ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நிகண்டு(பெ)

  • உரிச்சொற்பனுவல்
  • சொற்றொகை
  • நிகண்டு என்பது சொற்களுக்கான பொருள்களைத் தருவதற்காக ஆக்கப்பட்ட நூல் வகையாகும்.
  • நிகண்டு என்னும் சொல் தொகை, தொகுப்பு, கூட்டம் என்னும் பொருள் தரும்.
  • தமிழில் அகராதிகளுக்கு முன்னோடியாக இருந்தவை நிகண்டுகள்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  • இந் நூல்கள் ஆரம்பத்தில் உரிச்சொற்பனுவல் என்ற தமிழ்ச் சொல்லால் அழைக்கப்பட்டன. எனினும் இச் சொல் நீளமாக இருந்ததனாலோ அல்லது இடைக் காலத்திலேற்பட்ட வடமொழிச் சொற்பயன்பாட்டு மோகம் காரணமாகவோ நிகண்டு என்ற வடமொழிப் பெயரே பிற்காலத்தில் நிலைபெற்று விட்டது.
  • செய்யுள் வடிவில் அமைந்தவை.அகராதிகள் தோன்றுவதற்கு முன் தமிழ்ச் சொற்களின் பொருள்களை அறிந்துகொள்வதற்குப் பயன்பட்டவை நிகண்டுகள் எனப்பட்ட நூல்களாகும். இதிலே, சொற்கள் பொருள் அடிப்படையில் (தெய்வப் பெயர்கள், மக்கட் பெயர்கள்) என்று தொகுதிகளாகக் கொடுக்கப்பட்டிருக்கும்.
பயன்பாடு
அகரமுதலி - அகராதி - நிகண்டு - சொற்பொருளி


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிகண்டு&oldid=1894630" இலிருந்து மீள்விக்கப்பட்டது