திருக்குறள்அகரமுதலி ககரவரிசை

பார்க்க:

திருக்குறள்
திருவள்ளுவமாலை
திருக்குறள் முதற்குறிப்பு அகரமுதலி
திருக்குறள் கடைச்சொல் அகரமுதலி


திருக்குறள் அகரமுதலி ககர வரிசை

தொகு

அக இணைப்பான்கள்

தொகு

கட கண் கத கய கர கல் கவ கழ கள் கறு கன

கஃசு
=1/4 பலம் =(தொடி என்னும் அளவையிற் சிறியது), 1037.
கசடு
= பழுது, வழு 391, 717, 845.

கடப்பாடு

தொகு
கடப்பாடு
= ஒப்புரவுகள், 211.
கடல்
= சமுத்திரம், 10, 17, 1137, 1164, 1166, 1175;
= கடலின்கண்(7ஆம்வே.தொ) = கடலின்கண் 496.
கடலின்
= கடலைவிட(இடப்பெயர்.5ஆம் வே.), 103
கடலை
= சமுத்திரத்தை, 1200.
கடவுள்
= இறைவன்[கடவுள்வாழ்த்து] = இறைவனைப்போற்றுதல், அதி.1.
கடன்
= தகுவது, 218, 981;
= மானம், 1053;
= முறைமை, 638, 687, 802.
கடாஅ
= ஐயுறாத, 585;
= மதநீரை உடைய[கடாஅக்களிறு]
கடி
= காவல், 1205.
கடிதல்
= ஒறுத்தலால் ஒழித்தல், 549;
= அதி.44 [குற்றங்கடிதல்]
கடிது
= (விரைவாக) அளவிறப்ப, 562.
கடிந்த
= (நூலோர்) நீக்கிய (வினைகளை), 658.
கடிந்து
= நீக்கி, 658;
= ஒழிந்து, 668.
கடியன்
= கொடுமையுடையவன், 564.
கடுகி
= குறைந்து, 564.
கடுத்த
= ஐயுற்ற (பிறகு)[கடுத்தபின்], 693.
கடுத்தது
= மிக்கதனை, 706.
கடும்
= (கேள்வியினும் வினையினும்) கடுமையான, 386, 566, 567;
= கொடிய, 570;
= மிக்க, 1134, 1167.
கடை
= ஆயின், 53, 230, 315, 372, 469, 478, 803, 837, 964, 1019, 1059, 1149, 1195;
= வாயிலில், 142;
= முடிவின்கண், 663, 792;
= இழிபு, 328, 331, 998;
= பாவம்[அறன்கடை], 142;
= இழிந்தவர், 729;
= குறிக்கொண்டு, 944.
கடைத்து
= ஆனபோது(ம்)[கடைத்தும்], 637, 823.
கடையர்
= தாழ்ந்தவர், 395.
கட்ட
= களையெடுத்த(பின்)[கட்டபின்], 1038.
கட்டதனொடு
= களையைக் களைந்து காத்தலோடு, 550.
கட்டளை
= உரை(கல்), 505;
= உரைகல்லாகிய செயல், 986.
கட்டு
= இடத்தது, 27, 502, 513;
= கண்களையுடையது, 1083.
கண்
= இடத்தில், 573;
= முன்(நின்று)[கண்நின்று], 1055;
= இடத்தையுடைய, 1058;
= பொழுது = சந்தர்ப்பத்தில், 349, 521, 1292;
= விழி, 392, 393, 445, 573, 574, 577, 581, 705, 709, 710, 775, 780, 1061, 1084, 1085, 1086, 1092, 1095, 1100, 1112, 1114, 1126, 1127|1|, 1136, 1170, 1171, 1175, 1176, 1177, 1178, 1179, 1231, 1232, 1239, 1244, 1261, 1265, 1267, 1283, 1315;
= கண்ணை, 1127|2|;
= கண்ணைமறைக்கும் (துகில்)[கட்படாம்] = முகபடாம், 1087;
= (பாகர்)கண்களுக்கு(அடங்காதவை)[கண்ணஞ்சா], 500;
= கண்களுக்கு(அஞ்சாமல்)[கண்ணஞ்சாது], 585;
= (அஞ்சமாட்டான்)[கண்ணஞ்சான்], 686;
= கண்களுள், 1127;
= அறிவு, 927;
= கண்ணோட்டம், 184, 566, 1252;
= இடத்தில்(ஏழாம் வேற்றுமை உருபு), 34,52, 78, 89, 107, 117, 135, 141, 146, 176, 192, 206, 216, 217, 223, 241, 284, 285, 286, 287, 316, 398, 408, 472, 473, 493, 503, 510, 517, 519, 521, 579, 590, 608, 612, 613, 642, 665, 668, 750, 784, 787, 794, 798, 806, 810, 827,832, 839, 874, 876, 878, 886, 893, 903, 909, 946, 951, 957, 958, 977, 986, 1014, 1059,1061|2|, 1090, 1099, 1101, 1153, 1174, 1197, 1243, 1284, 1309;
= (ஏழாம் வேற்றுமை உருபு- தொகை), 6, 19, 21, 22, 23, 28, 29, 41, 47, 48, 50, 58, 62, 67, 68, 75, 78, 79, 81, 84, 91, 98, 107, 115, 118, 119, 121, 126, 127, 129, 130, 141, 143, 144, 145, 149, 156, 157, 161, 162, 166,168, 172,182, 183, 184, 185, 189, 192, 194, 208, 210, 213, 216, 218, 224, 233, 243, 255, 271, 272, 274, 278, 288, 301, 302, 307, 319, 329, 332, 336, 346, 355, 370, 371, 393, 396, 409, 413, 414, 415, 423, 454, 476, 481, 487, 489, 490, 496, 500, 502, 526, 533, 539, 549, 558, 562, 571, 574, 587, 598, 603,614, 617, 620, 622, 624, 625, 638, 641, 647, 650,654, 661, 663, 667, 672, 673, 681, 691, 694, 717, 721, 723, 725, 727, 735, 746, 747, 749, 750, 753, 758, 762, 764, 765, 766, 767, 771, 772, 774, 784, 789, 792, 794, 796, 798, 799, 814, 819, 820, 835, 838, 840, 850, 856, 871, 875, 877, 883, 898, 899, 921, 923, 928, 930, 933, 937, 951, 952, 954, 957, 959, 962, 963, 966, 967, 973, 977, 982, 992, 996, 999, 1001, 1020, 1027, 1034, 1044, 1048, 1055, 1072, 1090, 1091, 1100, 1103, 1105, 1107, 1108, 1117, 1121, 1123, 1127, 1135, 1136, 1138, 1153, 1158, 1161, 1163, 1165, 1167, 1169, 1176, 1177, 1180, 1187, 1198, 1204, 1205, 1220, 1224, 1226, 1227, 1230, 1231, 1233, 1239, 1250, 1252, 1254, 1269, 1272, 1287, 1298, 1305, 1307, 1310, 1315, 1323, 1327, 1328;
வினையெச்ச விகுதி[கண்ணும்], 312, 354, 514, 606, 670, 740, 750, 955;
= துன்பம்[இடுக்கண்], 621, 624, 625, 654, 788, 1030;
= மகிழ்ச்சி[இன்கண்], 1152;
= குளிர்ந்த(இடம்)[ஈர்ங்கண்], 1058;
= (மையுண்ட)கண்[உண்கண்], 1091, 1113, 1172, 1174, 1212, 1271, 1272;
= துன்பம்[உறுகண்], 261;
= மறம்=வீரம்[தறுகண்], 773;
= அச்சம்[புன்கண்], 1152;
= அஞ்சாமை[வன்கண்], 762;
= வினைசெய்தற்கண் அசைவின்மை, 632;
= அஞ்சாமை உடையது[வன்கணது], 764;
= கொடியது[வன்கண்ணது], 1222;
= (புல்லிய)கண்(நீர்)[புன்கணீர்], 71;
= (அழுதலால்) கண்களிற் (பெருகும் நீர்), 555, 828;
= தன்னொடு பயின்றாரைக் கண்டால் அவர் கூறியன மறுக்காதிருக்க = தாட்சணியப்பட[கண்ணோட], 578;
= தாட்சணியப்படாதவர்[கண்ணோடாதவர்], 576;
= தாட்சணியப்படாமல்[கண்ணோடாது], 541;
= தாட்சணியப்பட்டு[கண்ணோடி], 579;
= தாட்சணியத்தில்[கண்ணோட்டத்து], 572;
= தாட்சணியம்[கண்ணோட்டம்], 571, 573, 574, 575, 577, 983;
= தன்னொடு பயின்றாரைக்கண்டால் அவர் கூறியன மறுக்கமாட்டாமை, அதி. 58[கண்ணோட்டம்];
= கண்கள் தலைமகனைக் காணுதற்கு விரைதலால் வருந்துதல், அதி.118[கண்விதுப்பழிதல்].
கணத்தர்
= இனத்தவர், 720.
கணம்
= நொடிப்பொழுது, 29. (தமிழ்ச்சொல்: கண்+அம் = கண்கள் இமைத்தலையுடைய காலம் = நொடிப்பொழுது).
கணிச்சி
= கூந்தாலி, 1251.
கணை
= அம்பு, 279.
கண்ட
= கருதிய, 387;
= துணிந்த, 668;
= பார்த்த, 1177, 1215, 1285;
= உள்ளவாறு அறிந்த(இடத்தும்)[கண்ட கண்ணும்], 1292;
= பெற்ற(பிறகு)[கண்டபின்], 491;
= பார்த்த(பிறகு), 1265;
= அறிந்த(படி)[கண்டவாறு], 849.
கண்டது
= பார்த்தது, 1071, 1146, 1215;
= அறிந்தது, 1171.
கண்டவற்றுள்
= கண்ட நூல்களுள், 300.
கண்டார்
= உணர்ந்தவர், 91, 356;
= பார்த்தவர், 1084, 1090
கண்டார்கண்
= ஆராய்ந்து அறிந்தவர் மாட்டு, 141.
கண்டால்
= பார்த்தால், 1246.
கண்டான்
= கண்டறிந்தான், 849.
கண்டு
= உணர்ந்தாற்(போலும்)[கண்டற்று], 249;
= பார்த்தால்(போன்றது), 758, 1110;
= கருதிய(அளவினையுடையது)[கண்டனைத்து], 387;
= பார்த்ததை (ஒத்திருப்பவர்)[கண்டனையர்], 277;
= காணப்பட்டாற்(போல்வது)[கண்டன்னது], 565;
= அதி. 123[பொழுதுகண்டிரங்கல்].
கண்ணார்
= கண்களையுடையவர், 1180, 1305.
கண்ணாள்
= கண்களையுடையவள், 119, 1125, 1305.
கண்ணான்
= கண்களையுடையவன்[தாமரைக்கண்ணான்] = திருமால், 1103.
கண்ணிற்கு
= கண்ணுக்கு, 575.
கண்ணின்
= நோக்கினது(வேறுபாட்டின்), 709;
= கண்ணினது, 1240;
= கண்ணினால், 1140, 1290, 1311.
கண்ணினால்
= கண்ணால், 1210, 1289.
கண்ணொடு
= கண்களுடன், 1100.
கண்ணை
= (ஒளியிழந்த) கண்களையுடையாய்[புன்கண்ணை], 1222.
கண்பாடு
= துயில், 1049.

கதம்

தொகு
கதம்
= சினம், 130.
கதவ
= கதவினை, 1251.
கதுப்பினாள்
= கூந்தலையுடையவள், 1105.
கதுமென
= விரைந்து, 1173.
கந்து
= பற்றுக்கோடு, 507.

கயமை

தொகு
கயமை
= கீழோரது தன்மை, அதி. 108.
கயல்
= சேற்கெண்டை, 1212.
கயவர்
= கீழோர், 1071, 1072, 1073, 1076, 1077, 1080.
கயிறு
= வடம், 482.

கரத்தல்

தொகு
கரத்தல்
= (ஈயாது)மறைத்தல், 1054;
= (அறியாவகை)மறைத்தல், 1162;
கரப்பவர்க்கு
= மறைப்பவர்க்கு, 1070.
கரப்பாக்கு
= மறைதல், 1127, 1271.
கரப்பார்
= மறைப்பவரை, 1067.
கரப்பின்
= மறைத்தால், 1051, 1271.
கரப்பு
= மறைத்தல், 1053, 1055, 1056.
கரவா
= மறையாமல், 527.
கரவாது
= மறைக்காமல், 1035, 1061.
கரவு
= வஞ்சனை, 288;
= மறைத்தல், 1068, 1069.
கரி
= சான்று, 25, 245, 1060.
கரியார்
= (மனம்)இருண்டிருப்பவர், 277.
கரு
= கறுப்பு[கருமணி] = கறுப்பு(விழி), 1123;
= கருமை = பசுமை[கருக்காய்] = பசுங்(காய்), 1028.
கருத
= நினைக்க, 1028.
கருதி
= அறிந்து, நினைத்து, 285;
= நோக்கி, 463;
= அறிந்து, 484;
= நினைத்து, 485;
= பார்த்து, 687, 696;
= எண்ணி, 700, 852;
= ஆராய்ந்து, 949.
கருதின்
= எண்ணினால், 484.
கருதுப
= நினைப்பர், 337.
கருதுபவர்
= நினைப்பவர், 485.
கருமத்தால்
= செயலால், 1011.
கருமம்
= செயல், செய்யத்தக்கது, 266, 467, 505, 578, 818, 1021.
கரும்பு
= கன்னல், 1078.
கருவியான்
= சாதனத்தால், 483;
= (மறவாத)மனத்தால்[பொச்சாவாக் கருவியான்], 537.
கரை
= (கடல்)தரை, 1167.
கரைந்து
= (காக்கை)தன் குரல் கொடுத்து(இனத்தை)அழைத்து, 527.
கல்
= (உரை)கல், 505;
= (நடு)கல், 771.
கலக்கத்தை
= துன்பத்தை, 627.
கலங்காது
= தப்பாமல், 485;
= குழம்பாமல் = மனந்தெளிந்து, 668.
கலங்கிய
= (மனம்) குழம்பித் திரிந்தன, 1116.
கலங்கினாள்
= மயங்கினாள் = மறந்துகூடிவிட்டாள், 1290.
கலத்தல்
= தழுவுதல் = கூடுதல், 1259, 1276.
கலத்துள்
= பாண்டத்துள், 660.

கலந்தார்க்கு

= கணவருக்கு, 1212.
கலந்து
= புணர்ந்து, 1246, 1268|2|;
= புரிந்து, 1268|1|;
= கலக்கப்பட்டது(போன்றது)[கலந்தற்று], 1121.
கலப்பேன்
= விரவுவேன் = பிணங்குதலையும் கூடுதலையும் கலந்து செய்வேன், 1267.
கலம்
= பாண்டம், 1000, 1029;
= நகை, 60, 575;
= வளையல்கள், 1262.
கலன்
= மரக்கலம்/கப்பல், 605.
கலுழும்
= அழுகின்ற(இது), 1173.
கலுழ்வது
= அழுதல், 1171.
கல்லா
= கற்காத, 405;
= (கதியைந்தும், சாரி பதினெட்டும், பொருமுரண் ஆற்றலும்) கற்று அறியாத (குதிரை)[கல்லா மா], 814.
கல்லாத
= ஓதாத, 397;
= ஓதியறியாத நூல்கள், 845.
கல்லாதவர்
= ஓதாதவர்கள், 393, 395, 403, 406.
கல்லாதவரின்
= ஓதாதவரைக் காட்டிலும், 729.
கல்லாதார்
= ஓதாதவர், 409.
கல்லாதான்
= ஓதாதவன், 402, 404.
கல்லாமை
= ஓதாதிருத்தல்[கல்லாமை] = கற்றலைச் செய்யாமை என்றது அதனின் ஆய இழிவினை. அதி.41.
கல்லார்
= கற்காதவர், 140, 570.
கல்லார்கண்
= கற்காதவர் மாட்டு, 408.
கல்லான்
= கற்காதவனொடு = நீதியறியாதவனோடு, 870.
கல்வி
= அரசன் தான் கற்றற்குரிய நூல்களைக் கற்றல், அதி.40.

கவரி

தொகு
கவரி
= சாமரை[கவரிமா], 969.
கவர்ந்து
= விரும்பி[கவர்ந்தற்று] = நுகர்ந்ததனோடு(ஒக்கும்), 100.
கவலை
= துன்பம், 7.
கவறு
= சூதுக்காய் = சூதாட்டம், 920, 935.
கவிகை
= குடை, 389.
கவிழ்ந்து
= இறைஞ்சி (=தலைகுனிந்து), 1114.
கவின்
= இயற்கை அழகு, 1234, 1235;
= அகக்கவின் = அகத்தழகு = நிறை 1250.
கவுள்
= யானையின் கன்னம், 678.கவ்விது
கவ்விது
= அலர்நிரம்பியது,1144.
கவ்வையால்
= அலரால் = தூற்றுதலால், 1144.

கழகத்து

தொகு
கழகத்து
= சூதாடுகளத்தில், 937.
கழகம்
= சூதாடுகளம், 935.
கழல்
= மறவர் காலணி = வீரமணி, 777.
கழாஅ
= கழுவாத = அலம்பாத, 840.
கழி
= சிறப்பான, 571;
= மிகுதியான, 657, 866, 946.
கழிய
= மிக, 404.
கழியும்
= நீங்கும், 378;
= (வளை) கழலும், 262;
= நீங்குமாயின் [கழியுமெனின்], 378;
= செல்கின்ற (கங்குல்கள்) [கழியும் இரா], 1169.
கள்
= நறவு (மது), 920, 921, 924, 926, 927, 930, 1145, 1288;
= கள்ளினை உண்ணாமையது சிறப்பு, அதி. 93. கள்ளுண்ணாமை.
களத்து
= களரில் = குறித்த நிலத்தில், 1224.
களர்
= உப்புநிலம், 406.
களரின்
= சேற்று நிலத்துள், 500.
களவினால்
= திருட்டினால், 283.
களவின்கண்
= திருட்டுத் தொழிலில், 284, 286.
களவு
= திருட்டு, 287, 288, 289, 1092;
= தலைமகனும் தலைமகளும் தாமே எதிர்ப்பட்டுப் புணர்ந்து வருவது, [களவியல்] அதி. 109 முதல் 115 வரை.
களன்
= சபை = சபையோர், 730.
களி
= குடிவெறி, 923;
= (கள்ளுண்டு) மயங்கும் (போதெல்லாம்) [களித்தொறும்], 1145.
களித்தல்
= (உணர்வழியாத) மகிழ்ச்சி, 1281.
களித்தார்க்கு
= கள்ளுண்டு மகிழ்ந்தவர்க்கு, 1288.
களித்தானை
= கள்ளுண்டு மகிழ்ந்தவனை, 929, 930.
களித்து
= கள்ளுண்டு மயங்கி, 928;
= மயங்கினாற் (போலும்), 838.
களிறு
= ஆண்யானைகள், 500.
களிற்றின்மேல்
= ஆண்யானையின் மேல், 1087.
களிற்றொடு
= ஆண் யானையோடு, 774.
களை
= களையப்படுவது, வேண்டாப் பூண்டு, 550.
களையாள்
= நீக்காதவளாக = கிள்ளாதவளாக, 1115.
களையுநர்
= நீக்குகின்றவர் (=வெட்டுகின்றவர்), 879.
களைவது
= அகற்றுவது, 788.
கள்வ
= வஞ்சகா, 1288.
கள்வர்
= திருடர், 813.
கள்வன்
= திருடன், 1258.
கள்வார்க்கு
= களவினைப் பயில்வார்க்கு, 290.
கள்வேம்
= வஞ்சித்துக்கொள்வோம், 282.
கள்ளத்தால்
= திருட்டால், 282.
கள்ளம்
= வஞ்சனை, 1184;
= மறைத்தற்குறிப்பு, 1275.
கள்ளாமை
= வஞ்சித்துக் கொள்ளக்கருதாதிருத்தல், 281;
= பிறர் உடைமையாய் இருப்பது யாதொரு பொருளையும் அவை வஞ்சித்துக் கொள்ளக் கருதாமை, அதி. 29 [கள்ளாமை].
கள்ளார்க்கு
= திருடக் கருதாதவர்க்கு, 290.
கள்ளுக்கு
= மதுவுக்கு = மதுவுண்டார்க்கு, 1281.
கள்ளை
= நறவை, 922.

கறுத்து

தொகு
கறுத்து
= நினைந்து, 312.
கற்க
= ஓதவேண்டும், 391, 725.
கற்பவை
= கற்க வேண்டிய நூல்கள், 391.
கற்பின்
= கற்றால், 373.
கற்பு
= கற்பித்தவண்ணம் நடக்கும் குணம், பத்தினித்தன்மை, 54;
= [கற்பியல்], அதி. 116 முதல் 133 வரை.
கற்ற
= கற்கப்பட்டவை, 722, 724, 730;
= ஓதிய, 396, 398, 727.
கற்றக்கடைத்து
= கற்றா(லும்), 823.
கற்றதனால்
= ஓதியதால், 2
கற்றது
= ஓதியநூல், 650.
கற்றபின்
= கற்றால், 391.
கற்றார்
= ஓதியவர், 395, 403, 409, 722.
கற்றாருள்
= ஓதியவர் எல்லாருள்ளும், 722.
கற்றாரோடு
= ஓதியவருடன் = ஓதியவரை நோக்க, 410.
கற்றார்முன்
= ஓதியவர் (அவைக்)கண், 722, 724.
கற்றான்
= ஓதிய மருத்துவன், 949.
கற்றிலன்
= ஓதாதவன், 414.
கற்று
= ஓதி, 130, 140, 356, 399, 503, 632, 686, 717, 728, 729.
கற்றோர்
= ஓதியவர், 393.

கனம்

தொகு
கனம்
= பளு, 1081.
கனவில்
= கனாவின்கண், 1054.
கனவின்
= கனாவின்கண், 819.
கனவினான்
= கனவின்கண், 1213, 1214, 1216, 1217, 1219, 1220.
கனவினுக்கு
= கனாவிற்கு, 1211.
கனவு
= கனா, 1215;
= தலைமகள் தான் கண்ட கனவினது நிலைமையைத் தோழிக்குச் சொல்லுதல், அதி. 122, [கனவுநிலை யுரைத்தல்].
கனி
= பழம், 100, 1191, 1306.
கன்றிய
= மிக்க, 284, 286.
ககர வரிசை முற்றும்

அக இணைப்பான்கள்

தொகு

கட கண் கத கய கர கல் கவ கழ கள் கறு கன [[#|]] [[#|]] [[#|]] [[#|]]


பார்க்க:

தொகு

அ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ. ||

க- |- கா,கி,கீ- | - கு, கூ- |- கெ, கே, கை- | கொ, கோ, கௌ. ||- ச, சா, சி, சீ, சு, சூ- | செ.சே,சொ, சோ. || ஞா. ||

நெ,நே,நொ,நோ. ப- | பா,பி,பீ-| பு,பூ-| பெ,பே,பை-| பொ,போ- || ம- | மா- |மி, மீ, மு, மூ- | மெ, மே, மை, மொ, மோ. || யா. || வ-|