திருக்குறள்அகரமுதலி குகரவரிசை
திருக்குறள் அகரமுதலி குகர வரிசை
தொகுகு
தொகுகு
அக இணைப்பான்கள்
தொகு- கு
- = (4-ஆம் வேற்றுமை உருபு) கொடைப்பொருளில்:- 12, 15, 101, 218, 221, 231, 232, 361, 412, 905, 1006, 1007, 1029, 1035, 1066, 1077, 1089, 1142, 1161, 1192, 1195, 1225;
- = பகைப்பொருளில்:- 203, 238, 311, 313, 608, 623, 851, 858, 861, 894, 924, 1050, 1102, 1225, 1231, 1291, 1293;
- = நேர்ச்சிப் பொருளில்:- 7, 8, 20, 41, 42, 59, 65, 72, 73, 79, 94, 120, 122, 125, 149, 156, 190, 261, 267, 345, 354, 377, 387, 390, 400, 412, 414, 429, 432, 436, 449, 452, 453, 456, 472, 481, 505, 518, 527, 533, 534, 543, 557, 570, 572, 573, 575, 578, 582, 618, 647, 658, 664, 693, 701, 733, 741, 745, 775, 789, 802, 808, 823, 843, 864, 865, 869, 918, 932, 942, 945, 960, 971, 972, 987, 988, 989, 999, 1005, 1012, 1014, 1026, 1052, 1066, 1070, 1099, 1108, 1115, 1124, 1154, 1180, 1199, 1260, 1269, 1272, 1288, 1305, 1319, 1321;
- = தகவுப் பொருளில்:- 4, 18, 24, 30, 40, 70, 76, 86, 95, 110, 112, 115, 118, 125, 139, 148, 235, 245, 247, 252, 262, 269, 290, 299, 318, 328, 344, 347, 368, 382, 383, 391, 396, 462, 492, 515, 533, 556, 604, 667, 682, 726, 760, 762, 766, 781, 868, 910, 953, 981, 998, 1015, 1024, 1032, 1120, 1123, 1124, 1131, 1193, 1211, 1281, 1299, 1330;
- = அதுவாதல் பொருளில்:- 138, 261, 802, 1084, 1106, 1113;
- = பொருட்டு என்னும் பொருளில்:- 67, 212, 263, 317, 319, 679, 684, 1023, 1088, 1136, 1181, 1212, 1228, 1291;
- = முறைப்பொருளில்:- 149, 388, 790;
- = ‘ஆதி’ப் பொருளில்:- 7, 26, 31, 68, 71, 80, 178, 243, 340, 346, 352, 353, 392, 421, 454, 457, 458, 476, 538, 600, 627, 636, 689, 690, 791, 863, 877, 986, 1003, 1028, 1076, 1117, 1129, 1151, 1162, 1176, 1181, 1200, 1237;
- = கு- செய்யுள் விகாரத்தால் தொக்கவை, 1268, 1326;
- தொகை:- பகைப்பொருளில்:- 204, 855, 1091;
- நேர்ச்சிப் பொருளில்:- 399, 802, 1006, 1021, 1082;
- தகவுப் பொருளில்:- 60, 225, 716, 720, 847, 904, 1036, 1295, 1326;
- பொருட்டுப் பொருளில்:- 157, 506, 1149;
- முறைப் பொருளில்:- 25, 70, 141, 147, 148, 875;
- ஆதிப் பொருளில்:- 25, 508, 585, 671, 714, 737, 738, 771, 834, 966, 967, 1031.
குடங்கருள்
தொகு- குடங்கருள்
- = குடிலுள், 890.
- குடம்பை
- = கூடு (உவம ஆகுபெயர்) = முட்டை, 338.
- குடி
- = மரபு, குடும்பம், 171, 601, 602, 603, 604, 609, 887, 888, 1022, 1023, 1025, 1028, 1030;
- = உயர் குடி, உயர்ந்த மரபு, 502, 681, 794, 952, 954, 957, 992;
- = (சினையாகுபெயர்) = நாடு, 381;
- = (பண்பாகு பெயர்) = குடியின்கண் பிறந்தவர், 955;
- = குடிமக்கள் = ஆட்சிக்கு உட்பட்டவர், 390, 542, 544, 549, 554, 632;
- = [குடிசெயல்வகை]=ஒருவன் தான் பிறந்த குடியை உயரச்செய்தலின் திறம். அதி.103.
- குடிக்கு
- = உயர்ந்த மரபிற் பிறந்தவருக்கு, 953.
- குடிமை
- = உயர்குடிப் பிறப்புடைமை, 133, 793;
- =[குடிமை]=உயர்ந்த குடியின்கட் பிறந்தாரது தன்மை, அதி.96.
- குடிமைக்கண்
- = உயர்குடிப் பிறப்புடையான்கண், 608.
- குடியை
- = குடும்பத்தை, 602;
- = குடிக்காகும் வினையை, 1024.
- குடியொடு
- = குடும்பத்தோடு, 898.
- குடும்பத்தை
- = குடியை, 1029.
- குடை
- = கவிகை, 1034.
குண
தொகு- குண
- = [குண நலம்]நற்குணங்களாலாகிய, 982.
- குணத்தான்
- = குணங்களையுடையவன், 9.
- குணம்
- = நற்பண்பு, 9, 29, 504, 1125.
- குணன்
- = நற்பண்பு, 793, 868.
குதித்தல்
தொகு- குதித்தல்
- = கடத்தல், 269.
- குத்து
- = (அலகாற்)கொத்துதல், 490.
- குரை
- = (இசைநிறை - அசைச்சொல்), 1045.
குலத்தில்
தொகு- குலத்தில்
- = உயர்குடியில், 959.
- குலத்தின்கண்
- = குடிப்பிறப்பினிடத்தில், 958.
- குலம்
- = குடிமரபு, 956, 960, 1019.
- குலன்
- = குடிப்பிறப்பு, 223.
குவளை
தொகு- குவளை
- = கருந்தாமரைப்பூ, 1114.
- குழல்
- = புல்லாங்குழலிசை, 66, 1228.
- குழவி
- = குழந்தை, 757.
- குழாத்து
- = [குழாத்தற்று](காண்போர்)கூட்டம், 332.
- குழாஅத்து
- = அவையின்கண், 840.
- குழு
- = கூட்டம், 735.
- குழை
- = காதணி, 1081.
- குழையும்
- = வாடும், 90.
- குள
- = [குளவளா] குளத்தினது(பரப்பு), 523.
- குளித்தானை
- = முழுகியவனை, 929.
- குறி
- = (குறித்த அளவு) [குறியெதிர்ப்பை] = ஓர் அளவு குறித்து வாங்கி அவ்வாங்கிய அளவே எதிர் கொடுப்பது, 221;
- = நேர் இலக்கு, 1095.
- குறித்த
- = நிலைக்களனாகக் கொண்டுவிடா, 1013.
- குறித்தது
- = கருதியது, 704;
- = நிலைக்களனாகக் கொண்டுவிடாது, 1013.
- குறித்தமையான்
- = கருதியமையால், 827.
- குறிப்பின்
- = மெய்ப்பாட்டினால், அடையாளத்தால், 703;
- = காட்சியால் = அறிவால், 705.
- குறிப்பு
- = இங்கிதம் = மெய்ப்பாட்டால் விளங்கும் கருத்து, 696, 703, 705, 1253;
- = (கருதிய)கருமம், 701;
- = செயல்கள், 1097;
- =[குறிப்பறிதல்] = அரசர் கருதியவதனை அவர் கூறாமல் அறிதல், அதி.71.
- =[குறிப்பறிதல்] = தலைமகன் தலைமகள் குறிப்பினை அறிதலும், தோழி குறிப்பினையறிதலும், அத்தோழி அவ்விருவர் குறிப்பினை அறிதலுமாம், அதி.110;
- =[குறிப்பறிவுறுத்தல்] = தலைமகன், தலைமகள், தோழி என்றிவர் ஒருவர் குறிப்பினை ஒருவர்க்கு அறிவுறுத்தல், அதி.128.
- குறுகுதல்
- = நெருங்குதல், 820.
- குறுகும்
- = நெருங்கும்(போது), 1104.
- குறும்
- = சிறிய(வளையினையுடையாள்), 1135.
- குறும்பு
- = குறும்பர் = சதிசெய்யும் கூட்டத்தார், 735.
- குறை
- = இன்றியமையாப் பொருள், 612;
- = சந்து = சந்தி, 680;
- = உற்ற குறை, 908.
- குறையின்
- = குறைந்தால், 941.
- குற்ற
- =[குற்றப்படின்]குற்றங்களில்(தாழுமானால்) (குற்றம் பார்), 272.
- குற்றத்தார்க்கு
- = பிழைபுரிந்தவர்க்கு, 924.
- குற்றத்தின்
- = பிழைகளினின்றும் (குற்றம்பார்), 502.
- குற்றம்
- = பிழை, 171, 188, 190, 433, 434, 436, 504, 549, 604, 609, 793, 846, 868, 957, 980, 1025;
- = மூவகைத்துன்பம், 1029;
- =[குற்றங்கடிதல்] (காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம் எனப்பட்ட/காம க்ரோத லோப மோக மத மாற்சரியம் எனும்) குற்றங்கள் (ஆறனையும் அரசன் தன்கண்) நிகழாமற் கடிதல், அதி.44.
- குன்ற
- = தவற, 134;
- = கெட, 898;
- = தாழ, 961.
- குன்றல்
- = குறைதல், 778;
- = தேய்தல், 811.
- குன்றா
- = குறையாத, 601, 736, 793.
- குன்றி
- = குன்றி மணி, 277, 965.
- குன்றிக்கால்
- = குறைந்தால், 14.
- குன்றின்
- = குறைந்தால், 990;
- = மலைபோல, 965.
- குன்று
- = மலை (சிறுமலை), 29, 758, 898.
- குன்றும்
- = குறையும், 17, 239, 560.
- குன்றுவ
- = கீழான செயல்கள், 954, 965.
- குன்றுவர்
- = தாழ்வர், 965.
திருக்குறள்அகரமுதலி கூகாரவரிசை
தொகுகூகாரம்
கூ
தொகு- கூகையை
- = கோட்டானை, 481.
- கூடலில்
- = புணர்ச்சியின்கண், 1327, 1328.
- கூடற்கண்
- = புணர்ச்சியின்கண், 1284.
- கூடா
- = பொருந்தாத[கூடாவொழுக்கம்] = (தவத்தோடு பொருந்தாததாய) தீய (காம) ஒழுக்கம், அதி.28;
- =[கூடாநட்பு] = (தமக்கு வாய்க்குமிடம் பெறுந்துணையும்)புறத்தாற் கூடியொழுகுவார் நட்பு, அதி.83.
- கூடாது
- = சேராது, 887.
- கூடி
- = நெஞ்சு ஒத்து, 765, 1330.
- கூடிய
- = மேற்பொருந்திய, 1264.
- கூடியார்
- = இடைவிடாது எய்தியவர், 1109.
- கூடின்
- = சேர்ந்தால், 887.
- கூடும்
- =[கைகூடும்] உண்டாவதாம், 269;
- = (கை)அகத்ததாம், 484.
- கூடுவேம்
- = சேரக்கடவோம், 1310.
- கூத்து
- = நாடகம், 332.
- கூப்பி
- = கும்பிட்டு, 260.
- கூம்பல்
- = குவிதல், 425.
- கூம்பும்
- =[கூம்பும் பருவத்து](வினைமேற்)செல்லாதிருக்கும்(காலத்தில்), 490.
- கூர்
- =[கூர்ங்கோட்டது] கூர்மையாகிய(மருப்புடையது/கொம்புடையது), 599.
- கூரியது
- = கூர்மையானது, 759.
- கூர்ந்து
- = மிகுந்து (= மிகுந்தால்), 1010
- கூர்மையரேனும்
- = நுட்பமதியுடையவராயினும், 997.
- கூலி
- = கூலியளவு, 619.
- கூழ்
- = சோறு, 64;
- = உணவிற்கேதுவாகிய பொருள், 381, 554;
- =[பைங்கூழ்] பயிர், 550.
- கூழ்த்து
- = உணவினையுடையது, 745.
- கூறப்படும்
- = சொல்லப்படும், 186.
- கூறல்
- = சொல்லுதல், 100, 638, 1236;
- =[இனியவை கூறல்] அதி.10.
- கூறாமை
- = சொல்லவேண்டாமல், 701, 704;
- =[புறங்கூறாமை] அதி. 19.
- கூறான்
- = கூறமாட்டான், 181.
- கூறி
- = சொல்லி, 183.
- கூறிவிடும்
- = திண்ணமாகச் சொல்லிவிடும், 960.
- கூறின்
- = சொன்னால், 22, 933.
- கூறும்
- =[கூறும் ஆக்கம்] சொல்லும் (ஆக்கத்தை), 183;
- =[மீக்கூறும்] (உயர்த்திச்) சொல்லும், 386.
- கூறுவான்
- = சொல்லுவான், 186.
- கூற்றத்தை
- = இயமனை/எமனை, 894.
- கூற்றம்
- = இயமன்/எமன், 269, 1085.
- கூற்று
- = இயமன்/எமன், 326, 765, 1050, 1083;
- =[கூற்றது] = திறத்தது = கூறுபாடு உடையது, 950.
- கூன்
- =[கூன்கையர்] வளைவாகிய/வளைந்த, முறுக்கியதான, 1077.
அக இணைப்பான்கள்
தொகுபார்க்க:
ககரம்- காகாரம், கிகரம், கீகாரம் -கி, கீ. குகரம், கூகாரம்- திருக்குறள்அகரமுதலி கெகரவரிசை திருக்குறள்அகரமுதலி கைகாரவரிசை திருக்குறள்அகரமுதலி கொகரவரிசை திருக்குறள்அகரமுதலி கோகாரவரிசை திருக்குறள்அகரமுதலி கௌகாரவரிசை [[]] [[]]