திருக்குறள்அகரமுதலி கொகரவரிசை

திருக்குறள் அகரமுதலி கொகர வரிசை தொகு

கொகரம் தொகு

கொ


கொக்கு
= கொக்கு எனும் பறவை, 490.
கொடிது
= தீயது, 279, 551.
கொடிய
= கொடுமை செய்கின்றன, 1169.
கொடியர்
= தீயவர், 1236.
கொடியார்
= தீயவர், 1169, 1217, 1235.
கொடியாரை
= தீயவரை, 550.
கொடியார்க்கு
= தீயவர் என்கின்றவருக்கு (கொடியரல்லர் என்பது தோன்ற நின்ற குறிப்புச் சொல்), 1237.
கொடிறு
= கதுப்பு = தாடை, 1077.
கொடு
= (கிளையைப் பற்றிக்)கொண்டு, 1264.
கொடுக்கும்
= எதிர் முகமாகாள், 924
கொடுத்தல்
= தருதல், 525, 725.
கொடுத்து
= தந்து, 703, 794, 867, 925.
கொடுப்பது
= கொடுத்தல், 166.
கொடுப்பதூஉம்
= (பிறர்க்குத்)தருவது(ம்), 1005.
கொடும்
= [கொடும்புருவம்] வளைவாகிய கொடிய(புருவங்களும்), 1086;
= [கொடுங்கோன்மை] அரசனாற் செய்யப்படும் முறையினது கோடுதற்றன்மை, அதி.56.
கொடுமை
= கொடிய செயல், 1235.
கொடுமையின்
= தீமைக்குமேலே, 1169.
கொடை
= கொடுத்தல், 390.
கொடையான்
= கொடையுடையவன், 526.
கொட்க
= புலப்படும்படியாக, 663.
கொட்கின்
= புலப்படுமாயின், 663.
கொட்பு
= திரிபு (வேறுபடுதல்), 789.
கொண்கன் தொகு
கொண்கன்
= கணவன், 1186, 1266, 1285.
கொண்கனை
= கணவனை, 1265, 1283.
கொண்ட
= (உள்ளே) சேமித்துவைக்கப்பட்ட, 745;
= கொண்டவை (=பொருள்கள்), 659.
கொண்டவன்
= பூண்டிருந்தவன், 307.
கொண்டனள்
= (கண்ணீர்)மிக்காள், 1315.
கொண்டார்
= அடைந்துள்ளவர், 253;
= (காதல்)செய்யப்பட்டவர், 1195;
= (காவல்)கொண்ட காதலர், 1205;
= (தலைமாறாகக்)கொண்டு போயினார், 1183.
கொண்டாரின்
= (மேற்)கொண்டொழுகுவாரைக் காட்டிலும், 551.
கொண்டான்
= கொண்டவன் [தற் கொண்டான்] = கணவன், 51, 56.
கொண்டு
= அடைந்து, கைக்கொண்டு, 603, 775. 831, 874, 921, 974, 1082, 1095, 1146;
= [மேற்கொண்டு], 22, 326, 551, 845.
கொம்பர் தொகு
கொம்பர்
= சிறுகிளை 476.
கொல் தொகு
கொல்
= அசைநிலை(இ.சொல்), 2, 85, 211, 345, 1207, 1211;
= ஐயம், 70, 99,, 188, 189, 228, 263, 318, 340, 930, 932, 1004, 1029, 1048, 1070, 1081, 1103, 1157, 1165, 1171, 1197, 1203, 1204, 1205, 1220, 1225, 1267, 1307, 1328;
= [கொல்குறும்பும்] கொலைசெய்கின்ற(குறும்பர்), 735.
கொலை
= கொல்லுதல் தொழில், 325, 329, 551, 1224.
கொலையின்
= கொலையால், 550.
கொல்க
= களைக, 879.
கொல்ல
= நைய நெருக்கியவழி, 1078.
கொல்லா
= கொலை செய்யாத, 984.
கொல்லாது
= கொலையைச் செய்யாது, 256.
கொல்லாமை
= கொலைசெய்யாதிருத்தல், 254, 321, 323, 324, 325, 326;
= [கொல்லாமை] ஐயறிவுடையன முதல் ஓரறிவுடையன ஈறாய உயிர்களைச் சோர்ந்துங் கொல்லுதலைச் செய்யாமை, அதி.33.
கொல்லான்
= கொல்லாதவனாய், 260.
கொல்லி
= கொல்லுதலையுடையது, 306.
கொல்லும்
= கெடுக்குங் கடுந்துன்பங்களை எய்துவிக்கும், 305;
= கெடுக்கும், 532;
= களையும், 879;
= [கொல்லும் சினத்தின்]கொன்று கொண்டெழும்(சினத்தை), 304;
= [கொல்லும் படை]கொல்லும்(படை), 1228.
கொழுநன் தொகு
கொழுநன்
= கணவன், 55.
கொள் தொகு
கொள்
= கொள்கின்ற, 1029, 123.
கொள
= அடைய, 583;
= (கொண்டு என்பது திரிந்தது) உடன்கொண்டு, 1244.
கொளப்பட்டேம்
= நன்கு மதிக்கப்பட்டோம், 699.
கொளல்
= பெறுதல், 134, 401, 443, 633, 679, 794, 867, 925, 986, 1026;
= ஏற்றல், 222;
= அறிதல், 677;
= கொள்க= பெறுக, 441, 442, 445, 530, 588, 703, 714, 795;
= அறிக, 279, 504, 724;
= நன்கு மதிக்கத்தக்க, 702;
= கொள்ளற்க, 720.
கொளலின்
= அடைவதை விட, 450.
கொளற்கு
= கொள்ளுதற்கு, 745.
கொளின்
= கொண்டால், 630, 836, 872, 939.
கொளீஇ
=[மேற்கொளீஇ] (மேற்)கொள்ளப்பண்ணி, 938.
கொள்க
= அடைக, 161, 875.
கொள்கை
= கடைப்பிடி, ஒழுக்கம், 1019.
கொள்கையார்
= விரதங்களையுடையவர், 899.
கொள்பவர்
= [மேற்கொள்பவர்](ஏற்றுக்)கொள்பவர், 713.
கொள்பவர்க்கு
= [மேற் கொள்பவர்க்கு](மேற்)கொண்டொழுகுவார்க்கு, 981.
கொள்பவன்
= அடைபவன், 873.
கொள்வது
= [மேற்கொள்வது] முயல்வது, 262;
= மெற்கொண்டு போதுகின்றது, 1055.
கொள்வர்
= கருதுவர், 104, 433;
= ஏற்றுக் கொள்வர், 680.
கொள்வார்
= (விலையைப்)பெறும் விலைமகளிர், 813;
= கொண்டுபோய்ப் பயன்பெறுவர், 1009.
கொள்வாரோடு
= அறியவல்லாரோடு, 704.
கொள்வு
= [கொள்வற்று]கொள்வதை(ஒத்திருந்தது), 1187.
கொள்வேம்
= பெறுவோம், 976.
கொள்ளற்க
= கொள்ளாதொழிக, 798, 827, 872.
கொள்ளா
= ஏற்றுக் கொள்ளாத, 1064.
கொள்ளாக்கடை
= செய்யாதபோது, 1195.
கொள்ளாத
= பொருந்தாதவை, 470;
= விரும்பாதவை, 699.
கொள்ளாதான்
= அடையாதவன், 792.
கொள்ளாது
= அடையாது, 470, 627, 1016.
கொள்ளார்
= ஒப்பமாட்டார், 404.
கொள்ளும்
=அடைகின்ற(அருகிய நோக்கம்), 1092.
கொற்றம்
= வெற்றி, 583.
கொன்ற
= சிதைத்த, 110;
= [கொன்றாங்கு]கெடுப்பது (போல), 532.
கொன்றது
= [கொன்றது போலும்] கொன்றது(போன்று இன்னாதவற்றைச் செய்தது), 1048.
கொன்றார்க்கு
= சிதைத்தவருக்கு, 110.
கொன்றிட
= வெட்டிச் சாய்க்க, 1030.
கொன்று
= மடித்து, 328;
= அழித்து, 638;
= [கொன்றன்ன]கொன்றாலொத்த, 109.
கொகர வரிசை முற்றும்

கோகார வரிசை தொகு

கோகாரம்

கோ


கோடல்
= கொள்ளுதல், 646;
= (முடித்துக்)கொள்க, 678;
= [பெரியோரைத் துணைக்கோடல்] அதி.45.
கோடா
= கொணாமல் = செப்ப(முடையவராய்),1080.
கோடாது
= கோணாது, 520, 546.
கோடாமை
= கோணாதிருத்தல், 115, 118, 520.
கோடி
= நூறு நூறாயிரம், 337, 377, 639, 954, 1005;
= கோடிமடங்கு, 816, 817, 1061;
= முறைதப்ப, 554, 559.
கோடு
= (யாழின்)வளைவு, 279;
= [கோடு கொடேறும்] கிளை(கொண்டு ஏறும்), 1264;
= கரை, 523.
கோட்டது
= மருப்பினையுடையது, 599.
கோட்டம்
= கோணுதலுடைமை, 119.
கோட்டி
= சபை, 401, 720.
கோட்டு
= [கோட்டுப்பூ] கொடுதலைச் செய்யும் = வளையமாகிய(பூ மாலையை), 1313.
கோமான்
= மன்னவன், 25.
கோல்
= [ஊற்றுக்கோல்] (ஊன்றுந்)தடி, 415;
= துலம் = தராசு, 118;
= [செங்கோல்] முறைசெய்யுங்கோல், 390, 542, 543, 544, 545, 546, 554;
= [கொடுங்கோல்] கொடிய ஆட்சி, 558, 570;
= அளவுகோல், 710, 796;
= அஞ்சனக்கோல், 1285.
கோலன்
= [வெங்கோலன்] (கொடுங்)கோலையுடையவன், 563ழ
கோலொடு
= செங்கோலுடன், 552.
கோள்
= [கோட்டகத்து] கொள்ளுதல், 9, 220, 780, 1059;
= துணிவு, 311, 312, 646, 662.
கோறல்
= கொல்லுதல், 254, 321.
கோன்மை
= கோலையுடைமை = (செவ்விய)ஆட்சியுடைமை, 556;
= [செங்கோன்மை] அதி. 55;
= [கொடுங்கோன்மை] அதி. 56.
கோகார வரிசை முற்றும்

கௌகார வரிசை தொகு

கௌகாரம்

கௌ

கௌவை
= அலர் = தூற்றுதல், 1143, 1147, 1150.
கௌவையால்
= அலரால், 1148.
கௌகார வரிசை முற்றும்
அக இணைப்பான்கள் தொகு

குட

அகர, ஆகார வரிசைகள்- இகரம்- ஈகாரம்- உகரம்- ஊகாரம்- எகரம்- ஏகாரம்- ஒகரம்- ஓகாரம்-

ககரம்-காகாரம், கிகரம், கீகாரம்- குகரம், கூகாரம்- கெகரம், கேகாரம், கைகாரம்-,கே,கை.

சகரம், சாகாரம், சிகரம், சீகாரம், சுகரம், சூகாரம்- செகரம்- திருக்குறள்அகரமுதலி சேகாரவரிசை திருக்குறள்அகரமுதலி சீகாரவரிசை ப-| பா,பி,பீ-| [[]] [[]] [[]] [[]]