திருக்குறள்அகரமுதலி உகரவரிசை
பார்க்க:
திருக்குறள் அகரமுதலி உகரவரிசை
தொகுஉகரம்
தொகு- உ
- =புறம்
குறள் 620
- உகாஅமை
- =உமிழாமல், வெளிப்படுத்தாமல்
குறள் 585
- உக்க
- =சிந்திய
குறள் 720
- உக்கக்கால்
- =இறந்தபோது
குறள் 1270.
- உஞற்று
- =முயற்சி
குறள் 604, 607
- உஞற்றுபவர்
- =(இடைவிடாமல்)முயல்பவர்
குறள் 620.
- உஞற்றுபவர்க்கு
- =முயல்பவருக்கு
குறள் 1024.
உடம்பாடு
தொகு- உடம்பாடு
- =ஒப்புதல், மனம்பொருந்துதல்
குறள் 890.
- உடம்பின்
- =உடம்புடன்
குறள் 330.
- உடம்பின்
- =உடம்பினின்றும், உடம்புடன்
குறள் 330.
- உடம்பினகத்து
- =உடம்பின்கண்
குறள் 1163.
- உடம்பினுள்
- =உடம்புகளுள்
குறள் 340
- உடம்பு
- =யாக்கை, உடல்
குறள் 943, 1029, 1132;
- =யாக்கைகள்
குறள் 80, 345, 627.
- உடம்பொடு
- =உடம்புடன்
குறள் 1122.
- உடம்போடு
- =உடம்புடன்
குறள் 33.
- உடல்
- =உடம்பு, யாக்கை, மெய்
குறள் 253.
- உடற்கு
- =மெய்க்கு
குறள் 65.
- உடற்றுபவர்
- =முடியாதாக நடிப்பவர்,
(ஒருசெயலை) முடியாமல்செய்பவர்
குறள் 818.
- உடற்றும்
- =வருத்தும்
குறள் 13.
- உடன்
- =ஒருங்கே, ஓடு(மூன்றாம் வே.உருபு)
குறள் 309, 589, 632, 890.
- உடன்று
- = வெகுண்டு, கோபித்து, சினந்து
குறள்
- உடுக்கை
- = உடை, ஆடை
குறள் 788.
- உடுப்பது
- = உடுத்திக்கொள்வது
குறள் 166, 1079.
- உடை
- = உடுக்கப்படுவது
குறள் 939, 1012;
- = உடைய, உடைமையாகப் பூண்ட
குறள் 62, 389, 415, 473,
- 907, 1010, 1034.
- உடைக்கும்
- = 1.முறிக்கும்
குறள் 1251;
- = 2.உடைக்கும்படி, நெரிக்க
குறள் 1077;
- = 3.கெடுக்கும், அழிக்கும்
குறள் 1258, 1324.
- உடைத்தாயின்
- = உடையதானால், மேற்கொண்டால்
குறள் 44, 45.
- உடைத்து
- = உரிமையாகக்கொண்டது, உடையது.
குறள் 48, 112, 126, 220, 221, 277,
- 336, 353, 398, 458, 459, 565, 578,
- 611, 624, 667, 746, 770, 780, 868,
- 907, 925, 1010, 1018, 1053, 1057,
- 1082, 1085, 1152, 1173, 1275, 1276
- 1280, 1325.
- உடைந்தது
- =அழிந்துவிட்டது,
- குறள் 1088.
- உடைந்து
- =முறிந்து,
- குறள் 1270.
- உடைமை
- =உரிமை,
- குறள் 68,74,133,154,228,344,383,558,592,
681,688,838,960,991,992,1012,1014;
- குறள் 68,74,133,154,228,344,383,558,592,
- =உடையராதல்,
- குறள் 641;
- அன்புடைமை, அதி.8,
- அடக்கமுடைமை, அதி.13,
- ஒழுக்கமுடைமை, அதி.14,
- பொறையுடைமை, அதி.16,
- அருளுடைமை, அதி.25,
- ஊக்கமுடைமை, அதி.60,
- ஆள்வினையுடைமை, அதி.62,
- அறிவுடைமை, அதி.43,
- பண்புடைமை, அதி.100,
- நாணுடைமை, அதி.102.
- உடைமையுள்
=பொருளுடைய காலத்தில்,
- குறள் 89.
- உடைய
=உரிமையாகக் கொண்டவை,
- குறள் 41,975,1299,1300;
=உடையவை,
- குறள் 200.
- உடையது
=உடைமையாகக்கொண்டது,
- குறள் 384,591,742,746,1021.
- உடையம்
=பெற்றுள்ளோம்,
- குறள் 844.
- உடையர்
=பெற்றுள்ளார்,
- குறள் 159,1072;
=பெற்றுள்ளவர்,
- குறள் 285,393,458,591,900.
- உடையரேனும்
=உடையராயினும்,
- குறள் 430.
- உடையவர்
=உடையராயினவர்/பெற்றுள்ளவர்,
- குறள் 975.
- உடையவர்க்கு
=பெற்றுள்ளவர்க்கு,
- குறள் 139.
- உடையவன்
=பெற்றுள்ளவன்,
- குறள் 112.
- உடையள்
=உடையவள்,
- குறள் 51.
- உடையன்
=உடையவன்,
- குறள் 95.
- உடையாட்கு
=உடையளாயவளுக்கு/பெற்றுள்ளவளுக்கு,
- குறள் 1089.
- உடையார்
=உடைமையாகக்கொண்டவர்,
- குறள் 72, 179,195,404,413,415,427,
441,463,526,577,593,606,816,970,994,996;
=உடைமையாகக்கொண்டார்
- குறள் 430;
=செல்வர்,
- குறள் 395.
- உடையார்கண்
=உடையாரிடத்தில்,
- குறள் 1153.
- உடையார்க்கு
=உடையவருக்கு,
- குறள் 165,262,534,636,910.
- உடையார்முன்
=உடையார்முன்னால்,
- குறள் 718.
- உடையாளர்
=உடைய மக்கள்,
- குறள் 783.
- உடையாளன்
=உடையஅரசன்,
- குறள் 874.
- உடையான்
=உடைமையாகக்கொண்டவன்/பெற்றுள்ளவன்,
- குறள் 219,381,390,486,502,513,519,594,622,684.
- உடையானை
=உரிமைபூண்டவனை,
- குறள் 167.
- உடையான்கண்
=உரிமைபூண்டவனிடத்தில்,
- குறள் 135,216,223.
- உடையேம்
=அடைந்துள்ளோம்/பெற்றுள்ளோம்,
- குறள் 1250.
- உடையேன்
=உடைத்தாயிருக்கிறேன்,
- குறள் 1133;
=உடைத்தாயிருக்கிற நான்,
- குறள் 1254.
- உட்கப்படாஅர்
=அஞ்சப்படார்,
- குறள் 921.
- உட்கும்
=அஞ்சுதற்குக்காரணமாகிய,
- குறள் 1088.
உண்
தொகு- உண்
=உண்ட,
- குறள் 1091,1113,1172,1174,1212,1271.
- உணக்கின்
=காயவிட்டால்,
- குறள் 1037.
- உணங்க
=மெலியாநிற்கவும்,
- குறள் 1310.
- உணர
=அறியும்வண்ணம்,
- குறள் 650.
- உணரப்படும்
=அறியப்படும்,
- குறள் 575,826,1096.
- உணரல்
=தெரிதல்,
- குறள் 11.
- உணரா
=தெரியாத,
- குறள் 420;
=(உடன்பாட்டு வினையெச்சம்) உணர்ந்து
- குறள் 1172;
=(எதிர்மறை வினையெச்சம்) அறியாமல், அறியாது, உணராது
- குறள் 1172;
=(எதிர்மறை முற்றெச்சம்)உணராவாய்
- குறள் 1172;
=தெரியமாட்டா,
- குறள் 705.
- உணராமை
=அறியாமல்,
- குறள் 589;
=உடலுணர்த்திக் கூடாதுஒழிதல்,
- குறள் 1304.
- உணராய்
- =நீங்கமாட்டாய்
- குறள் 1246.
- உணரின்
- =தெரிந்துகொண்டால்,
- குறள் 357.
- உணரும்
- =கருதும்,
- குறள் 331;
- =அறியும்,
- குறள் 351.
- உணர்க
- =தெரிக,
- குறள் 805.
- உணர்ச்சி
- =பொதுஉணர்வு,
- குறள் 453;
- =ஒத்தவுணர்வு,
- குறள் 785.
- உணர்ச்சியுள்
- =மனத்தின்கண்,
- குறள் 976.
- உணர்தல்
- =ஊடல்நீங்கல்,
- குறள் 1109;
- மெய்யுணர்தல், அதி.36.
- உணர்த்தின்
- =ஊடல்தணிப்பின்,
- குறள் 1319.
- உணர்த்தும்
- =புலவியைநீக்கும்,
- குறள் 1246.
- உணர்ந்த
- =அறிந்தன,
- குறள் 1277.
- உணர்ந்தவை
- =அறிந்தவை,
- குறள் 316.
- உணர்ந்து
- =தெரிந்து,
- குறள் 359,417,516,712,834,1046.
- உணர்வது
- =அறிவினை,
- குறள் 718.
- உணர்வார்
- =அறிவார்,
- குறள் 257,334,708,709,716.
- உணர்வாரை
- =அறிவாரை,
- குறள் 703.
- உணர்வானை
- =அறிபவனை,
- குறள் 702.
- உணர்வின்
- =அறிவினையுடைய,
- குறள் 420.
- உணர்வு
- =அறிவு,
- குறள் 354.
- உணல்
- =உண்ணுதல்,
- குறள் 229.
- உணலி்ன்
- =உண்ணுவதைவிட,
- குறள் 1326.
- உணவு
- =சாப்பாடு,
- குறள் 412.
- உணவின்
- =உணவு,
- குறள் 413.
- உணி
- =உண்ணப்படுவது/குளம்,
- குறள் 215.
- உணில்
- =உண்பதானால்,
- குறள் 922.
- உணின்
- =உண்டால்,
- குறள் 942.
- உண்க
- =அயில்க/உண்ணுக,
- குறள் 922,943.
- உண்ட
- =அயின்ற,
- குறள் 930.
- உண்டது
- =உண்ணப்பட்டது,
- குறள் 1326.
- உண்டல்
- =உண்ணுதல்,
- குறள் 82,1128,1145.
- உண்டாயின்
- =உண்டானால்,
- குறள் 128,1005.
- உண்டார்
- =உண்டவர்கள்,
- குறள் 253.
- உண்டார்கண்
- =உண்டவரிடத்தில்,
- குறள் 1090.
- உண்டி
- =உணவு,
- குறள் 945.
- உண்டு
- =உளது,
- குறள் 54,71,89,110,190,315,342,469,571,707,
- 757,758,796,850,896,932,974,988,996,1059,
- 1075,1098,1117,1154,1164,1213,1214,1245,
- 1260,1273,1274,1281,1307,1323;
- =உண்டாயிராநின்றது,
- குறள் 1271;
- =அயின்று,
- குறள் 322,580,1033,1101,1107.
- உண்டேல்
- =இருப்பின்,
- குறள் 368,1075,1151.
உண்ண
தொகு- உண்ண
- =தின்ன,
- குறள் 255.
- உண்ணலின்
- =உண்ணுதற்கு,
- குறள் 1065.
- உண்ணற்க
- =அருந்தாதுஒழிக/குடிக்காதே,
- குறள் 922.
- உண்ணா
- =அயிலாத,
- குறள் 930.
- உண்ணாது
- =ஊனைத்தவிர்ந்து,
- குறள் 160.
- உண்ணாமை
- =உண்ணாதிருத்தல்,
- குறள் 255,257,259;
- கள்ளுண்ணாமை, அதி.93.
- உண்ணார்
- =உண்ணமாட்டார்,
- குறள் 258.
- உண்ணான்
- =நுகராதவன்,
- குறள் 1001.
- உண்ணின்
- =உண்டால்,
- குறள் 945,947.
- உண்ணும்
- =தின்னும்,
- குறள் 527;
- =கவரும்/போக்கும்,
- குறள் 326,1084,1221.
- உண்பது
- =உண்ணப்படுவது,
- குறள் 166;
- =உண்டல்,
- குறள் 1079.
- உண்பர்
- =துய்ப்பர்/நோக்குவர்,
- குறள் 1311.
- உண்பவர்
- =பருகுபவர்,
- குறள் 926.
- உண்பார்
- =பருகுபவர்,
- குறள் 926.
- உண்பான்
- =தின்பவன்,
- குறள் 251.
- உண்பான்கண்
- =தின்பவனிடத்தில்,
- குறள் 946.
- உண்மை
- =உள்ளதாந்தன்மை/ஊழான்ஆகியபேதைமை(அறிவு),
- குறள் 373;
- =உளராதல்,
- குறள் 572;
- =உள்ளதன்மை,
- குறள் 1212.
- உண்மையான்
- =உண்டாகலான்,
- குறள் 571;
- =உளராதல் தன்மையால்,
- குறள் 1055;
- =நிகழ்தலால்,
- குறள் 1153.
உதவி
தொகு- உதவி
- =நன்றி,
- குறள் 70,103,105.
- உதவிக்கு
- =நன்றிக்கு,
- குறள் 101.
- உதவும்
- =உதவிக் காக்கும்,
- குறள் 746.
- உப்பிற்கு
- =உப்புக்கு,
- குறள் 1050.
- உப்பு
- =சுவை/இனிமை,
- குறள் 802,1328;
- =உப்பு,
- குறள் 1302.
- உம்
- அசைநிலை உம்மை,
- குறள் 110,896...;
- இழிவு சிறப்பும்மை
- குறள் 29,202...;
- இறந்தது தழீஇய எச்சவும்மை,
- குறள் 12,31...;
- உயர்வு சிறப்பும்மை,
- குறள் 17,18...;
- எண்ணும்மை,
- 15,42...;
- எதிரது தழீஇய எச்சவும்மை,
- 32,120...;
- முற்றும்மை,
- 5,19... .
- உயர்
- =உயர்ந்த,
- குறள் 272.
- உயர்ந்த
- =ஓங்கிய,
- குறள் 233;
- =எய்தற்கரிய,
- குறள் 346.
- உயர்ந்து
- =ஓங்கி,
- குறள் 957.
- உயர்வு
- =உயர்ச்சி,
- குறள் 135,595,596,743;
- =பணியாமை,
- குறள் 963.
- உயல்
- =ஒழிதல்,
- குறள் 40;
- =உளதாதல்,
- குறள் 437;
- =தப்புதல்,
- குறள் 1154,1212.
- உயிர்
- =ஆன்மா,
- குறள் 78,80,183,214,244,255,259,260,
- 268,290,322,326,327,330,334,501,778,
- 848,940,969,1013,1017,1020,1062,1070,
- 1084,1106,1132,1141,1163,1168,1209,
- 1213,1221,1230,1298.
- உயிரார்
- =உயிரையுடையவர்,
- குறள் 777.
- உயிரிடை
- =உயிரினிடத்தில்,
- குறள் 338,1122.
- உயிரின்
- =உயிரைக்காட்டிலும்,
- குறள் 131;
- =உயிரினின்றும்,
- குறள் 258.
- உயிரை
- =உயிரை,
- குறள் 1017.
- உயிர்க்கு
- =உயிருக்கு,
- குறள் 30,31,68,73,122,190,231,
- 261,318,340,361,392,457,476,
- 557,851,945,972,1012,1124.
- உயிர்த்து
- =மோந்து,
- குறள் 1101.
- உயிர்ப்ப
- =மூச்சுவிட,
- குறள் 763,880.
- உய்க்கிற்பின்
- =துய்க்கவல்லனாயின்,
- குறள் 440.
- உய்க்கும்
- =செலுத்தும்,
- குறள் 121,1134;
- =கொண்டுசெலுத்தும்,
- குறள் 943.
- உய்த்தல்
- =ஈர்த்துப்போதல்/இழுத்துக்கொண்டுபோதல்,
- குறள் 1287.
- உய்த்து
- =செலுத்தி,
- குறள் 787;
- =கொண்டுபோய்
- குறள் 376,1076.
- உய்த்துவிடும்
- = திண்ணமாகச் செலுத்தும்,
- குறள் 121,168.
- உய்ப்பது
- =செலுத்துவது,
- குறள் 422.
- உய்யா
- = கடக்கமுடியாத,
- குறள் 313.
- உய்யாது
- = செலுத்தாது,
- குறள் 966.
- உய்யார்
- = தப்பமாட்டார்,
- குறள் 896,900.
- உய்வர்
- = தப்புவர்,
- குறள் 207.
- உய்வு
- = நீங்கும்வாயில்,
- குறள் 110;
- = தப்புதல்,
- குறள் 896;
- = ஒழிவு,
- குறள் 1174.
உரம்
தொகு- உரம்
- = திண்ணிய அறிவு,
- குறள் 600;
- = வலிமை,
- குறள் 888.
- உரவோர்
- = திண்மையுடையவர்,
- குறள் 136;
- = ஊக்கமுடையவர்,
- குறள் 597.
- உரன்
- = திண்மை,
- குறள் 24;
- = வேறல்/வெல்லுதல்,
- குறள் 1263.
- உரிமை
- =உரியனாந்தன்மை,
- குறள் 518,578.
- உரியர்
- = உரிமையுடையார்
- குறள் 72,180.
- உரியன்
- = ஏற்றநிலையினன்,
- குறள் 518.
- உரியார்
- = உரிமையுடையவர்,
- குறள் 149.
- உரியாள்
- = உரிமையுடையவள்,
- குறள் 149.
- உரு
- = தோற்றப்பொலிவு,
- குறள் 684.
- உருகும்
- =கனிந்துஇளகும்,
- குறள் 1069.
- உருவம்
- =தோற்றம்,
- குறள் 273.
- உருவு
- = வடிவின்சிறுமை,
- குறள் 667.
- உருவொடு
- =வடிவுடன்,
- குறள் 585.
- உருள்
- = சுழல்கின்ற,
- குறள் 667;
- = புரள்கின்ற,
- குறள் 933.
- உரை
- = நீ சொல்/சொல்வாய்,
- குறள் 115.
- = ஒருசொல்,
- குறள் 193,
- = புகழ்,
- குறள் 581.
- உரைக்கல்
- = சொல்லுதல்,
- குறள் 1271.
- உரைக்கலான்
- =சொல்லுதலால்,
- குறள் 1076.
- உரைக்கு
- =சொல்லுவேன்,
- குறள் 1181.
- உரைக்கும்
- = சொல்லும்,(எதிர்காலப் பெயரெச்சம்)
- குறள் 193,564,912;
- =உணர்த்தும்,
- குறள் 1156;
- =சொல்லும்(ஒன்.எதிர்கால வினைமுற்று)
- குறள் 709,743,1235.
- உரைத்தல்
- = சொல்லுதல்,
- குறள் 1162;
- நலம்புனைந்துரைத்தல், அதி.112.
- காதற்சிறப்புரைத்தல், அதி.113.
- நாணுத்துறவுரைத்தல், அதி.114.
- கனவுநிலையுரைத்தல், அதி.122.
- உரைத்து
- =சொல்லி,
- குறள் 834,1237.
- உரைப்பது
- = சொல்லல்,
- குறள் 1184.
- உரைப்பவை
- = சொல்பவை,
- குறள் 232.
- உரைப்பாய்
- = சொல்லத்தொடங்குவாய்,
- குறள் 1200.
- உரைப்பார்
- = சொல்லுபவர்,
- குறள் 232.
- உரைப்பார்க்கு
- = சொல்லுபவர்க்கு,
- குறள் 682.
- உரைப்பான்
- = சொல்லுபவன்,
- குறள் 189,681,683,687,688,689.
- உரையாதார்
- = உரைக்கமாட்டாதவர்,
- குறள் 650.
- உரையாமை
- = சொல்லாதிருத்தல்,
- குறள் 223.
உலகத்தார்
தொகு- உலகத்தார்
- = உலகத்திலுள்ள பெரியோர்,
- குறள் 294,850.
- உலகத்தார்க்கு
- = உலகோருக்கு,
- குறள் 1032.
- உலகத்து
- = உலகத்தில்,
- குறள் 213,233,374,533,598,1198;
- =உலகத்தினது,
- குறள் 637.
- உலகத்துள்
- = உலகத்தில்,
- குறள் 13.
- உலகத்தோடு
- =உலகத்துடன்,
- குறள் 140,426.
- உலகம்
- =நிலவுலகம்/பூமி,
- குறள் 11,19;
- = உலகியல்,
- குறள் 996;
- = உலகம்,
- குறள் 222,243,247,346;
- =உயர்மக்கள்,
- குறள் 117,1031;
- = உயர்ந்தோர்,
- குறள் 280,425,426.
- உலகு
- = நிலவுலகம்/பூமி,
- குறள் 1,20,23,27,58,211,234,290,336,387,
- 389,520,542,544,571,572,578,612,874,1062;
- =முத்தியுலகம்,
- குறள் 1103;
- = உலகநடை,
- குறள் 215;
- = மக்கள்,
- குறள் 256,399,470,670,809,841,
- 970,994,1015,1025.
- உலந்த
- = வற்றிவிட்டன,
- குறள் 1174.
- உலைவு
- = உறுதியின்மை,
- குறள் 620,762;
- =தளர்ச்சி,
- குறள் 883.
- உல்கு
- =சுங்கம்/இறைப்பொருள்/வரி,
- குறள் 756.
உவகை
தொகு- உவகை
- =மகிழ்ச்சி,
- குறள் 304,432,531;
- ஊடலுவகை, அதி.133.
- உவக்காண்
- = உங்கே,
- குறள் 1185.
- உவக்கும்
- = மகிழும்,
- குறள் 69;
- = மகிழ்தலால் எய்தும்,
- குறள் 228.
- உவந்து
- = மகிழ்ந்து,
- குறள் 842,1061,1130.
- உவப்ப
- = மகிழ,
- குறள் 394.
- உவப்பது
- = மகிழ்தல்,
- குறள் 1057.
- உவப்பின்
- = மகிழ்ந்தால்,
- குறள் 707.
- உவமை
- = ஒப்பு,
- குறள் 7.
- உவரி
- = கடல்,
- குறள் 763.
- உழக்கும்
- = அநுபவிக்கும்,
- குறள் 1135;
- = வருந்தும்/அநுபவிக்கும்,
- குறள் 1175,1229.
- உழத்தொறூஉம்
- = அநுபவிக்கும் போதெல்லாம்,
- குறள் 940.
- உழந்து
- = துன்பம் துய்த்து,
- குறள் 1031;
- = காமநோயை அநுபவித்து,
- குறள் 1131,1137;
- = துன்பத்தை அநுபவித்து அநுபவித்து,
- குறள் 1177.
- உழப்பது
- = துன்பத்தைத் துய்ப்பது,
- குறள் 787,1172.
- உழப்பர்
- = துன்பத்தைத் துய்ப்பர்,
- குறள் 936.
- உழப்பிக்கும்
- = துன்பம் உறுவிக்கும்,
- குறள் 938.
- உழவர்
- = உழுபவர்,
- குறள் 14,872.
- உழவினார்
- = உழுபவர்கள்/உழவர்கள்
- குறள் 1036.
- உழவு
- = பயிர்த்தொழில்,
- குறள் 1031;
- உழவு, அதி.104.
- உழாஅர்
- = உழமாட்டார்,
- குறள் 14.
- உழி
- = இடம்,
- குறள் 415;
- = சேமித்துவைக்குமிடம்,
- குறள் 226;
- = ஏழாம்வேற்றுமை உருபு,
- குறள் 168 (தீயுழி=நரகத்தில்).
- உழுது
- = ஏரினால் உழுதலைச்செய்து,
- குறள் 1033.
- உழுவார்
- = உழுகின்றவர்/உழுதொழில் வல்லார்,
- குறள் 1032.
- உழை
- = இடத்தில்,
- குறள் 594,1249.
உள்
தொகு- உள்
- = உள்ளிடம்
- குறள்421, 955. 1177;
- = உளப்பாடு
- குறள் 677;
- =நடு (உள்ளூர்) குறள்:216, 217;
- = உள்ளாய் நிற்கும் (உட்பகை) குறள்: 735, 883, 884, 885, 887, 888, 889;
- = நெஞ்சம் குறள்: 119, 129, 487, 680, 927;
- = உள்ளதாகிய (உள்வழி) குறள்: 170;
- உள
- = இருக்கின்றன, குறள்: 54, 223, 241, 304, 380, 483, 521, 527, 636, 781,995, 1099, 1101;
- = இருக்கின்றவை, குறள்: 100, 479, 574, 480;
- உளது
- = உள்ளது, குறள்: 454;
- = உள்ளது, குறள்: 235;
- உளர்
- = இருக்கின்றனர், குறள்: 406, 730, 1178, 1204;
- = இருக்கின்றவர், குறள்: 180, 895;
- உளன்
- = இருக்கின்றான், குறள்: 294, 336;
- உளார்
- = இருப்பவர், குறள்: 25;
- உளாள்
- = உறைவாள் குறள்: 617;
- உளி
- = மூன்றாம் வேற்றுமை உருபு (இயல்புளி=இயல்பால்) ஆல், குறள்: 545;
- உளேம்
- = உள்ளேம், ஆவேம்;
- குறள்: 1204
- உளேன்
- = இருக்கின்றேன், குறள்: 1167,
- = உயிர் வாழ்கின்றேன், குறள்: 1206, 1263.
- குறள்
- உள்ள [உள்ள வெறுக்கை]
- = ஊக்க மிகுதி, குறள்: 600, 971;
- = நினைக்க, குறள்: 109, 357, 394, 540, 622, 1069, 1206, 1281.
- குறள்
- உள்ளது
- = இருப்பது, குறள்: 53, 357, 641, 982, 1069, 1274;
- = இருக்கின்றது, குறள்: 255, 572;
- = அகத்தது, குறள்: 889, 1091.
- குறள்
- உள்ளத்தார்
- = அகத்திருப்பவர், குறள்: 1249.
- குறள்
- உள்ளத்தால்
- = நெஞ்சத்தால், குறள்: 282, 294, 309.
- குறள்
- உள்ளத்தின்
- = நெஞ்சத்தினால், குறள்: 622.
- குறள்
- உள்ளத்து
- = நெஞ்சத்தினது, குறள்: 595,
- குறள்
- உள்ளத்துள்
- = நெஞ்சில், குறள்: 294, 1130.
- குறள்
- உள்ளப்படும்
- = நன்கு மதிக்கப்படும், குறள்: 665.
- குறள்
- உள்ளம்
- = நெஞ்சம், குறள்: 357, 438, 677, 799, 1057, 1069, 1170, 1207, 1270, 1324;
- = ஊக்கம், குறள்: 592, 598, 798, 1263.
- குறள்
- உள்ளல்
- = கருதுக, குறள்: 596;
- = நினைத்தல், குறள்: 282, 1243, 1318.
- குறள்
- உள்ளற்க
- = நினையாதுஒழிக, குறள்: 798.
- குறள்
- உள்ளார்
- = இருக்கின்றார்,
- குறள், 1127.
- உள்ளான்
- = நினைக்கமாட்டான்,
- குறள் 309, 930.
- உள்ளி
- = நினைத்து,
- குறள்: 1230, 1231, 1243, 1249, 1264, 1317,1320.
- உள்ளியது
- = நினைத்தபேறு, பொருள்;
- குறள்: 309, 540,
- உள்ளின்
- = நினைத்தால், குறள்: 799, 1201, 1207;
- = அகத்தினின்றும், குறள்: 1126.
- குறள்
- உள்ளினேன்
- = நினைத்தேன், குறள்: 1316.
- குறள்
- உள்ளுக
- = நினைக்க, குறள்: 539.
- குறள்
- உள்ளும்
- = நினையாநின்றது, நினைக்கின்றது;
- குறள்: 1298.
- உள்ளுவது
- = நினைப்பது, குறள்: 596.
- குறள்
- உள்ளுவர்
- = நினைப்பர், குறள்: 107.
- குறள்
- உள்ளுவன்
- = நினைப்பேன், குறள்:1125, 1184.
- குறள்
- உள்ளுவேன்
- = நினைப்பேன், குறள்: 1136.
- குறள்
- உள்ளுள்
- = (வெளிப்படையாகவன்றி) உள்ளுக்குள்ளே, குறள்: 1057.
- குறள்
உற
தொகு- உற
- = பொருந்த, குறள்: 399, 535;
- = மிக, குறள்: 659,
- உறங்கி
- = தூங்கி, குறள்: 339.
- உறங்குவது
- = தூங்குதல், குறள்: 339,
- உறல்
- = அடைதல், குறள்:378
- = சுற்றமாதல்(உறவு முறையான்) = (புறத்து) உறவு (முறைத்தன்மையோடு கூடிய)
- குறள்: 885.
- உறாஅ
- = பொருந்தாமல், குறள்: 1052.
- உறாஅதவர்
- =நொதுமலர்/(உறவினரும் இல்லாது அயலாரும் இல்லாத நிலை), குறள்: 1096;
- = அன்புடையராகாதவர், குறள்: 1245, 1292.
- உறாஅது
- = பொருந்தாது, குறள்: 1143.
- உறாஅமை
- = வாரா வண்ணம், குறள்: 442.
- உறாஅர்
- = நொதுமலர் (பகையும் உறவும் இல்லாதவர்), குறள்: 1097.
- உறாஅர்க்கு
- = கூடாதாருக்கு, குறள்: 1200.
- உறின்
- = உற்றால், குறள்: 559, 778;
- = பயன் உண்டானால், குறள்: 812;
- = (மெய்யுறக்) கலந்தால், குறள்: 1270.
- உறு
- = துன்பம்[உறுகண், உறுபடை, உறுபசி, உறுநோய், உறுதுயர்], குறள்: 261;
- = மிக்க, பெரிய(, குறள்:498, 734, 1200, 1275;
- = வந்து முற்றிய(பகைவர்)[உறுபகை, உறுபொருள்], குறள்:744;
- = தானே வந்துற்ற(பொருள்), குறள்: 756;
- = உறுதோறு= பொருந்தும்போதெல்லாம் (உறுந்தோறு-உறுதோறு எனத் திரிந்துநின்றது), குறள்:1106;
- = அதிகாரம், 119 - பசப்புறுபருவரல்.
- உறுதல்
- = அடைதல், குறள்: 628, 629;
- = அவாவுதல், [காமுறுதல்(காமம்+உறு= காமுறு)], குறள்: 402.
- உறுதி
- = நன்மை, குறள்: 638;
- = மிகுதி, குறள்: 690;
- = நல்லறிவு, குறள்: 796.
- உறுத்தல்
- = உணர்வித்தல், [அறன் வலியுறுத்தல், அதி.4; தகையணங்குறுத்தல், அதி.109; அலரறிவுறுத்தல், அதி.115; குறிப்பறிவுறுத்தல், அதி.128.]
- உறுப்பினுள்
- = அங்கத்துள், குறள்: 703;
- = (கண் முதலிய) அவயவயங்களுள், குறள்: 705.
- உறுப்பு
- = அங்கம், குறள்: 79, 704, 737, 761, 802;
- = உடம்பு, குறள்: 993;
- = தலைமகள் தன் கண்ணும், தோளும், நுதலும் முதலாகிய அவயவயங்கள் தம் அழகழிதல் [உறுப்புநலனழிதல், அதி.124.]
- உறும்
- = (முற்பட்டு) நிற்கும், குறள்: 380, 707, 1023;
- = பொருந்தும், குறள்: 639;
- = நன்று, குறள்: 816, 817, 1061;
- = எய்தும் [உறும் போழ்து, உறும் அல்லல்], குறள்: 539, 1301.
- உறுவது
- = அடைவது, குறள்: 399, 813, 1259, 1271.
- உறூஉம்
- = மிகுவிக்கும், குறள்: 94.
- உறை
- = ஆயுள், குறள்: 564;
- = ஆளுமிடம், குறள்: 680;
- = மழை, குறள்: 559;
- = தங்குகின்ற [உறை நிலத்தோடு, உறைபதி], குறள்: 499, 1015.
- உறைந்து
- = தங்கினாற்(போன்றது) [உறைந்தற்று]. குறள்: 208, 890.
- உறையும்
- = தங்கும் [வான் உறையும்], குறள்: 50.
- உறைவது
- = ஒழுகுவது, குறள்: 426.
- உறைவர்
- = தங்கியிருப்பவர், குறள்: 1130.
- உற்ற
- = நேர்ந்த, குறள்: 261, 442, 624, 625;
- = உண்டாகிய, குறள்: 887, 888;
- = புணர்ந்த, குறள்: 1206;
- = அடைந்த, குறள்: 1256;
- = எய்தின, குறள்: 1239.
- உற்றக்கடை
- = எய்தினால், குறள்: 372, 837.
- உற்றக்கால்
- = வந்தால், குறள்: 372, 837.
- உற்றது
- = அடைந்தது, குறள்: 708.
- உற்றபின்
- = நேர்ந்தால், குறள்: 662.
- உற்றவரின்
- = எய்தியவரைக் காட்டிலும் [ஏமுற்றவரின்], குறள்:873.
- உற்றவன்
- = (நோய்)அடைந்தவன், குறள்: 950.
- உற்றவை
- = பொருந்திய இடையூறுகள், குறள்: 512.
- உற்றன
- = உடையவாயின, குறள்: 1179.
- உற்றார்
- = (இன்பம்)அடைந்தவர், குறள்: 75, 1255;
- = உடையார், குறள்: 207;
- = நண்பர், குறள்: 1097;
- = (காதலை)மிக அடைந்தவர் [காமுற்றார்], குறள்: 1133.
- உற்றார்க்கு
- = மேற்கொண்டவர்க்கு, குறள்: 345.
- உற்றால்
- = (அன்பு)பட்டால், குறள்: 1245.
- உற்றான்
- = (நோய்)அடைந்தவன், குறள்: 949.
- உற்று
- = எய்தி, குறள்: 75, 1290;
- = தீண்டி, குறள்: 1101;
- = வேண்டி, குறள்: 1244;
- = அவாவினாற்(போலும்) [காமுற்றற்று], குறள்: 402.
அகஇணைப்பான்கள்
தொகு