திருக்குறள்அகரமுதலி தகரவரிசை
திருக்குறள்அகரமுதலி தகரவரிசை
தொகுதகரம்
தொகுத
- தக
- = சரியாக/ பொருந்த, 391.
- தகர்
- = செம்மறிக்கடா, 486.
- தகவு
- = நடுவுநிலைமை, 114.
- தகுதி
- = நடுவுநிலைமை, 111.
- தகுதியான்
- = நடுவுநிலைமையால்/ பொறுமையால், 158.
- தகை
- = நன்மை, 56;
- = தன்மை/ குணம், 643;
- = பெண்ணின் தன்மை[பெண்டகை](நாணம், அச்சம், மடம், பயிர்ப்பு), 1084;
- = சென்றடுந் தறுகண்மை[அடற்றகை], 768;
- = (விலைமகளிர்க்குரிய ஆடல் பாடல்)அழகு, 916;
- = (ஆக்கல் அழித்தல்கட்கு ஏதுவாய)பெருமை, 897;
- = (நற்குணங்களால்)தகுதி[நலத்தகை], 1305;
- = (புலவி)மிகுதி[புலத்தகை], 1305;
- = (தலைமகன், தலைமகளது) வனப்புத்(தன்னை வருத்தமுறுவித்தலைச் சொல்லுதல்)[தகையணங்குறுத்தல்], அதி.109.
- தகைத்து
- = சிறப்பினையுடையது, 125;
- = தன்மையுடையது, 486;
- = பெருமையுடையது, 1064.
- தகைமை
- = மதிப்பு, 405;
- = உரிமை, 808;
- = உயர்குடிப் பிறப்பு, 968;
- = நிறையுடைமை, 1255;
- = உரிமை(யாற் செய்வன)[கெழுதகைமை], 700
- = ௸, 802
- = ௸, 803
- = ௸, 808.
- தகைமைக்கண்
- = தன்மையில், 613;
- = பெருமையுள், 874.
- தகைமையவர்
- = பெருமையுடையவர், 447.
- தகைய
- = தன்மையுடையன,418.
- தகையால்
- = தோற்றப்பொலிவால், 768;
- = தன்மையால்/ உரிமையால், 804’
- = தன்மையோடு, 1083;
- = பெருமிதத்தால்,1182.
- தகையான்
- = தன்மைபற்றி, 804.
- தகையான்கண்
- = (பெருந்)தன்மையுடையவனிடத்தில், 217.
- தக்க
- = தகுந்த, 51
- = ௸, 580
- = ௸, 993
- = ௸, 1288;
- = தகுந்தவை, 54
- = ௸, 466
- = ௸, 805.
- தக்கது
- = தகுதி வாய்ந்தது, 220
- = ௸, 663
- = ௸, 686
- = ௸, 732
- = ௸, 780
- = ௸, 1018
- = ௸, 1018
- = ௸, 1137
- = ௸, 1173.
- தக்கனள்
- = (புலவிக்கு)அமைந்தாள், 1316.
- தக்கார்
- = நடுநிலைமையுடையவர்/ தகுதியுடையவர், 114
- = ௸, 446
- = ௸, 731
- = ௸, 897;
- = ஏற்புடையவர், 1051.
- தக்கார்க்கு
- = தகுதியுடையவர்க்கு, 212
- = ௸, 1006.
- தக்காள்
- = தகுதியுடையவள், 51.
- தக்கு
- = நடுவாக(நின்று), 561.
- தங்கண்
- = தம்மிடத்தில்(எய்திய), 107.
- தங்கா
- = உளவாகமாட்டா, 19.
- தங்கி
- = வைத்து, 472.
- தங்கியான்
- = தங்கினவனது, 117.
- தங்கிற்று
- = நிலைபெற்றது, 613;
- = அடங்கிற்று, 874.
- தங்கின்
- = தங்குமானால், 608.
- தங்குதல்
- = நிலைபெறுதல், 671.[[]]
- தங்கும்
- = நிலைபெறும், 389.
- தஞ்சம்
- = எளிமை/ எளிது, 863
- = ௸, 1300.
- தடிந்து
- = குறைந்து, 17.
- தண்
- = தாழ்மையான[தண் பதத்தால்], 548;
- = குளிரா(நிற்கும்)[தண் என்னும்], 1104;
- = மென் சிறு(காற்று)[தண் வளி], 1239.
- தணந்தமை
- = பிரிந்தமை, 1233
- = ௸, 1277.
- தணிக்கும்
- = தீர்க்கும்(உபாயம்), 948.
- தண்டம்
- = ஒறுத்தல் = தண்டனை, 567.
- தண்டா
- = தணியாத, 1171.
- தண்ணம்
- = குளிர்ச்சி, 1277.
- தண்மை
- = தண்ணளி = அருள், 30.
- தத்தம்
- = தங்கள் தங்களது, 505
- தந்த
- = ஈட்டிய, 212;
- = அறிவித்த, 588.
- தந்தது
- = கொடுத்தது, 1065.
- தந்தம்
- = தமது தமது = தம்மை நோக்கிச் செய்யும்(வினையால்), 63.
- தந்தார்
- = உண்டாக்கினார், 1182.
- தந்தாள்
- = கொடுத்தாள், 1135.
- தந்து
- = படைத்து, 1089;
- = கொடுத்து, 1183.
- தந்தை
- = தகப்பன், 67.
- தந்தைக்கு
- = தகப்பனுக்கு, 70.
- தப்பா
- = தவறாத = பயன்படுகின்ற, 217.
- தம்
- = தமது, 63
- = ௸, 64
- = ௸, 66
- = ௸, 68
- = ௸, 158
- = ௸, 190
- = ௸, 266
- = ௸, 315
- = ௸, 473
- = ௸, 539
- = ௸, 584
- = ௸, 595
- = ௸, 720
- = ௸, 846
- = ௸, 916
- = ௸, 1015ம
- = ௸, 1024
- = ௸, 1034
- = ௸, 1107
- = ௸, 1205;
- = தம்மை, 237
- = ௸, 829
- = ௸, 1191;
- = தமக்கு, 1051. := ௸
- தம
- = தம்முடையவை, 120
- = ௸, 376.
- தமக்கு
- = தங்களுக்கு, 72
- = ௸, 319.
- தமது
- = தம்முடைய, 1107.
- தமர்
- = தமக்குச் சிறந்தவர், 443
- = ௸, 444;
- = சுற்றத்தார், 529
- = ௸, 837
- = ௸, 1027
- = ௸, 1300;
- = ஞாதியர், 881.
- தமரின்
- = தமர்மையில் = சுற்றத்தாராந் தன்மையைக் காட்டிலும், 814.
- தமியர்
- = தனியராக, 229.
- தமியள்
- = தனியராக, 1007.
- தமியன்
- = தனித்தவன்(ஆக), 873.
- தம்மின்
- = தம்மைக காட்டிலும், 68
- = ௸, 444.
- தம்மை
- = தங்களை, 151
- = ௸, 237
- = ௸, 843
- = ௸, 1303
- = ௸, 1312.
- தம்மொடு
- = தம் நிலைமையோடு, 470.
- தரலான்
- = கொடுத்தலால், 131.
- தரற்கு
- = தருவதற்கு, 859;
- = தருதலால்<நான்காவது மூன்றன் பொருண்மைக்கண் வந்தது>, 1214.
- தரின்
- = கொடுத்தால் = பயந்தால், 113.
- தருக்கி
- = செருக்குற்று = மேற்கொண்டு, 935.
- தரும்
- = கொடுக்கும், 71
- = ௸, 171
- = ௸, 183
- = ௸, 275
- = ௸, 284
- = ௸, 296
- = ௸, 313
- = ௸, 321
- = ௸, 370
- = ௸, 416
- = ௸, 457
- = ௸, 492
- = ௸, 507
- = ௸, 508
- = ௸, 510
- = ௸, 522
- = ௸, 619
- = ௸, 651
- = ௸, 658
- = ௸, 663
- = ௸, 692
- = ௸, 785
- = ௸, 853
- = ௸, 884
- = ௸, 885
- = ௸, 892
- = ௸, 902
- = ௸, 903;
- = பயக்கும், 98
- = ௸, 138
- = ௸, 700
- = ௸, 911
- = ௸, 116;
- = உண்டாக்கும்
- = ௸, 611
- = ௸, 792
- = ௸, 845
- = ௸, 1044;
- = அடைவிக்கும்(நாடுகள்), 739.
- தருவது
- = கொடுப்பது, 546
- = ௸, 839
- = ௸, 934.
- தருவார்
- = விற்பவர், 256
- தரூஉம்
- = பயக்கும்(பகை), 434;
- = கொடுக்கும், 651.
- தலை
- = முடி, 09
- = ௸, 16
- = ௸, 488;
- = முதன்மை/சிறப்பு, 43
- = ௸, 47
- = ௸, 57
- = ௸, 151
- = ௸, 203
- = ௸, 295
- = ௸, 317
- = ௸, 322
- = ௸, 325
- = ௸, 411
- = ௸, 444
- = ௸, 579
- = ௸, 657
- = ௸, 687
- = ௸, 736
- = ௸, 761
- = ௸, 770
- = ௸, 814
- = ௸, 852
- = ௸, 891
- = ௸, 1031;
- = உறுதி[ஒரு தலை], 119;
- = தெளிவு, 357.
- தலைக்கூடி
- = ஒன்றுசேர்ந்து, 394.
- தலைச்செல்லா
- = பின்னும் செய்யாத, 561.
- தலைப்படாதார்
- = எய்தும் பொறியிலாதார், 88
- தலைப்படுவர்
- = எய்துவர், 356.
- தலைப்படுவார்
- = பெறுவார், 1289.
- தலைப்பட்டவர்க்கு
- = எய்தியவர்க்கு, 269.
- தலைப்பட்டார்
- = எய்தினார், 348.
- தலைப்பிரிதல்
- = நீங்குதல், 955.
- தலைப்பிரிந்த
- = நீங்கிவந்த, 258.
- தலைப்பிரியா
- = நீங்காத, 97.
- தலைப்பிரியாதார்
- = நீங்காதவர், 810.
- தலைப்பெய்து
- = கண்டு, 405.
- தலையான்
- = சார்பின்கண், 1196.
- தலையின்
- = தலையினின்றும், 964.
- தலைவந்த
- = மேல்வந்து தாக்கிய, 767.
- தவ்
- = தவ்வென்னும் = சுருங்கும், 1144.
- தவத்தான்
- = தவ வலியால், 264.
- தவத்திற்கு
- = துறவினது<4-ஆம் வேற்றுமை மயக்கம் 6-ஆம் வேற்றுமைப் பொருள்>, 261.
- தவத்தொடு
- = துறவுடன், 295.
- தவம்
- = துறவு, நோன்பு, 19
- = ௸, 262
- = ௸, 263
- = ௸, 265
- = ௸, 266;
- = தவ வேடம், 274;
- = நல்வினை, 842;
- = [மனம் பொறிவழிபோகாது தம்முயிர்க்கு வருந்துன்பங்களைப் பொறுத்துப் பிறவுயிர்களை ஓம்புதல்], அதி.27.
- தவல்
- = அழிதல், 853;
- = பிழைத்தல் = பிழைசெய்தல் (= வறுமையால் இன்னாதாதல்), 856.
- தவறு
- = குற்றம், 469
- = ௸, 1154
- = ௸, 1286
- = ௸, 1321
- = ௸, 1325.
- தவா
- = கெடாமைக்கு ஏதுவாகிய, 367.
- தவாஅ
- = கெடாது வருகின்ற, 361.
- தவாஅது
- = முடிவின்றி, 368.
- தவ்வையை
- = மூதேவிக்கு<2-ஆம் வேற்றுமை உருபு மயக்கம்>, 167.
- =தழால்
- = நீங்காமல் அணைத்தல்[சுற்றந்தழால்], அதி.53.
- தழீஇ
- = அணைத்து, 544|1|,
- = ௸, 913;
- = பொருந்தி, 544|2|.
- தழீஇயது
- = நட்பாக்குவது, 425.
- தளர்ந்து
- = தவறி, 716.
- தளிர்த்து
- = கொழுந்துவிட்டு, 78.
- தளிர்ப்ப
- = இன்பத்தால் தழைக்க, 1106.
- தள்ளா
- = குன்றாத, 731.
- தள்ளாது
- = தவறாது, 290.
- தள்ளாமை
- = தவறாமை = வெற்றி, 596.
- தள்ளின்
- = கூடாவிடின், 596.
- தள்ளும்
- = தவறும், 290.
- தறு
- = இரக்கமின்மை = மறம்[தறுகண்], 773.
- தற்று
- = இறுக உடுத்துக்கொண்டு, 1023.
- தன்
- = தன்னை, 51
- = ௸, 56
- = ௸, 529
- = ௸, 741
- = ௸, 878
- = ௸, 883
- = ௸, 1009;
- = தனது<6-ஆம் வேற்றுமைத் தொகை>, 17
- = ௸, 69
- = ௸, 116
- = ௸, 161
- = ௸, 186
- = ௸, 244
- = ௸, 251
- = ௸, 268
- = ௸, 272
- = ௸, 281
- = ௸, 293
- = ௸, 318
- = ௸, 327
- = ௸, 373
- = ௸, 387
- = ௸, 436
- = ௸, 471
- = ௸, 535
- = ௸, 608
- = ௸, 615
- = ௸, 619
- = ௸, 630
- = ௸, 736
- = ௸, 758
- = ௸, 776
- = ௸, 838
- = ௸, 1102;
- = தன்கண்<7-ஆம் வேற்றுமைத் தொகை>, 157;
- = தனக்கு உதவும் (துணை)<4-ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை>, 875.
- தனக்கு
- = தனக்கு, 07;
- = தன்பொருட்டு, 847.
- தனி
- = பிரிந்திருந்து, 1296;
- = துன்பமிகுதி தலைவன்கண் இன்றித் தன்கண்ணேயாதல் கூறுதல்[தனிப்படர் மிகுதி], அதி.120.
- தனித்து
- = தனியாகி, 338.
- தனிமை
- = ஒன்றியான தன்மை, 814.
- தன்கண்
- = தன்னிடத்தில், 794.
- தன்மை
- = வகுப்பு, 767;
- = இயல்பு, 1144.
- தன்மையவர்
- = இயல்பினையுடையவர், 855.
- தன்மையான்
- = இயற்கையுடையவன், 511.
- தன்னின்
- = தன்னைக்காட்டிலும், 250
- = ௸, 603.
- தன்னை
- = தன்னை, 206
- = ௸, 208
- = ௸, 209
- = ௸, 250
- = ௸, 293
- = ௸, 305
- = ௸, 439
- = ௸, 474
- = ௸, 974
- = ௸, 978
- = ௸, 1319.
திருக்குறள்அகரமுதலி தகரவரிசை முற்றும்
தொகுஅ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ-
க- கா,கி,கீ - கு, கூ- கெ, கே, கை கொ, கோ, கௌ;- ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே, சொ, சோ; ஞா; தா, தி, தீ- து, தூ, தெ, தே- தொ, தோ; [[]][[]] [[]]
திருக்குறள் பரிமேலழகர் உரை [[]] [[]] [[]] [[]] [[]]