Meykandan
வரவேற்புரை
தொகுவாங்க! Meykandan
உங்கள் வருகை குறித்து மகிழ்ச்சி. உங்களது முயற்சி, மேலும் சிறக்க எனது அனுபவங்களை, உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
1)தேடியின் (தேடுசாளரம்) மூலம் நீங்கள் பங்களிக்கும் சொல், ஏற்கனவே உள்ளதா? எனச் சரிபார்த்துக் கொள்ளவும்.அது இல்லையெனில், படிவங்களைப் பயன்படுத்திப் புதிய சொற்களை உருவாக்கவும்.
2)ஒரு சொல்லுக்குரிய கருத்து வேறுபாடு்களை, அந்தந்தச் சொல்லுக்குரிய 'உரையாடல்' தத்தலில் (ஒவ்வொரு பக்கத்தின் மேலும்'உரையாடல் பக்கம்' இருக்கிறது.) தயங்காமல் தெரிவிக்கவும்.
3)பிற கருத்துக்களை, ஆலமரத்தடி என்ற பகுதியில் தெரிவிக்கலாம்.
- தமிழ் மேலும் சிறக்கத், தொடர்ந்து பங்களிக்க வேண்டி, விடை பெறுகிறேன்.
- ஓங்குக தமிழ் வளம் !
- த*உழவன் 14:23, 15 பெப்ரவரி 2010 (UTC)-- த♥உழவன் (Info-farmer)+உரை..
சந்தி இலக்கணம்
தொகு- சந்திஇலக்கணப் பிழைகளை மாற்றியமைக்கு நன்றி. தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். பின்னர் என்ற சொல்லினை அடுத்து, மற்றொரு மெய்யெழுத்து வருமா என்ன? நீங்கள் திருத்திய பக்கங்களை எளிமைப்படுத்த வேண்டும். அவ்வப்போது வர வேண்டுகிறேன்.த*உழவன் 14:34, 15 பெப்ரவரி 2010 (UTC)
ஒருசிறிய விளக்கம்:
இதுகுறித்து முன்னரே இருபயனர்கள் கேட்டிருந்தனர். மேலும், அதற்குச்சான்று இருந்தால் நன்று என்றும் குறிப்பிட்டிருந்தனர். அவர்களுக்கு நான் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய செய்தியின் சுருக்கத்தை உங்களுக்குத் தெரிவிக்கின்றேன்.
அதற்கும் முன்னால் என்னைப்பறறி ஓரிருசொற்கள்! நான் விக்கிப்பீடியாவுக்கு மிகப் புதியவன். அதனால் பலசெய்திகள் இதுதொடர்பாக எனக்கு இன்னும் புரியவில்லை; தங்களைப்போன்றோர் உதவிஇருப்பின் விரைவில் அவற்றைக் கற்றுக்கொள்ள முடியும். நிற்க.
'முன்னர்', 'பின்னர்' என்ற சொற்களின் பின்னால் வல்லெழுத்தி்ல் ஆரம்பிக்கும் சொற்கள்வரின் மிகும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒருகுறளைக் கேட்டிருப்பீர்கள்;
"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்/ வைத்தூறு போலக் கெடும்."(435)
இங்கு வள்ளுவப் பெருந்தகையார் 'முன்னர்க் காவாதான்' என்றே எழுதியுள்ளார்.
மேலும், நமக்குக் கிடைக்கும் மிகப்பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலும்,
"கிழவிமுன்னர்த் தற்புகழ் கிளவி" (தொல்.1131:1) என்றுவருவதைக் காணலாம்.
"வள்ளியோர்க்காணாது"(புறநா.370:1) "பல்பிணர்த்தடக்கை" (புறநா. 371:20)
பின்னாளைய புகழ்பெற்ற இலக்கணநூலான நன்னூலிலும் அதன்ஆசிரியர் பவணந்திமுனிவர்,
"யரழ முன்னர்க் கசதப அல்வழி/ இயல்பும் மிகலும் ஆகும்.." (மெய்யீற்றுப்புணரியல், 224) என்று ஒற்றிட்டே எழுதுவர்.
ஆகவே, 'பின்னர்' 'முன்னர்' என்ற சொற்களுக்குப் பின் ஒற்றிட்டு எழுதுவதே சரி. ஆனால், இன்று பெரும்பாலானோர் இதனைப்பின்பற்றுவதில்லை. அதற்குக் காரணம் யாரும் சொல்லித்தருவதில்லை, அவ்வளவு நுணுக்கமாக இலக்கணத்தை! சொல்லித்தந்தாலும் விரு்ப்பத்தோடு கற்றுக்கொள்பவரும் மிகக் குறைவு. அதனால் என்ன? நாம் சரியாக எழுதுவோமே!
படிவங்களைப் பயன்படுத்திப் புதிய சொற்களை உருவாக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்; அது என்ன படிவங்கள்? எப்படி உருவாக்குவது? விளக்கினால் நன்று!--Meykandan 05:18, 18 பெப்ரவரி 2010 (UTC) ---
- அற்புதமான விளக்கம். உங்களைப் போன்றவரின் துணை இல்லாமல் தவித்தேன். வரும் காலங்களில் நீங்கள் துணைபுரிவீர் என நம்புகிறேன். தற்போது தமிழ் அடங்கிய மொழிகளின் சொற்கட்டமைப்பில் இறுதி முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
அதுபற்றிய உரையாடலில் உங்கள் கருத்தினைச் சேர்க்கவும். அதுவரை புதிய சொற்களைப் பதிவேற்றாமல் இருக்கக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால், நேரம் கிடைக்கும்போது இங்கில்லாத சொற்களுக்குக், குறிப்புகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். புதிய சொற்களை விரைந்து தானியங்கி மூலம், பதிவேற்றும் முறைகள் இன்னும் ஓரிரு மாதங்களில் அமைக்கப்படும். அதுவரை விக்கி பற்றி நீங்கள் கேட்பதை எனக்குத் தெரிந்தவரை அறிமுகப்படுத்துகிறேன். அதற்குரிய உங்கள் கேள்விகளை எதிர் நோக்கி முடிக்கும், உங்கள் பதிவன்.
உங்களைப்பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.த*உழவன் 14:52, 18 பெப்ரவரி 2010 (UTC) ---
சந்திபற்றிய ஒருசிறுகுறிப்பு:
1.இரண்டாம் வேற்றுமை விரியில் ஒற்றுமிகும். எடுத்துக்காட்டு: அவனைக் கண்டேன். தமிழைக் கற்றேன்.( ஐ இரண்டாம் வேற்றுமை உருபு என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்).
2. ஆனால் இரண்டாம் வேற்றுமைத்தொகையில் ஒற்றுமிகாது. எ.கா: தமிழ் கற்றேன்.(இங்குத் தமிழ்க்கற்றேன் என எழுதுவது சரியன்று) பறவை பிடித்தான் என்று ஒற்றில்லாமல் எழுதுவதே சரி.
(விக்கி பற்றி/ விக்கியைப்பற்றி)
3. நான்காம் வேற்றுமை விரியில் ஒற்றுமிகும். எ.கா: அவனுக்குக் கொடுத்தேன் (அவற்குக் கொடுத்தேன் என்பது பழையவழக்கு)
4. ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சத்தின்பின் ஒற்றுமிகும்.எ.கா: ஓடாக்குதிரை(ஓடாத என்பது ஓடா என ஈறுகெட்டுவந்தது; குதிரை என்ற பெயரைத்தழுவியதால் இது பெயரெச்சம்)
5. ஆனால் பெயரெச்சத்தின் முன்னால் ஒற்று மிகாது.எ.கா: ஓடாத குதிரை, சென்ற காலம், பாடிய பையன், தேடிய செல்வம்.
இன்றைக்கு இவ்வளவு போதும் என்றுநினைக்கின்றேன், ஏதோ எனக்குத்தெரிந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன் .அவ்வளவுதான்!செவிசாய்த்தமைக்கு நன்றி!
இது ஒன்றும் கம்பசித்திரம் அன்று: மிக எளிதானது, யாராலும் கற்றுக்கொள்ளமுடியும், கொஞ்சம் ஆர்வமும் கவனமும் இருந்தால் போதும். ஆனால் எவ்வளவு பெரிய அறிஞராயிருந்தாலும், எல்லாம் அறிந்தவர் யாருமில்லை, சரிதானே!--Meykandan 02:59, 19 பெப்ரவரி 2010 (UTC)
வருக!
தொகுசந்திப்பிழை பற்றிய உங்கள் விளக்கம், இலக்கணக் குறிப்புகள் அருமை. விக்சனரியில் உங்கள் அரும்பணி தொடரட்டும். நன்றி பழ.கந்தசாமி 03:35, 19 பெப்ரவரி 2010 (UTC)
நிப்ட்டி
தொகுநிஃப்டி நல்ல கட்டுரை. ஆனால், அதனை விக்கிப்பீடியாவின் கட்டுரையோடு இணைக்க வேண்டும். தற்காலிகமாக, அதன் பேச்சுப் பக்கதிற்கு மாற்றியுள்ளேன்.ஏனெனில், விக்சனரி என்பது wiki dictionary என்பதன் சுருக்கம் ஆகும்.--13:14, 15 ஆகத்து 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- பகுப்பு:திருக்குறள் சொற்கள் என்பதனையும் காணவும்.
- இத்தளம் உங்களுக்கு உதவலாம்.
- தனித்தனி சொல்லாக எடுத்து பொருள் கூறி, குறள் இணைத்தால் அது பலருக்கும் பயனாகும். தேடுபொறியில் தேடும் போதும் விரைந்து கிடைக்கும்.
- மேலும், தமிழ் விக்சனரியின் சொற்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.--17:13, 5 பெப்ரவரி 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
வாக்கிடுக
தொகு- சில வருடங்களுக்குப் பிறகு உங்களைக் காண்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து திருக்குறளுக்கானத் தரவுகளை மேம்படுத்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். தற்போது துப்புரவு பணியில் கவனம் செலுத்தி வருகிறேன். விக்சனரியின் அடுத்த கட்டம் விக்கித்தரவில் நடைபெற உள்ளது. இதுபற்றி இத்திட்ட பக்கத்தில் காணலாம். இத்திட்டம் தொடக்க நிலையிலேயே உள்ளது. இருப்பினும் உலக மொழிகளுக்கு தமிழ் ஈடானது என்பதற்கு ஒப்ப, அதற்கான அடிகளை அமைப்பதில் ஈடுபாடு கொண்டுள்ளேன். தற்போது நடைபெறும் விக்சனரி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்#அதிகாரி தரத்துக்கான வேண்டுகோள் (Request for bureaucratship) வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, தங்களது மேலான கருத்துக்களையும்அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனால் எனக்கு புதிய உயரணுக்க பயனர்களையும்(sysop), தானியங்கி அணுக்கல்களையும் வழங்க இயலும். இருப்பினும், அனைத்து மாற்றங்களையும், அனைத்துத் தமிழ் விக்கிமீடியத்திட்டங்களில் அறிவித்து, உடன் பங்களிக்கும் அன்பர்களின் கருத்தினை உள்வாங்கியே, ஒவ்வொரு முறையும் செயற்படுவேன் என உறுதி கூறுகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 02:46, 4 மே 2019 (UTC)