திருக்குறள்அகரமுதலி கெகரவரிசை
திருக்குறள் அகரமுதலி கெகர வரிசை
தொகுகெகரம்
தொகுகெ
- கெட
- = அழிய, 359, 360, 1266.
- கெடல்
- = தவிர்ந்திருத்தல், 612;
- = முற்றக்கெடுதல், 856, 893.
- கெடாஅ
- = (உரிமை)அறாமல், 809.
- கெடின்
- = கெட்டால், 309;
- = இல்லையாயின், 854.
- கெடு
- = கெடுதல் = வறுமை, 117.
- கெடுக
- = அழிவானாக, 1062.
- கெடுக்கும்
- =[கெடுக்கும் தகைமையவர்]அழிக்கும்(பெருமையுடையவர்), 447;
- = போக்கும், 937, 1043.
- கெடுதல்
- = அழிதல், 208.
- கெடுத்து
- = அழித்து, 938.
- கெடுப்பது
- = அழிவுசெய்வது, 15.
- கெடுப்பார்
- = (பகையாய்)அழிப்பவர், 418.
- கெடும்
- = அழியும் = இல்லையாகும், 109, 134, 166, 176, 283, 435, 437, 448, 466, 474, 479, 480, 548, 563, 566, 569, 601, 609, 614, 622, 763, 899, 1028, 1056, 1069;
- = கெடாநின்றது 1203;
- = [கெடுங்காலை] கெடுகின்ற(காலத்தில்), 799;
- = [கெடும் நீரார்] இறக்கும்(இயல்பினையுடையார்), 605;
- = உளவாகா, 360;
- = இழக்கும், 553, 564.
- கெடுவல்
- = அழியக்கடவேன், 116.
- கெட்டவிடத்து
- = கெட்டதாயின், 736.
- கெட்டாரை
- = அழிந்தவரை, 539,
- கெட்டார்க்கு
- = அழிந்தவர்க்கு, 15;
- = மானமழிந்தவருக்கு, 1293.
- கெட்டான்
- = இறந்தான், 967.
- கெழீஇ
- =[கெழீஇயிலர்] நல்வினை(யிலார்), 1194.
- கெழு
- = [கொழுதகை]உரிமை, 804;
- = [கெழுதகைமை]உரிமை, 700, 802, 803, 808.
கேகார வரிசை
தொகுகேகாரம்
தொகுகே
- கேடன்
- =[அருங்கேடன் = கேடு அரியன்]= கேட்டினையுடையவன், 210.
- கேடு
- = அழிவு, 32, 115, 165, 169, 220, 235, 400, 478, 642, 700, 736, 858, 859, 889;
- = ஆற்றல் இழத்தல், 307;
- = அழிவுதரும் வினை, 204, 791.
- கேட்க
- = கேட்கவேண்டும், 414, 416, 695;
- = வினவ, 587.
- கேட்கும்
- = ஏற்றுக்கொள்ளும், 648.
- கேட்ட
- = செவியேற்ற, 69, 1076.
- கேட்டல்
- = செவியேற்றல், 65.
- கேட்டார்
- = (நட்பாய்) ஏற்றுக்கொண்டவர், 643.
- கேட்டால்
- = [அருங்கேட்டால்] கெடுதியோடு =[அருங்கேட்டால்] கேடின்மையோடு, 732.
- கேட்டின்
- = கெடுதியின்கண், 796.
- கேட்டு
- = செவியேற்று, 1101.
- கேட்பர்
- = செவியேற்பர், 607.
- கேட்பின்
- = கேட்டால், 418, 423, 697.
- கேணி
- = கிணறு = கிணற்று நீர், 396.
- கேண்மை
- = நட்பு = சுற்றமாய் நடந்துகொள்ளும் தன்மை, 106, 441, 519, 709, 782, 792, 797, 799, 800, 809, 811, 812, 815, 818, 822, 839.
- கேண்மையவர்
- = நட்புடையவர், 807.
- கேண்மையார்
- = நண்பரது, 809.
- கேள்
- = நெருங்கிய நண்பன், 808, 882;
- = காதலன், 1222.
- கேளா
- = கேட்காத, 418, 808.
- கேளாதவர்
- = கேட்காதவர், 66.
- கேளாது
- = கேட்காமல், 804;
- = நீதி நூலைக் கடந்து, 893.
- கேளார்
- = (பகையாய்) ஏற்றுக்கொள்ளாதவர், 643.
- கேளிர்
- = நண்பர், சுற்றத்தார், 187, 615;
- = காதலர், 1267.
- கேள்வி
- = கேட்டல், 413;
- = [கேள்வி] கேட்கப்படு நூற்பொருள்களைக் கற்றறிந்தார் கூறக்கேட்டல், அதி.42.
- கேள்வியர்
- = கேள்வியுடையவர், 419.
- கேள்வியவர்
- = கேள்வியுடையவர், 417.
- கேள்வியால்
- = கேட்டலால், 418.
கைகார வரிசை
தொகுகைகாரம்
கை
- கை
- = கை எனும் உறுப்பு, 64, 178, 260, 307, 371, 614, 727, 774, 788, 838, 879, 1035, 1036, 1077, 1157;
- = அளவு, 567, 1271;
- = உரிய ஒழுக்கம், 832;
- = செய்யும் முறைமை, 836;
- = கைத்தொழில், 935.
- கைகளை
- = கரங்களை, 1238.
- கைகூடும்
- = உண்டாவதாம், 269;
- = (கை)அகத்ததாம், 484.
- கைதூவேன்
- = கையொழியேன் = முயற்சி ஒழியேன், 1021.
- கைத்து
- = கைப்பொருள் = செல்வம், 593, 758.
- கைப்ப
- = கசக்கும்படியாக = பொறாதாக, 389.
- கைம்மாறு
- = எதிர் உதவி, 211;
- = தலைமாறு = விரோதம், 1183.
- கையர்
- = கைகளையுடையவர், 1077.
- கையறியா
- = (செய்வகை)அறியமாட்டாத (கை=செய்வகை), 836.
- கையறியாமை
- = (செய்வகை)அறியமாட்டாமை (கை=செய்வகை), 925.
- கையால்
- = கரத்தால் = கையைக் காட்டி, 894.
- கையாறு
- = [கையாறா] துன்பம் = (தொழிலறுதல்), 627.
- கையிகந்த
- = அளவுமீறிய = குற்றத்தின் மிக்க, 567.
- கையிகந்து
- = கைகடந்து, மீறி, 1271.
- கையுள்
- = கையகத்து, 828.
- கைவிடல்
- = ஏற்காது ஒழிதல், 450, 1245.
- கைவிடுக
- = ஒழிக, 928.
- கைவிடுவார்
- = விட்டு நீங்குகின்றவர், 79.
அக இணைப்பான்கள்
தொகுஅகர, ஆகார வரிசைகள் இகரம் ஈகாரம் உகரம் ஊகாரம் எகரம் ஏகாரம் ஒகரம் ஓகாரம் ககரம்- குகரம், கூகாரம்- கொகரம், கோகாரம், கௌகாரம்- சகரம்,சாகாரம், சிகரம்,சீகாரம்,சுகரம்,சூகாரம்- செகரம்-சேகாரம், சொகரம்,சோகாரம்- ஞாகாரம் திருக்குறள்அகரமுதலி தகரவரிசை திருக்குறள்அகரமுதலி தாகாரவரிசை