திருக்குறள்அகரமுதலி துகரவரிசை

திருக்குறள்அகரமுதலி துகரவரிசை

தொகு

துகரம்

தொகு

து

துகில்

= ஆடை, 1087.

துச்சு
= ஒதுக்கு[துச்சில்], 340.
துஞ்சல்
= உறங்குதல், 1049.
துஞ்சா
= உறங்கமாட்டா, 1179.
துஞ்சின்
= உறங்கினால், 1212.
துஞ்சினார்
= உறங்கினவர்கள், 926.
துஞ்சும்
= உறங்குகின்ற(பொழுது)[துஞ்சுங்கால்], 1218.
துடைத்தவர்
= நீக்கினவர், 107.
துடைத்து
= நீக்கி, 615.

துணிக

தொகு
துணிக
= உறுதிகொள்க = தொடங்குக, 467.
துணிந்தபின்
= தொடங்கியபின், 467.
துணிவு
= முடிவு, 21
= ௸, 671|1|;
= முடிவுசெய்யப்பட்ட வினை, 671|2|;
= திட்பமுடையவராய்(துணிவு=கலங்காமை)[துணிவாற்றி], 669;
= ஆண்மை[துணிவுடைமை], 383
= அஞ்சாமை[துணிவுடைமை], 688.
துணை
= அளவு, 22
=௸, 87
=௸, 104
=௸, 144
=௸, 156
=௸, 397
=௸, 433
=௸, 1282;
= ஒப்புமை, 310;
= உதவி, 36
=௸, 41
=௸, 42
=௸, 51
=௸, 76
=௸, 132
=௸, 242
=௸, 414
=௸, 460
=௸, 471
=௸, 497
=௸, 635
=௸, 651
=௸, 862
=௸, 875
=௸, 1168
=௸, 1222
=௸, 1263
=௸, 1299;
= துணைவர், 1234;
= [வாழ்க்கைத் துணைநலம்], அதி. 6;
= [பெரியோரைத் துணைக்கோடல்], அதி. 45.
துணைத்து
= அளவினையுடையது, 87.
துணைமை
= உதவியாந்தன்மை, 688.
துணையர்
= பெருமையுடையவர்[எனைத்துணையர்], 144.
துணையாரை
= துணையாந் தன்மையுடையவரை, 447.

துப்பார்க்கு

தொகு
துப்பார்க்கு
= உண்பவர்க்கு, 12.
துப்பின்
= வலிவினையுடைய, 895;
= பகைமைக்கண், 1165.
துப்பு
= பற்றுக்கோடு, 106;
= வலிமை, 862.
துப்புரவு
= நுகரப்படுவன, 263
= ௸, 378
= ௸, 1050.

தும்மல்

தொகு
தும்மல்
= தும்முதல், 1203
= ௸, 1253.
தும்மினார்
= தும்மினார், 1312.
தும்மினீர்
= தும்மினீர், 1317.
தும்மினேன்
= தும்மினேன், 1317.
தும்மு
= தும்மல், 1318.

துயர்

தொகு
துயர்
= துன்பம், 792
= ௸, 1165
= ௸, 1256
= ௸, 1275.
= ௸,
துயரம்
= துன்பம், 792.
துயில்
= தூக்கம், 605.
துயிலின்
= துயில்போல, 1103.
துயிற்றி
= உறங்கப்பண்ணுதலால், 1168.
துய்க்க
= உண்க, 944.
துய்த்தல்
= நுகர்தல், 377.
துய்ப்பது
= நுகர்வது, 1005.
துரீஇ
= தேடினாற்(போன்றது)[துரீஇயற்று], 929.
துலை
= ஒப்பு, 986.
துவர
= மிக, 944;
= முற்ற, 1050.
துவ்வாதவர்க்கு
= நல்கூர்ந்தார்க்கு = ஏழைகட்கு, 42.
துவ்வாமை
= நுகராமை = ஏழ்மை, 94.
துவ்வாய்
= நுகரக்கருதாய், 1294.
துவ்வான்
= துவ்வினைச் செய்யான் = வலியிலன், 862;
= நுகரமாட்டான், 1006.
துளக்கு
= நடுக்கம் = நிலைபெறாமை, 699.
துளங்காது
= அசைதலின்றி = சோம்பலின்றி, 668.
துளி
= மழை, 16
= ௸, 557.
துறக்க
= பற்றறுக, 342.
துறந்தபின்
= துறவு கொண்டால், 342.
துறந்தமை
= பிரியலுற்றமை, 1157.
துறந்தார்
= பற்றினைவிட்டவர், 22
= ௸, 276
= ௸, 348
= ௸, 586;
= நீங்கினவர், 310;
= பிரிந்தவர், 529;
= பிரிந்து போயினார், 1188.
துறந்தாரின்
= பற்றற்றவர்போல், 159.
துறந்தாரை
= நீங்கிப் போனவரை, 1250.
துறந்தார்க்கு
= களைகணானவரால் துறக்கப்பட்டார்க்கு, 42;
= துறவிகட்கு, 263.
துறப்பர்
= நீக்குவர், 1017.
துறப்பார்
= துறவுகொள்வர், 378.
துறவற்க
= விடாதொழிக, 106.
துறவாமை
= துறவுகொள்ளாதிருத்தல், 1050.
துறவார்
= துறவுகொள்ள மாட்டார்கள், 276;
= விடமாட்டார்கள், 806;
= நீக்கார், 1017.
துறவு
= பற்று அறுதல்;
= பற்று அறுதல்[துறவு], அதி. 35;
[நாணுத்துறவுரைத்தல்], அதி. 114;
[துறவறவியல்] = வீடுபேற்றின் பொருட்டுத் துறந்தார்க்கு உரித்தாய அறம், அதி. 25 முதல் 37 வரை.
துறைவன்
= சேர்ப்பன் = காதலன், 1157
= ௸, 1277.
துனி
= வெறுப்பு, 769;
= (வெறுப்பைத் தருதலால்)வறுமை, 1010;
= உயிர்வாழ்வதில் வெறுப்பு, 1223;
= புலவி, 1294;
= முதிர்ந்த கலாம், 1306
= ௸, 1322.
துனித்து
= ஊடி, 1290.
துன்பங்கள்
= துயரங்கள், 1045.
துன்பத்திற்கு
= துன்பம் வந்தால் நீக்குதற்கு, 1299.
துன்பத்துள்
= துயரத்துள், 106
= ௸, 368
= ௸, 854.
= முயற்சியால் வரும் இடுக்கணில், 629.
துன்பம்
= துயரம், 267
= ௸, 368
= ௸, 369
= ௸, 615
= ௸, 628
= ௸, 629
= ௸, 669
= ௸, 854
= ௸, 940
= ௸, 1052
= ௸, 1166
= ௸, 1223
= ௸, 1307.
துன்பு
= துயரம், 94
துன்னற்க
= செய்யாதொழிக, 209.
துன்னா
= கூடாமல், 250.
துன்னாமை
= மேவாமை, 316.
துன்னி
= பொருந்திநின்று, 494.
துன்னியார்
= செறிந்தவர் = நண்பர், 188;
= பொருந்திச்சென்ற அரசர், 494.

தூகாரம்

தொகு

தூ

தூ
= பற்றுக்கோடு, 455.
தூஉய்மை
= வான்மை = வீடு, 364.
தூக்கம்
= வினையை நீட்டித்தல், 668.
தூக்காத
= வசையறுக்காத, 480.
தூக்கார்
= ஆராய்தலிலராய், 103.
தூக்கி
= அளந்தறிந்து, 471
= ௸, 912.
தூக்கின்
= ஆராயின், 103.
தூக்கும்
= வரையறுக்கும், 118
= ௸, 813.
தூங்கற்க
= நீட்டியாதொழிக, 672.
தூங்காது
= நீட்டியாமல், 672.
தூங்காமை
= விரைவுடைமை, 383.
தூங்கி
= நீட்டித்து, 672.
தூங்குக
= நீட்டிக்க, 672.
தூங்கும்
= தொங்குகின்றன, 1163.
தூண்
= கம்பம், 615
= ௸, 983.
தூண்டில்
= மீன் விழுங்குமுள், 931.
தூது
= தூது வார்த்தை, 681
= ௸, 682;
= தூதன், 685
= ௸, 686
= ௸, 690;
= சந்திவிக்கிரகங்கட்கு வேற்று வேந்தரிடைச் செல்வாரது தன்மை[தூது], அதி. 69.
தூதொடு
= தூதினைக் கொண்டு, 1211.
தூயார்க்கு
= தூய்மையுடையவர்க்கு, 456.
தூய்மை
= வான்மை, நன்மை, 159
= ௸, 298
= ௸, 455
= ௸, 688;
= [வினைத்தூய்மை], அதி. 66.
தூய்மையவர்
= தூய்மையினையுடையார், 711
= ௸, 721.
தூவாத
= வெய்ய சொற்கள், 685.
தூவி
= மென்சிறகு, 1120.
தூவேன்
= (முயற்சி)ஒழியேன், 1021.
தூறு
= குவை =(வைக்கோற்)போர், 435.
தூற்றா
= அறிவிக்கமாட்டா, 1157.
தூற்றார்
= இகழ்ந்து சொல்லார், 1190.
தூற்றும்
= இகழ்ந்து சொல்லும்(இயல்பினையுடையார்), 188.

தெகரம்

தொகு

தெ

தெய்வத்தான்
= ஊழால், 619.
தெய்வத்துள்
= தேவருள், 50.
தெய்வத்தோடு
= தேவரோடு, 702.
தெய்வம்
= கடவுள், 55
= ௸, 1023.
தெரிதல்
= ஆராய்ந்தறிதல், 634;
= ஆராய்தல், 717;
= [பகைத்திறந் தெரிதல்], அதி. 88.
தெரிந்த
= ஆராய்ந்த, 462
= ௸, 712.
தெரிந்து
= ஆராய்ந்து(அறிந்து), 23
= ௸, 132
= ௸, 186
= ௸, 501
= ௸, 712
= ௸, 1172;
= அரசன் தான் செய்யும் வினைகளை ஆராய்ந்து செய்யுந் திறம்[தெரிந்து செயல்வகை], அதி. 47;
= தெளியப்பட்டாரை அவர் செய்யவல்ல வினைகளையறிந்து அவற்றின் கண்ணே ஆளுந்திறம்[தெரிந்து வினையாடல்], அதி. 52;
= அமைச்சர் முதலாயினாரை ஆராய்ந்து செளிதல்[தெரிந்து தெளிதல்], அதி. 51.
தெரியா
= ஆராயாத, 583.
தெரியான்
= ஆராயாதவனாக, 947.
தெரியுங்கால்
= ஆராயுமிடத்து, 503.
தெரிவார்
= அறிபவர், 104
=௸, 329.
தெரிவான்
= ஆராய்பவன், 27.
தெருளாதான்
= மெய்யுணர்வு இல்லாதவன், 249.
தெவ்
= பகைவர், 639.
தெவ்விர்
= பகைவர்களே, 774.
தெள்
= தெளிவான, 1065.
தெளிதல்
= நம்புதல்;
= [தெரிந்து தெளிதல்], அதி. 51.
தெளித்த
= ஐயம் நீங்க அறிவிக்கப்பட்ட, 1154.
தெளிந்தார்
= ஐயுறாதார், 143.
தெளிந்தார்க்கு
=353. மெய்யுணர்ந்தார்க்கு,
தெளிந்தான்
= ஐயந் தீர்ந்தவன், 508.
தெளிந்தான்கண்
= ஆராய்ந்து ஐயந்தீர்ந்தவன் மாட்டு, 510.
தெளிவு
= ஆராய்ந்து துணிதல், 464
= ௸, 502
= ௸, 510
= ௸, 513.
தெள்ளியர்
= அறிவுடையர், 374.
தெறல்
= கெடுத்தல், 264.
தெறு
= திறை(யாகக் கொள்ளும் பொருள்)[தெறுபொருள்], 756.
தெறும்
= அழிக்கும், 674
= ௸, 883.
தெறூஉம்
= சுடாநிற்கும்(தீ), 1104.
தெற்றென்க
= தெளிக, 581.
தென்
= தெற்கிலுள்ள[தென்புலத்தார்], 43.

தே

தேய
=
தேயத்து
=
தேயும்
=
தேய்க்கும்
=
தேய்ந்த
=
தேர்
=
தேர்க்கு
=


தேராது
=
தேரான்
=
தேரின்
=
தேர்ச்சி
=
தேர்ந்தபின்
=


தேர்ந்து
=
தேவர்
=
தேறப்படும்
=
தேறல்
=
தேறற்க
=


தேறாவிடின்
=
தேறான்
=
தேறியக்கண்
=
தேறியார்க்கு
=
தேறின்
=


தேறுக
=
தேறுதல்
=
தேறும்
=
தேற்றம்
=
தேற்றாதவர்
=


தேற்றாதார்மாட்டு
=
தேற்றுதல்
=
தேன்
=


= ௸,
= ௸,

பார்க்க:

தொகு

அ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ-

- கா,கி,கீ - கு, கூ- கெ, கே, கை கொ, கோ, கௌ- ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே, சொ, சோ- ஞா த- தா, தி, தீ- தொ, தோ;