நாமகரணம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நாமகரணம்(பெ)
- பெயர்
- பெயர் சூட்டல்; பெயரிடுதல்
- பிறந்த குழந்தைக்குப் பதினொராம் நாளிற் பெயரிடுவதான சடங்கு.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது, கார்த்திகா என்று நாமகரணம் செய்து வைத்து , கார்த்தி என அவளை ஆசையாகக் கூப்பிடும் போதெல்லாம், தனது நண்பன் கார்த்தியின் நினைவுதான் வரும் சுந்தருக்கு. (குட்டி கார்த்தி, ஜனனிப்ரியா, உயிர்ம்மை)
- அலுவலகத்தில் சந்திரனுக்கு கோபக்காரன் என்று பெயர் வைத்து விட்டார்கள். அவனுக்குக் கொஞ்சம் முன்கோபம் உண்டுதான். நாமகரணம் சூட்டும் அளவிற்கு உண்டா எனத் தெரியாது. ([1])
- எதற்கும் இளகாத கல்லுளிமங்கன் என்று நாமகரணம் சூட்டுங்கள்! அஞ்சாநெஞ்சன் என்று கூவுங்கள்! பணியமாட்டேன். (முதலைக் கண்ணீர், கிருஷ்ணகுமார், திண்ணை)
- "சிங்கம் புலி" என்ற நாமகரணத்தில் வரும் படம் இவர்களது தயாரிப்பே! (ஜூனியர் விகடன், 16-பிப்ரவரி-2011)
(இலக்கியப் பயன்பாடு)
- மாதவிமகட்கு நாமகரணம் பண்ணுவோமென்று (சிலப். 15, 26, உரை).(திருவானைக். கோச்செங். 14.)
ஆதாரங்கள் ---நாமகரணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +