தொட்டாற்சிணுங்கி
பொருள்
தொட்டாற்சிணுங்கி (பெ)
- தொட்டால் சுருங்கும் செடி வகை
- சுண்டி வகை
ஆங்கிலம் (பெ)
- sensitive plant, s. sh., mimosa pudica
- a species of sensitive plant, mimosa leguminosae
விளக்கம்
- தொட்டாற்சிணுங்கி = தொடு + ஆல் + சிணுங்கி = தொட்டால் + சிணுங்கி
- தாவரங்களுக்கும் உணர்வு உண்டு என்பதை உலகுக்கு உணர்த்திய தாவரம் தொட்டாற்சிணுங்கி. விரல் பட்டதும் அது சட்டெனத் தன்னை உள்ளிழுத்துக் கொள்ளும். உணர்வு மட்டும் அல்ல... உன்னதமான மருத்துவக் குணங்களும் இந்த மூலிகைச் செடிக்கு உண்டு. தொட்டாற்சுருங்கி, தொட்டால் வாடி, இலச்சகி, நமஸ்காரி, காமவர்த்தினி என இந்தத் தாவரத்துக்கு நிறைய பெயர்கள். (வீரியம் தரும் வெட்கச் செடி!, டாக்டர் விகடன், 01-மார்ச் -2012)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தொட்டாற்சிணுங்கி--- DDSA பதிப்பு + வின்சுலோ +