படம்
தொடர்புடைய சொல்:
- படாம் (சீலை, திரைச்சீலை, பெருங்கொடி)
பொருள்
- ஏதொன்றின் உருவத்தையும் கண்ணால் காணும் படி வரைந்த அல்லது தீட்டிய அல்லது ஒளிப்படக்கருவி போன்றவற்றால் உருவாக்கிய ஒப்புரு. எடுத்துக்காட்டாக ஓவியம் ஒரு படம்.
- நேரில் காண்பதுபோல் காணக்கூடிய இயல்பாய் அசையும் படம், திரைப்படம், நிகழ்படம்.
- ஒளிப்படம்
- நிலப்படம் அல்லது தரைப்படம், நிலவரைபடம்; ஒரு நகரத்தின் சாலை வழிகளைக்காட்டும் நகரகப்படம் (நகரத்தின் படம்).
- ஒரு பின்னொட்டு (எ.கா. கலப்படம்)
- எழுத்துப்படம்
- காற்றாடி
- நாகப்பாம்பின் விரிந்த தலைப்பகுதி (எ.கா. பாம்பு படம் எடுக்கும்!)
- யானையின் முகத்தில் அணியும் அணிகலன், முகப்படாம்
- கால் பாதத்தின் முற்பகுதி
- சீலை, திரைச்சீலை
- கொடி (விருதுக்கொடி)
- செயற்கைநிலாப்படம்
விளக்கம்
- பல பொருள்கள் விரிவது (படர்வது) என்னும் கருத்தைச் சொல்லுகின்றன.
படமுறையாக்கம்
- உருக்களைப் படமாக்குதல் வெப்பப் படமுறையாக்கம்.
கணிப்பொறிப் பட முறையாக்கத் தொழில் நுணுக்கம் என்று பெயர்.
பயன்பாடு
=
மொழிபெயர்ப்புகள்
=
- (பாடம்)