திருக்குறள்அகரமுதல மிகரவரிசை

திருக்குறள்அகரமுதலி மிகரவரிசை தொகு

திருக்குறள் அகரமுதலி மிகர வரிசை தொகு

மிகரம் தொகு

மி

மிக
= பெருக்கமாக, 829
= ௸, 1007.
மிகப்பட்டு
= மேம்பட்டு, 1074.

மிகல் தொகு

மிகல்
= வெல்லக்கருதுதல், 855;
= மேன்மேலூக்குதல், 856
= ௸, 858
= ௸, 859;
= வெற்றி, 857.
மிகின்
= அளவு மீறினால், 941.
மிகுதி
= [தனிப்படர் மிகுதி], அதி. 120.
மிகுதிக்கண்
= வேண்டாச் செயல் உளதாயவழி, 784.
மிகுதியான்
= மனச்செருக்கால், 158.
மிகுத்து
= பெருக்கி, 475.
மிகும்
= மேற்படும், 373
= ௸, 928
= ௸, 1161.
மிகை
= அளவின் மீறுதல், 345;
= மிக்கவை, 504.
மிக்க
= அதிகமானவை, 504,
= ௸, 724.
மிக்கவை
= (செருக்கால் செய்த)தீங்குகள், 158.
மிக்காருள்
= மிகக் கற்றவரிடத்தில், 724.
மிக்கு
= அளவின் மிகுந்தாற்(போன்றது)[மிக்கற்று], 1302.

மிசை தொகு

மிசை
= வீட்டுலகில்[நிலமிசை], 03|2|.
மிசைவான்
= உண்பவன், 85.
மிச்சில்
= மிக்கது = மிஞ்சியது, 85.

மிதம் தொகு

மிதம்
= மேம்பாடு[பெருமிதம்], 431;
= தருக்கு, 979.

மிறை தொகு

மிறை
= வருத்தம், 847.



திருக்குறள் அகரமுதலி மிகர வரிசை முற்றும்

திருக்குறள் அகரமுதலி மீகார வரிசை தொகு

=

மீகாரம் தொகு

மீ

மீ
= உயர்வு (= உயர்த்துக்கூறும்)[மீக்கூறும்], 386.
மீன்
= மச்சம், 931;
= விண்மீன் = நட்சத்திரம், 1116.


திருக்குறள் அகரமுதலி மீகார வரிசை முற்றும்

திருக்குறள் அகரமுதலி முகர வரிசை தொகு

முகரம் தொகு

மு

முகடி
= சேட்டை = மூதேவி, 617.
முகடியான்
= மூதேவியால், 936.
முகத்த
= (கோத்த)மருப்பையுடைய, 500.
முகத்தான்
= முகத்தினால், 93;
= முகத்தையுடையவன், 565.
முகத்தின்
= முகம் போல, 707;
= முகத்தால், 824.
முகத்து
= முகத்தின்கண், 393
= ௸, 574
= ௸, 1117;
= (போரின்)தொடக்கத்தில்[முனைமுகத்து], 749|1|;
= (வினை)வேறுபாடுகளால்[வினை முகத்து], 749|2|;
= எதிரில், 623.

முகம் தொகு

முகம்
=முகம், 90
= ௸, 224
= ௸, 706
= ௸, 708
= ௸, 786
= ௸, 830
= ௸, 1118
= ௸, 1119.
முகன்
= முகம், 84
= ௸, 92
= ௸, 1116.
முகை
= அரும்பு, 1274.

முடிக்கும் தொகு

முடிக்கும்
= நிறைவேற்றும், 517.
முடிந்தால்
= நிறைவேற்றினால், 658.
முடியார்
= நிறைவேற்ற மாட்டார், 908.
முடிவு
= முற்றுப் பெறுதல், 640
= ௸, 1024;
= எல்லை, 671;
= முற்றுப் பெறுதற்குரிய முயற்சி, 676.
முட்டா
= வழுவாமல், 547.

முதல் தொகு

முதல்
= முதற் பொருள், 449
= ௸, 463;
= அடிப்படை = காரணம், 948;
= தொடக்கம், 941;
= தண்டு = அடிப்பகுதி, 1304.
முதல
= முதலையுடையன, 01.
முதலை
= கரா, 495.
முதற்று
= முதலையுடையது, 01.
முதுக்குறைந்தது
= அறிவு மிக்கது, 707.
முதுவருள்
= மிக்கவர் (அவைக்)கண், 715.
முத்தம்
= நன்முத்து, 1113.

முந்தி தொகு

முந்தி
= மிக்கு, 67.
முந்து
= முற்பட்டு, 380
= ௸, 603
= ௸, 707
= ௸, 715
= ௸, 1023.

முயக்கம் தொகு

முயக்கம்
= தழுவல், 913.
முயக்கு
= தழுவல், புணர்ச்சி, 918
= ௸, 1107
= ௸, 1108
= ௸, 1185
= ௸, 1239.
முயங்க
= தழுவ, 1330.
முயங்கிய
= தழுவிய, 1238.
முயல்
= முயல் என்னும் விலங்கு, 772.
முயல
= முயற்சி செய்ய[முயலப் படும்], முயற்சி செய்யப்படும், 265.
முயல்வாருள்
= முயற்சி செய்பவர் எல்லாருள்ளும், 47.
முயற்சி
= முயலுதல், 611
= ௸, 616
= ௸, 619.
முயற்று
= முயலுதல், உழைத்தல், 616.

முரண் தொகு

முரண்
= மாறுபாடு, 492
= ௸, 567.
முரிந்தார்
= கெட்டவர் = அழிந்த அரசர், 473.
முரிந்து
= இழந்து, 899.

முலை தொகு

முலை
= கொங்கை, 402
= ௸, 1087.

முள் தொகு

முள்
= முள், 879.

முறி தொகு

முறி
= தளிரின் நிறம், 1113.
முறுவல்
= பல, 1113.
முறை
= மரபு, 508;
= ஒழுங்கு, 541
= ௸, 677;
= அடைவு = வரிசை, 640;
= தடவை, 792;
= நீதி, 388
= ௸, 547(செங்கோல்)
= ௸, 548
= ௸, 553
= ௸, 558
= ௸, 559.
முறையர்
= உறவின் முறையுடையவர், 698.
முறையான்
= (உறவு)முறைத் தன்மையோடு, 885|1|;
= முறையோடு கூடிய, 885|2|.
முற்றாது
= சூழாமல் = வளைத்துக் கொள்ளாமல், 747.
முற்றி
= சூழ்ந்து = முற்றுகையிட்டு, 747.
முற்றியவரை
= சூழ்ந்த புறத்தோரை, 748.
முற்றியாங்கு
= முடிந்தால், 676.
முற்று
= முற்றுகையிடுதல், 748.
முற்றும்
= முற்றுகையிடுதற்கு ஆகும்(இடம்), 491.

முன் தொகு

முன்
= முன்பு, முன்னால், எதிரில், 59
= ௸, 184
= ௸, 192
= ௸, 250
= ௸, 319
= ௸, 335
= ௸, 395
= ௸, 403
= ௸, 442
= ௸, 535
= ௸, 636
= ௸, 714
= ௸, 718
= ௸, 720
= ௸, 722
= ௸, 724
= ௸, 771
= ௸, 1053
= ௸, 1157.
முனிய
= வெறுக்கும்படி, 191.
முனை
= போரின்(தொடக்கம்)[முனைமுகம்] = போர், 749.
முன்னம்
= முற்பொழுதில், 1277.
முன்னர்
= முற்பொழுது, 435|1|;
= முன்னிடம், 435|2|
= ௸, 716.


திருக்குறள் அகரமுதலி முகர வரிசை முற்றும்

திருக்குறள் அகரமுதலி மூகார வரிசை தொகு

மூகாரம் தொகு

மூ

மூக்கின்
= மூக்குப் போல, 277.

மூட தொகு

மூட
= விழுங்கப்பட்டவர்[மூடப்பட்டார்], 936.

மூத்த தொகு

மூத்த
= முதிர்ந்த, 441.
மூத்து
= முத்தாற்(போன்றது), 1007.

மூவர் தொகு

மூவர்
= மூன்று பேர், 589.
மூவர்க்கு
= மூன்று திறத்தார்க்கு, 41.

மூன்றன் தொகு

மூன்றன்
= மூன்றினுடைய, 360
= ௸, 634.
மூன்றின்
= மூன்றினோடு கூடிய, 688.
மூன்று
= மூன்று, 383
= ௸, 682
= ௸, 941
= ௸, 952
= ௸, 1085.


திருக்குறள் மூகார வரிசை முற்றும்


பார்க்க: தொகு

அ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ.

க- கா,கி,கீ- கு, கூ- கெ, கே, கை- கொ, கோ, கௌ. ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே,சொ,சோ. ஞா. த- தா,தி,தீ- து,தூ,தெ,தே. ந- நா, நி- நீ,நு,நூ- நெ,நே,நொ,நோ. ப- | பா,பி,பீ-| பு,பூ-| பெ,பே,பை-| பொ,போ- || ம- | மா- |மி, மீ, மு, மூ- | மெ, மே, மை, மொ, மோ- || யா || வ-|