623,628,892,1056ர1060,1063;
=நோய்,
குறள் 1056.
இடும்பைகள்= (இடும்பு+ஐ+கள்) துன்பங்கள்,
குறள் 347.
இடும்பைக்கு=(இடும்பு+ஐ+க்+கு) துன்பத்திற்கு,
குறள் 623,627,1029.
இடும்பைத்து=(இடும்பு+ஐ+த்+து) துன்பத்தை உடையது,
குறள் 1295.
இடும்பையுள்=(இடும்பு+ஐ+ய்+உள்) துன்பம் ஒன்றனுள்,
குறள் 1045.
இடை= நடுவில்
குறள் 369,663,899,1108,1122,1239;
=செவ்வியை, கேட்டற்கண் விருப்புடைமையை,
குறள் 712;
யிடை=அவ்விருவழியும்,
குறள் 1179;
=கண்,
குறள் 37,338.
இடைக்கண்=(இடை+க்+கண்) நடுவில்,
குறள் 473.
இடையூறு=(இடை+ய்+ஊறு) நடுவில் உறுவது/தடை,
குறள் 676
இட்டிது=(இட்டு+இ+து/இட்டி+து) சிறியது,
குறள் 478.
இட்டு=(இடு>இட்டு)போகட்டால்,
குறள் 1260.


இணர்=பலசுடர்
குறள் 308;
=கொத்தின்கண்
குறள் 650.
இணை=(இணை+இ- 'இ' விகுதி, புணர்ந்து கெட்டது.)இணைதலையுடையது/இரட்டை,
குறள் 1100.

இதன்

தொகு
இதன்=(இ+து+அன்) இதன்கண்/துயிலாது அழுதற்கண்,
குறள் 1176.
இதனால்= (இ+து+அன்+ஆல்) இக்கருவியால்,
குறள் 517.
இதனை=(இ+து+அன்+ஐ) இவ்வினையை/இந்தச்செயலை,
குறள் 517
இது=இஃது
குறள் 37,1173.
இந்திரன்=இமையவர்கோன்/தேவர்களின் தலைவன்,
குறள் 25.
இமைப்பின்=(இமை+ப்+ப்+இன்) கண்கொட்டினால்/கண்சிமிட்டினால்,
குறள் 775,1126,1129.
இமையாரின்=(இமை+ய்+ஆர்+இன்) கண்இமைக்காதவர்போல/விண்ணவர் போல,
குறள் 906.
இம்மை=(இ+ம்+மை)இப்பிறப்பு,
குறள் 98,1315;
=இவ்வுலக இன்பம்,
குறள் 1042.

இயக்கம்

தொகு
இயக்கம்=(இயங்கு/இயக்கு+அம்) அசைவு, போக்குவரவு,
குறள் 1020.
இயல்==நெறி/உலகநடை,
குறள் 572;
=உளவாம் முறை,
குறள் 342;
அங்கவியல் (அதிகாரம் 64 முதல் 95 முடிய)
அரசியல்= அரசனது இயல்பு (அதிகாரம் 39-63 முடிய)
இல்லறவியல் (அதி. 05-24 முடிய)
ஒழிபியல் (அதி. 96-108 முடிய)
களவியல் (அதி. 109-115)
கற்பியல் (அதி. 116-133)
துறவறவியல் (அதி. 25-38)
பாயிரவியல் (அதி. 01-04).
இயலார்=(இயல்+ஆர்) இயல்புடையவர்/பரத்தையராகிய பெண்கள்,
குறள் 1311.
இயலாள்=(இயல்+ஆள்)உரிமையின்கண் நிற்பவளது,
குறள் 147.
இயலான்=(இயல்+ஆன்)இயல்போடு,
குறள் 452.
இயல்பான்=(இயல்+பு+ஆன்) தன்மையால்,
குறள் 452.
இயல்பிற்று=(இயல்+பு+இன்>இற்+று?) தன்மையுடையது,
குறள் 333.
இயல்பினான்=(இயல்+பு+இன்+ஆன்)இயல்போடு/இலக்கணங்களோடு,
குறள் 47.
இயல்பு=(இயல்+பு) தன்மை/இலக்கணம்,
குறள் 161,344,382;
= தன்மை,
குறள் 41;
=இயற்கை,
குறள் 628,951,1006;
=அச்சம்,
குறள் 903.
இயல்புளி=(இயல்+பு+உளி)இயல்பால்/இலக்கணத்தால்,
குறள் 545.
இயல்வது=(இயல்+வ்+அ+து) இனிது நடப்பது
குறள் 734.
இயற்கு=(இயல்>இயற்+கு)இயல்பினை உடையாளுக்கு,
குறள் 1098.
இயற்கை=(இயல்>இயற்+கை)தன்மை
குறள் 370,374,637.
இயற்றல்=(இயல்>இயற்று+அல்)மேன்மேலுளவாக்கல்
குறள் 385.
இயற்றியார்க்கு=(இயற்று+இ+ய்+ஆர்+க்+கு) படைத்தவர்க்கு,
குறள் 760.
இயற்றியான்=(இயல்>இயற்று+இ+ய்+ஆன்)படைத்தவன்/கடவுள்,
குறள் 1062.
இயன்றது=(இயல்>இயன்+ற்+அ+து)நடந்தது,
குறள் 35.
இயன்றன=(இயல்>இயன்+ற்+அன்+அ)செய்யப்பட்டன,
குறள் 1106.
இயைந்த=(இயை+த்+ந்+த்+அ)உண்டாகிய தொடர்ச்சி,
குறள் 73;
=பொருந்தி நிற்கின்ற,
குறள் 576;
=கலந்தாற்போல் ஒற்றுமையுடைய,
குறள் 1323.
இயைந்தக்கால்=(இயை+த்+ந்+து+அ+க்+கால்)கூடினால்,
குறள் 489.
இயைந்து=(இயை+த்+ந்+த்+உ)பொருந்திவைத்து,
குறள் 576.
இயைபு=(இயை+பு)பொருத்தம்,
குறள் 573.
இயையாக்கடை=(இயை+ய்+ஆ+க்+கடை)முடியாதவழி,
குறள் 230.
இயையின்=(இயை+ய்+இன்) எய்தினால்,
குறள் 522.
இர=(இரத்தக்கார்) ஏற்க,
குறள் 1051.
இரக்க=(இர+க்+க)கெஞ்சிப் பெறுக,
குறள் 1051;
=இரக்கப்படுதல்=ஏற்க(ப்படுதல்),
குறள் 224.
இரங்கல்=(இரங்கு+அல்) ஏங்குதல்,
அதி.117, படர்மெலிந்திரங்கல்.
அதி.123, பொழுதுகண்டிரங்கல்.
இரங்கிவிடும்=(இரங்கு+இ+விடு+உம்) உறுதியாக ஏங்கும்,
குறள் 535.
இரங்குவ=(இரங்கு+வ்+அ) இரங்கத்தகும் செயல்கள்,
குறள் 655.
இரண்டின்=(இரண்டு+இன்) இரண்டினது,
குறள் 662,674,1022.
இரண்டு= இரண்டு,
குறள் 19,392,393,402,455,581,760,875,992,1247.
இரத்தல்=(இர+த்+தல்) ஏற்றல்
குறள் 1052,1054.
இரத்தலின்=(இர+த்+தல்+இன்) ஏற்பதைவிட,
குறள் 229.
இரந்தவர்=(இர+த்>ந்+த்+வ்+அர்)ஏற்றவரது
குறள் 224.
இரந்தவை=ஏற்கப்பட்ட பொருள்கள்,
குறள் 1052.
இரந்து=ஏற்று/பிச்சையெடுத்து
குறள் 780, 1059,1062,1063.
இரப்ப=கெஞ்சிநிற்க
குறள் 1212,1329.
இரப்பவர்=பிச்சையெடுப்பவர்/கெஞ்சிக்கேட்பவர்,
குறள் 1055,1070.
இரப்பன்=கெஞ்சிக்கேட்பேன்/பிச்சையெடுப்பேன்,
குறள் 1067.
இரப்பாரை=ஏற்பவரை,
குறள் 1067;
=ஏற்பவர்,
குறள் 1058.
இரப்பார்க்கு=ஏற்பவர்க்கு/பிச்சையெடுப்பவர்க்கு,
குறள் 232,1035.
இரப்பான்=ஏற்பவன்/பிச்சையெடுப்பவன்,
குறள் 1060.
இரப்பின்=கெஞ்சிக்கேட்கும்போது,
குறள் 1066,1067.
இரப்பு=ஏற்றல்/பிச்சையெடுத்தல்,
குறள் 1053
இரவன்மின்=பிச்சையெடுக்காதீர்கள்/ஏற்காதீர்கள்,
குறள் 1067.
இரவாமை=ஏலாதுஇருத்தல்/பிச்சையெடுக்காமை,
குறள் 1061.
இரவார்=ஏற்கமாட்டார்/யாசிக்கமாட்டார்,
குறள் 1035.
இரவின்=ஏற்றலைப்போல/யாசிப்பதைப்போல,
குறள் 1066.
இரவு=வேண்டுமெனக் கேட்டல்,
குறள் 552;
=ஏற்றல்,
குறள் 1064,1068,1069;
=ஏற்பதற்கு அஞ்சுதல்,
இரவச்சம்,அதிகாரம்:107.
இரா=இரவுப்பொழுது/கங்குல்
குறள் 1168, 1329;
=கங்குல்,
=குறள் 1169.
இராஅ=இருந்து,
குறள் 1301.
இரீஇ=இருக்கும்படி செய்து/ ஏமம் செய்ததுபோல்,
குறள் 660.
இரு=இரண்டாகிய,
குறள் 5,374,737,920,1091,1096;
=பெரியதான,
குறள் 990,999.
இருக்க=இருக்கக் கூடுமானால்,
குறள் 403.
இருக்கை=முடிந்த எல்லை,
குறள் 789.
இருட்டு=இருளையுடையது,
குறள் 913.
இருந்த=இருந்தேவந்த,
குறள் 340.
இருந்தது=தங்கியிருந்தது,
குறள் 1296.
இருந்தான்=இருந்தவனுக்கு/அமைச்சனுக்கு,
குறள் 638.
இருந்து=இருந்துகொண்டு,
குறள் 81,867,973,1107,1160,1243,1296,1320;
=செய்துவைத்து,
குறள் 530.
இருந்தேம்=இருந்தோம்,
குறள் 1312.
இருப்ப=இருக்குமாறு
குறள் 67;
=உளவாயிருக்க,
குறள் 100.
இருப்பர்=செல்லார்,
குறள் 485
=விரும்புவர்,
குறள் 804.
இருப்பாரை=இருப்பவரை
குறள் 1040.
இருப்பான்=இருப்பவன்,
குறள் 86.
இருப்பின்=இருந்தால்,
குறள் 1039.
இருமை=இரண்டனது,
குறள் 23.
இருவர்க்கு=தலைவன் தலைவியாகிய இருவர்க்கு,
குறள் 1180.
இருள்=இருட்டு,
குறள் 1186;
=மயக்கம்,
குறள் 5,675;
=இருட்டையுடைய நரகம்,
குறள் 243;
=பகையாகிய இருட்டு,
குறள் 753;
=இருள்நரகத்தில்,
குறள் 121;
=பிறப்பு,
குறள் 352.
இரையான்கண்=(இரையை)விழுங்குவான் இடத்தில்,
குறள் 946.
இல்=மனை,
குறள் 81,84,144,340,1107;
=இல்லாளோடு கூடிய வாழ்க்கை,
குறள் 45,46,47,48,49;
=இல்லாள்,
குறள் 59,143,145,146;
=குடி/வம்சம்,
குறள் 951,1026,1044;
=இல்லறம்,
குறள் 41,42,147;
=இல்லை,
குறள் 44,141,142,170,222,233,247,256,276,287,302,363,446,
460,462,472,479,526,536,538,577,583,621,644,713,759,768,
769,770,834,839,850,934,935,1001,1005,1021,1063,1065,
1066,1071,1137,1164,1188,1198,1202,1281,1293;
=உடைத்தன்று,
குறள் 52;
=உளவாகா,
குறள் 244,909;
=உண்டாகாது,
குறள் 285,910,1243;
=இல்லாத,
குறள் 9,174,194,196,218,273,400,853,912,1068,1158,1174,1191;
=இல்லாதது,
குறள் 368;
=இல்லாததாய்,
குறள் 94;

=இல்லாதவை,

குறள் 115;
=இல்லாமை,
குறள் 904,935;
ஐந்தாம்வேற்றுமை உருபு(ஒப்புப் பொருள்),
குறள் 9;
ஐந்தாம்வேற்றுமை உருபு(உறழ்பொருவுப் பொருளில்),
குறள் 531,772;
ஏதுப்பொருளில்,
குறள் 531;
ஏழாம்வேற்றுமை உருபு (இடப்பொருள்),
குறள் 46, 200, 569, 820, 913,1054,1092,1139,1260,1273,1297,1315,1328;
இல்வாழ்க்கை, அதிகாரம்-5;
பிறனில்விழையாமை, அதி.15;
வரைவின்மகளிர், அதி.92;
நன்றியில் செல்வம், அதி.101;
இல்லறவியல், அதி.5-24.
இல=உளவாகா,
குறள் 4;
=உடையஅல்ல,
குறள் 9,39,1100;
=இல்லாதவை,
குறள் 91,1178;
=இல்லாதவைகளை,
குறள் 191,192,193,195,197,640,696,697,956,998;
பயனிலசொல்லாமை, அதி.20.
இலக்கம்=குறி,
குறள் 627.
இலங்கு=விளங்கிய,
குறள் 410;
=விளங்காநின்ற,
குறள் 1262.
இலதனை=இல்லாததை,
குறள் 77,464,871.
இலது=இல்லாதது,
குறள் 586.
இலம்=நாம் வறியோம்,
குறள் 174,1040.
இலர்=இல்லாதார்,
குறள் 365,409,430,499,506,577,728,
778,906,954,1072,1194,1242,1325;
=இல்லாதவர்,
குறள் 114,270.
இலவர்=இல்லாதவர்,
குறள் 607.
இலவர்க்கு=இல்லாதவர்க்கு,
குறள் 79,604.
இலன்=இல்லாதவன்,
குறள் 34,193;
=அவன்வறியவன்,
குறள் 205;
=யான் வறியேன்,
குறள் 205,223;
=இல்லாதான் (ஆவன்),
குறள் 341,414,566,628,629,647,
862,863,864,865,868,1025.
இலா=இல்லாத
குறள் 200,239,94,610,731,869,919,1053.
இலாஅதவர்=இல்லாதவர்,
குறள் 640.
இலாக்கடை= இல்லாவிடில்,
குறள் 1059.
இலாத=இல்லாத,
குறள் 200,239,594,610,731,869,919,1053.
இலாதவர்=இல்லாதவர்,
குறள் 598;
=இல்லாதாரோடு,
குறள் 890.
இலாதார்=இல்லாதவர்,
குறள் 140.
இலாதான்=இல்லாதவன்,
குறள் 1006.
இலார்=இல்லாதவர்,
குறள் 72,236,2,430,572,843,1055;
=இல்லாதவரது,
குறள் 800,811,812;
=இலராவார்,
குறள் 427.
இலார்க்கு=இல்லாதவருக்கு,
குறள் 80,449.
இலாள்=இல்லாதவள்,
குறள் 56.
இலான்=இல்லாதவன்,
குறள் 625, 842, 847,1000;
=இல்லாதவனது,
குறள் 4,617,
இலானும்=இல்லையென்றாலும்,
குறள் 448.
இலான்கண்=இல்லாதவனிடத்தில்,
குறள் 135.
இலேன்=நான் இல்லை,
குறள்1226.
இலோர்க்கு=இல்லாதவர்க்கு,
குறள் 59.
இல்லது=இல்லாதது,
குறள் 119,735,
இல்லவர்=இல்லாதவர்,
குறள் 577,917.
இல்லவள்=மனைவி,
குறள் 53.
இல்லா=இல்லாத,
குறள் 78,853.
இல்லாக்கால்=இல்லாதபோது,
குறள் 1064.
இல்லாத=இல்லாத,
குறள் 198,412,448,573,574,740,945.
இல்லாதவர்=இலாதவர்,
குறள் 997.
இல்லாதவர்க்கு=இலாதார்க்கு,
குறள் 354.
இல்லாதாள்=இல்லாதவள்,
குறள் 402.
இல்லாதான்=இல்லாதவனது,
குறள் 7,523,614.
இல்லாயின்=இல்லாவிடில்,
குறள் 49,52,769,1058,1306.
இல்லார்=இல்லாதவர்,
குறள் 170,378,395,591,600,1050,1140;
=இல்லாதவரது,
குறள் 431,1020.
இல்லாரை=இல்லாதவரை,
குறள் 1056;
=இல்லாரை,
குறள் 752.
இல்லாரோடு=இறந்தாரோடு,
குறள் 730.
இல்லார்கண்=இல்லாதவரிடத்தில்,
குறள் 750.
இல்லார்க்கு=இல்லாதவருக்கு,
குறள் 247,368,1005.
இல்லாவழி=பெறாதபோது,
குறள் 1308.
இல்லாள்=மனைவியது,
குறள் 906.
இல்லாளின்=மனைவி போல,
குறள் 1039.
இல்லாளை=மனைவியை,
குறள் 905.
இல்லாள்கண்=மனைவியிடத்தில்,
குறள் 52,903.
இல்லான்=இல்லாதவனது,
குறள் 407.
இல்லெனினும்=இல்லையென்றாலும்,
குறள் 222,768.
இல்லை=இல்லை,
குறள் 32,59,61,87,110,122,135,162,170,230,231,243,
245,147,252,296,300,336,363,429,449,456,460,478,533,
534,537,570,710,751,791,842,945ர951,976,1028,1036,
1123,1131,1168,1216,1321.
இல்வழி=இல்லாதபோது,
குறள் 770,1224.

இவக்காண்

தொகு
இவக்காண்=இங்கேயன்றோ,
குறள் 1185.
இவர்=இங்கேயுள்ளவர்,
குறள் 790.
இவர்தந்து=மேற்கொண்டு,
குறள் 1182.
இவள்= இம்மகள்,
குறள் 1104,1188;
=இவளது,
குறள் 1086,1091,1112.
இவளை= இம்மகளை,
குறள் 1188.
இவறல்=வேண்டும்வழிப் பொருள்கொடாமை/உலோபம்,
குறள் 432.
இவறன்மை=குணங்களையெல்லாம் கீழ்ப்படுத்து
(லோபமாகிய) தான் மேற்படவல்ல இயல்பு
குறள் 438.
இவறி=விரும்பி,
குறள் 1003.
இவறியார்=கைவிடாதவர்,
குறள் 935.
இவறியான்=பற்றுள்ளம் செய்தவனது,
குறள் 437.
இவறும்=பற்றுள்ளம் செய்யும்,
குறள் 1002.
இவன்=இம்மகன்,
குறள் 517;
=இவனது,
குறள் 70.
இவை=இப்பொருள்கள்,
குறள் 360,581,1109,1244.
இழக்கும்=இழப்பான்,
குறள் 554;
=இழந்துபோம்,
குறள் 28;
=இழத்தற்குக் காரணமாகிய,
குறள் 463;
=இழந்துவறியராம்,
குறள் 932.
இழத்தும்=நாம் இழப்போம்,
குறள் 1250.
இழத்தொறூஉம்=இழக்கும்போதெல்லாம்,
குறள் 940.
இழந்தவன்=(ஆடை)குலைந்தவனுக்கு,
குறள் 788.
இழந்து=கெட்டு,
குறள் 1144.
இழந்தேம்=நாம் இழந்தோம்,
குறள் 593.
இழப்பர்=நீங்கப்பெறுவர்,
குறள் 494,921.
இழப்பின்=தொலைந்தால்,
குறள் 659,812,
இழவு=இழத்தல்/இழத்தற்குக்காரணமாகிய,
குறள் 372.
இழாய்=அணி அணிந்தவளே,
குறள் 1262.
இழிந்த=தாழ்ந்த,
குறள் 133;
= வீழ்ந்த,
குறள் 964.
இழிந்தக்கடை=தாழ்ந்தபோது,
குறள் 964.
இழிவு=குறைவு,
குறள் 946.
இழுக்கத்தின்=தவறுதலால்,
குறள் 136, 137.
இழுக்கம்=பிழை,
குறள் 133,808.
இழுக்கல்=வழுக்குதல்,
குறள் 415.
இழுக்கா=தவறாத,
குறள் 48,384.
=தவறாமல்/கடிந்து,
குறள் 35.
இழுக்காது=வழுவாது ஒழுகி,
குறள் 952.
இழுக்காமை=தவறாமை/மறவாத குணம்,
குறள் 536.
இழுக்கார்=வழுவார்,
குறள் 952.
இழுக்கியான்=மறந்து இருந்தவன்,
குறள் 535.
இழுக்கு=தவறுதல்/குற்றம்,
குறள் 164,467,716,893;
=இன்னாமை,
குறள் 911;
=குற்றத்தின்கண்,
குறள் 127.
இழை=அணிகலம்,
குறள் 1102,1110,1114,1124,1329.
இழைத்தது=வகுத்தது/கூறின வஞ்சினம்,
குறள் 779.
இழைத்து=நுணுகி ஆராய்ந்து,/முறையாக நுண்ணிதாக,
குறள் 417;
=செய்து,
குறள் 530.
இழைந்து=உள்நெகிழ்ந்து,
குறள் 1177.
இழையார்=அணிஅணிந்தவர்,
குறள் 919.
இளி=இழிவு/அவமானம்,
குறள் 970;
=மாசு,
குறள் 971.
இளித்தக்க=அவமானமான,
குறள் 1288.
இளிவந்த=இழிவான வினைகள்,
குறள் 654;
=இழிவு வருவதற்கு ஏதுவாகிய,
குறள் 1044.
இளிவந்தது=இழிவானது,
குறள் 1066.
இளிவு=இகழ்ச்சி,
குறள் 464, 988, 1298.
இளைது=இளமையானது,
குறள் 879.
இளையர்=இளமையானவர்,
குறள் 698.
இறந்த=நீங்கிய,
குறள் 432;
=அளவுமீறிய,
குறள் 531;
=மறைந்துபோன,
குறள் 1275.
இறந்தார்=செத்தவர்,
குறள் 310;
=மிக்கவர்,
குறள் 310;
=நெறியைக் கடந்தவரது,
குறள் 159.
இறந்தாரை=செத்தவரை,
குறள் 22.
இறந்தார்க்கு=செத்தவருக்கு,
குறள் 42.
இறந்து=கடந்து,
குறள் 283,476,1138,1254;
=கடந்துபுகுந்து,
குறள் 586;
=அளவுமிகுந்து,
குறள் 900;
=ஒழிந்து,
குறள் 971.
இறப்பான்=நெறிகடந்து சேர்பவன்,
குறள் 145.
இறப்பான்கண்=நெறிகடந்து சேர்பவனிடத்தில்,
குறள் 146.
இறப்பினை=மிகையை/அவமதிப்புச் செய்தலை/சொல்லுதலை,
குறள் 152.
இறப்பு=மிகை/தருக்கு,
குறள் 977.
இறல்=இறுதி,
குறள் 180;
=சாதல்,
குறள் 885.
இறவாநின்ற=கழல்கின்ற,
குறள் 1157.
இறு=அழியும்,
குறள் 488.
இறுதி=முடிவு,
குறள் 476,690.
இறும்=முறியும்,
குறள் 475.
இறை=கடவுள்,
குறள் 388;
=வேந்தன்,
குறள் 547, 564;
=தண்டற்பொருள்,
குறள் 733;
=நடுவுநிலைமை,
குறள் 541;
=மணிக்கட்டு,
குறள் 1157;
இறைமாட்சி,அதிகாரம்-39.
இறைக்கு=வேந்தனுக்கு,
குறள் 432,436.
இறைஞ்சினாள்=தலைகவிழ்ந்தாள்,
குறள் 1093.
இறைப்பவர்க்கு=நீர்இறைப்பவர்களுக்கு,
குறள் 1161.
இறைவற்கு=மன்னவனுக்கு,
குறள் 690,733.
இறைவன்=கடவுளது,
குறள் 5,10;
=மன்னன்,
குறள் 778.
இன்=இனிய, நல்ல,
குறள் 91,92,93,94,95,98,99,224,
327,387,525,875,911,953,1198,1209;
=5-ஆம் வேற்றுமை உருபு(நீங்கல்பொருள்)
குறள் 16,97,124,136,162,170,194,258,
330,341,353,495,502,716,810,955,964,
1116,1126,1198;
=ஒப்புப்பொருள்,
குறள் 142,159,213,230,276,277,380,
526,612,707,759,781,791,834,883,906,
934,965,1021,1039,1041,1063,1066,
1103,1137,1198,1323;
=உறழ்பொருவுப்பொருள்
குறள் 31,32,48,54,64,68,69,92,102,103,122,
124,131,143,152,160,182,183,192,202,225,
229,236,250,259,295,300,302,304,353,408,
444,450,460,531,551,558,603,639,644,657,
679,729,811,814,815,816,817,873,907,926,
967,1038,1065,1072,1074,1111,1158,1166,
1169,1201,1277,1289,1290,1314,1326;
=ஏதுப்பொருள்
குறள் 46,136,137,164,341,468,473,477,
530,703,705,725,824,825,911,915,917,
975,1106,1140,1290,1311,1322;
=சாரியை
குறள் 856,1022,1053,1105,1120,
1123,1165,1307;
இன=இப்பேர்ப்பட்ட,
குறள் 698;
=சுற்றத்தினது,
குறள் 457,458,459.
இனத்தன்=சேர்க்கையுடையவன்,
குறள் 446.
இனத்தான்=சுற்றத்தால்,
குறள் 453.
இனத்தின்=இனத்தைவிட,
குறள் 460.
இனத்து=இனத்தினது
குறள் 452;
=இனத்தின்கண்,
குறள் 454;
=இனத்தின்மேல்,
குறள் 568.
இனத்தொடு=இனத்துடன்,
குறள் 462.
இனம்=குழு,
குறள் 306,451,455,456;
=உற்றார்,
குறள் 822;
=சுற்றம்,
குறள் 884;
சி்ற்றினஞ்சேராமை,அதி.46.
இனன்=சுற்றம்,
குறள் 793;
=துணை,
குறள் 868;
=தோழியர்,
குறள் 1158.
இனி=இப்பொழுது,
குறள் 1083,1294.
இனிது=நன்றானது,
குறள் 64,66,68,181,230,772,811,839,
856,865,1103,1108,1145,1176,1196,
1201,1202,1215,1309,1326;
=நன்றானதாக,
குறள் 93,648;
=இன்பம்,
குறள் 99.
இனிய=இனிமையானவை,
குறள் 100,987;
=இனியவை,
குறள் 1199;
=இனிமையானவையாக,
குறள் 96,824.
இனியது=இன்பமானது,
குறள் 1065.
இனியவை=விருப்பமானவை,
இனியவைகூறல், அதி.10.
இனியார்=காதலர்,
குறள்1158.
இனை=இன்ன,
குறள் 87.
இனையர்=இத்துணையர்,
குறள் 790.
இன்கண்=இன்பம்,
குறள் 1152.
இன்பத்துள்=மகிழ்ச்சியுள்,
குறள் 629,854.
இன்பம்=மகிழ்ச்சி,
குறள் 39,65,98,156,173,228,352,
369,501,615,628,629,630,669,738,
754,854,869,946,1052,1166,1330.
இன்பு=மகிழ்ச்சி,
குறள் 75,94,399.
இன்மை=இல்லாதிருத்தல்,குறைவு,
குறள் 119,320,344,364,371,513,
557,577,616,618,645,738,833,
841,851,903,958,979,1019,1209,1276;
=வறுமை,
குறள் 89,153,616,988,1041,1042,1044,1063;
=இல்லாமை,
குறள் 503;
மடியின்மை,அதி.61.
இன்மையின்=இல்லாமையைவிட,
குறள் 558;
=வறுமைபோல,
குறள் 1041.
இன்மையள்=வறுமையுள்,
குறள் 153;
=இல்லாமைகளுள்,
குறள் 841.
இன்றி=இல்லாமல்,
குறள் 112,166,171,401,523,529,
566,620,682,754,789,947,961,
1042,1069,1253.
இன்று=இல்லை,
குறள் 83,354,740,875,904,955,966,1090,1252;
=இல்லாமல்,
குறள் 13,20,184,764;
=இன்றைக்கு,
குறள் 336,1048,1133,1262.
இன்றேல்=இல்லையாயின்/இல்லாவிடில்,
குறள் 556,573,575,996,1014,1144.
இன்னம்=நாம் இத்தன்மையோம்,
குறள் 790.
இன்னா=தீயவை/தீங்குகள்,
குறள் 109,308,311,312,314,316,
318,319,852,881,894,987,1288;
=தீய,
குறள் 35,159,163,240,564,565,824,857;
இன்னாசெய்யாமை, அதி.32.
இன்னாத=தீயவை,
குறள் 100,313,860,881.
இன்னாதது=தீயது,
குறள் 230,1041.
இன்னாது=இனிதன்று/தீது,
குறள் 224,229,408,558,
819,923,995,1158,1196.
இன்னாமை=தீங்கு,
குறள் 318,630.
இன்னான்=இப்படிப்பட்டவன்,
குறள் 453.
இன்னும்=மற்றும்/பின்னும்,
குறள் 1250;
=இவ்வெல்லையினும்,
குறள் 1263.



அக இணைப்பான்கள்

தொகு
/இட/இதன்/இய/இர/இல்/இவ/இளி/இன்

பார்க்க:

தொகு

திருக்குறள் அகரமுதலி

திருக்குறள்அகரமுதலி ஆகாரவரிசை

திருக்குறள்அகரமுதலி ஈகாரவரிசை

திருக்குறள்அகரமுதலி உகரவரிசை

திருக்குறள்அகரமுதலி ஊகாரவரிசை

திருக்குறள்அகரமுதலி எகரவரிசை

திருக்குறள்அகரமுதலி ஏகாரவரிசை

திருக்குறள்அகரமுதலி ஐகாரவரிசை

திருக்குறள்அகரமுதலி ஒகரவரிசை

திருக்குறள்அகரமுதலி ஓகாரவரிசை

திருக்குறள்அகரமுதலி ககரவரிசை