படிமம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
படிமம்(பெ)
- படம், உருவம்
- தொல்லுயிர் எச்சம்.
- ஓர் உயிரி வாழ்ந்ததற்கான அடையாளம்
விளக்கம்
- சொற்களால் நெஞ்சத் திரையில் வரையும் ஓவியம்தான் படிமம் என்பது. வெறும் வருணனை கூடப் படிமம்தான். ஆனாலும் உவமை, உருவகம், தொன்மம் அடங்கிய சொற்களால் உருவாக்கப்படும் சொல் ஓவியம் சிறந்த படிமமாகும். (கலைச்சொற்கள் பற்றி…, ஜெயமோகன்)
- படிமம். மொழி நேரடியாக சுட்டுவதன் மூலம் பொருள் அளிக்கிறது. பலசமயம் அந்த முறை போதாமலாகும்போது இன்னும் குறியீட்டுத்தன்மை தேவையாகிறது. இதற்காக மக்கள் பல வழிகளை கண்டடைகிறார்கள். அவை இலக்கிய வடிவம் கொள்கின்றன. உவமை, உருவகம், வர்ணனைகள் என இவை பலவகைப்படும். மொழியின் நேரடிச்சுட்டுத்தன்மை கூடக்கூட இவை குறையும். பழங்குடிமொழிகளில் இவை மிக அதிகம். தமிழில் இவற்றை நாம் ஒட்டுமொத்தமாக அணிகள் என்கிறோம். (கலைச்சொற்கள் பற்றி…, ஜெயமோகன்)
- அணிகள் உலகமெங்கும் பலவகை. அனைத்தையும் ஒன்றாகச் சுட்டும் ஒரு கருத்துருதான் படிமம் என்பது. உவமை உருவகம் எல்லாமே ஒட்டுமொத்தமாக கவித்துவப் படிமங்களே. ஒன்றைச்சொல்லி அது உணர்த்தும் பொருளை கேட்பவன் கற்பனைக்கே விட்டுவிடுவதே படிமம் என்பது. வயித்திலே பால வார்த்தான் என்பது ஒரு படிமம். (கலைச்சொற்கள் பற்றி…, ஜெயமோகன்)
சொற்றொடர் எடுத்துக்காட்டு
தொகுஒத்த கருத்துள்ள சொற்கள்
தொகு- புதைப்படிமம்
- தொல்படிமம் --- (நிலக்கரி, பெட்ரோலியம் உள்ளிட்ட தொல்படிவ எரிபொருட்கள் இதற்கு முக்கியக் காரணம் - ஜுனியர் விகடன், 16/12/09) - fossil fuels like coal and petroleum)
மொழிபெயர்ப்புகள்