திருப்பலி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
திருப்பலி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- மலர், கனி, உயிர் போன்றவற்றைக் கடவுளுக்குக் காணிக்கை ஆக்கும் செயல்
- கிறித்தவர்கள் இயேசுவின் கடைசி இரவு உணவையும் அவர் சிலுவையில் தம்மையே கடவுளுக்குப் பலியாக ஒப்புக்கொடுத்ததையும் நினைவுகூர்ந்து நிறைவேற்றுகின்ற திருவருட்சாதனச் சடங்கு.
- பூசை
- மீசை (பழைய வழக்கு - இலத்தீன்/போர்த்துகீசிய missa என்னும் சொல்லிலிருந்து)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
நற்கருணைக் கொண்டாட்டம் நிறைவுறும்போது சென்று வாருங்கள் என்னும் பொருள்பட ite, missa est என இலத்தீனில் கூறுவர் (ஆங்.: go, it is the dismissal/sending). இதில் வரும் missa என்னும் சொல் ஆங்கிலத்தில் mass என வரும்.
பயன்பாடு
- இப்போது கிறித்து தலைமைக் குருவாக வந்துள்ளார்...அவர் பலியாகப் படைத்த இரத்தம்...அவரது சொந்த இரத்தமே (எபிரேயர் 9:11,12) திருவிவிலியம்
(இலக்கியப் பயன்பாடு)
- பலிகண் மாறிய பாழ்படு பொதியில் (புறநா. 52).
- மலர்சிலகொண்டு...தேம்பலி செய்த வீர்நறுங் கையள் (ஐங்குறு. 259).
(இலக்கணப் பயன்பாடு)