நீ
நீ(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- முன்னால் இருப்பவரை அழைக்கும் விளிச்சொல்; முன்னிலை இடப்பெயர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- you referring to someone younger, lower, affectionate
விளக்கம்
- நீ என வேலையாளிடமோ சிறுவர்களிடமோ கூறுகின்றோம். நீர் என வயது, தரம், பதவி ஒத்தவரிடம் கூறுகின்றோம். நீங்கள் எனச் சிறிது உயர்ந்தவரிடம் கூறுகின்றோம். தாங்கள் என மிக உயர்ந்தவர்களிடம் கூறுகின்றோம். (செந்தமிழ் வளம் பெற வழிகள், த. கனகரத்தினம்)
- நீ என உயர்ந்தவரை விளிக்கமுடியாது. குழந்தையை நீ என முன்னிலைப்படுத்துதல் போல இறைவன், தெய்வத்தை நீ என அழைக்கலாம். (செந்தமிழ் வளம் பெற வழிகள், த. கனகரத்தினம்)
{ஆதாரம்}---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - நீ