தமிழ்

தொகு
 
தேசம்:
உலக அரங்கில் இந்திய தேசம்
(கோப்பு)

விடுதி

தொகு
  • தேசம், பெயர்ச்சொல்.
  1. நாடு
    (எ. கா.) தேசமெல்லாம் புகழ்ந்தாடுங் கச்சி (திருவாச. 9, 4).
  2. இடம்
    (எ. கா.) காலதேசமறிந்து நடத்தவேண்டும்.
  3. பண்டைய பாரதத்தின் ஐம்பத்தாறு தேசங்கள் (திருவேங். சத. 97, 98.)
  4. காண்க...தேசு
    (எ. கா.) தேச முடையாய் திறவேலோ ரெம்பாவாய் (திவ். திருப்பா. 7)..

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. province, territory, land, district
  2. place
  3. countries of India, 56 in number viz., Aṅkam, Mattiram, Māḷavam, Cālavam, Kēkayam, Āriyam, Pāra- cīkam, Āntiram, Marāṭam, Kaṉṉaṭam, Iṭaṅ- kaṇam, Avanti, Kuru, Cēti, Kukuram, Kācumīram, Maccam, Kirātam, Karūcam, Cūracēṉam, Kaliṅkam, Vaṅkāḷam, Nēpāḷam, Ciṅkaḷam, Tuḷuvam, Kēraḷam, Koṅkaṇam, Pōṭam, Tirikarttam, Puḷintam, Kuḷintam, Virāṭam, Makatam, Kūrccaram, Papparam, Vitarppam, Kāmpōcam, Kōcalam, Cintu, Kauṭam, Vaṅkam, Oṭṭam, Cātakam, Cavvīram, Pāñcālam, Niṭatam, Kaṭāram, Ukantaram, Cōṉakam, Cīṉam, Kāntāram, Malaiyāḷam, Ilāṭam, Tirāviṭam, Cōḻam, Pāṇṭiyam.
  4. nation
  5. See...தேசு

விளக்கம்

தொகு
  • அங்கம், மத்திரம், மாளவம், சாலவம், கேகயம், ஆரியம், பாரசீகம், ஆந்திரம், மராடம், கன்னடம், இடங்கணம், அவந்தி, குரு, சேதி, குகுரம், காசுமீரம், மச்சம், கிராதம், கரூசம், சூரசேனம், கலிங்கம், வங்காளம், நேபாளம், சிங்களம், துளுவம், கேரளம், கொங்கணம், போடம், திரிகர்த்தம், புளிந்தம், குளிந்தம், விராடம், மகதம், கூர்ச்சரம், பப்பரம், விதர்ப்பம், காம்போசம், கோசலம், சிந்து, கௌடம், வங்கம், ஒட்டம், சாதகம், சவ்வீரம், பாஞ்சாலம், நிடதம், கடாரம், உகந்தரம், சோனகம், சீனம், காந்தாரம், மலையாளம், இலாடம், திராவிடம், சோழம், பாண்டியம் என்ற ஐம்பத்தாறு தேசங்கள்.
  • தேசம் (Nation) என்பது பெரும்பாலும் ஒரே மொழியை தாய்மொழியாய் கொண்ட இனக் குழுக்கள் வாழும் தாய்நிலப் பகுதிகளாகும்..மேலும் ஒரே சமயம், ஒரே இனம், தொடர்ந்து வரும் வரலாறு,பாரம்பரியமாக வாழ்ந்துவருகிற பூமி ஆகியக் கூறுகளையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்..
"https://ta.wiktionary.org/w/index.php?title=தேசம்&oldid=1995740" இலிருந்து மீள்விக்கப்பட்டது