Srunika rajkumar
வரவேற்புரைகள்
தொகுபரிதிமதி
தொகு- விக்சனரிக்கு வருக! உங்கள் பங்களிப்புகள் தமிழ் விக்கியைச் சிறப்பித்துக் கொண்டிருப்பது போல் விக்சனரியையும் சிறப்பிக்க வேண்டுகிறேன். பரிதிமதி 02:30 [UTC], 01 சூலை 2009.
- தங்களது வரவேற்பிற்கு மிக்க நன்றி. என்னால் இயன்றமட்டும் அனைத்தையும் செய்கிறேன்.(Srunika rajkumar)
ஓங்குக தமிழ் வளம் !
தொகுவாங்க! Srunika rajkumar, நீங்கள் வந்ததிலே எனக்கு மிக்க மகிழ்ச்சிங்க!!
உமது பங்களிப்புகளும், இத்தளமும், மேலும் சிறக்க சிலவற்றினைச் சொல்லிக் கொள்ள விரும்புறங்க!!!
- ஒரு குறிப்பிட்டச் சொல்லுக்குரிய, உமது கருத்துரைகளை, அந்தந்த சொல்லின் மேலுள்ள 'உரையாடல்' என்ற பக்கத்தில் தயங்காமல் தெரிவிக்கவும். அங்ஙனம் தெரிவித்தால், அக்கருத்துக்களை, அச்சொல்லை உருவாக்கியவர்கள் தவறாமல் காண, இங்கு உள்கட்டமைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
- விக்கி ஊடக நடுவப் படங்களுடன் வாரம் ஒரு சொல்லாவது விளக்க வேண்டுகிறேன்.
- (எ.கா) கவுதாரி ; emerald dove - (simple way), தூக்கணாங்குருவி (gallery presentation),
- முக்குளிப்பான் (detailed), அங்கே (literary detailed), brahminy kite (video).
- (எ.கா) கவுதாரி ; emerald dove - (simple way), தூக்கணாங்குருவி (gallery presentation),
நீங்களும் கொஞ்சம் உங்க அனுபவத்தினைத் தாங்க!. (tha.uzhavan ->gmail->com)
- நன்றி. (த.உழவன் 07:32, 5 ஜூலை 2009 (UTC))
- தாங்கள் இன்னும் சிறிது தெளிவாக கூறினால் மேலும் நலமாக இருக்கும் என எண்ணுகிறேன். ஏனெனில், எனக்கு தங்கள் சொல்ல விழைவது சரியாக புரியவில்லை. 12:11, 5 ஜூலை 2009 (UTC)
அனுபவப் பகிர்வுகள்
தொகு(எனது வரவேற்புரையில், நான் மிகத் தேவையானதைச் சொன்னேன். எனது அனுபவமின்மையால் குழப்பிவிட்டேனோ?)
- முதன்முதலாக இங்கு வந்தபோது எனது அனுபவம் 0 , இங்குள்ளவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அதனை நீங்களும் பின்பற்றினால், இத்தளத்திற்க்கும், பிறருக்கும் நல்லது.
|
- 1) ~~~~ குறியீடை, உங்களின் ஒவ்வொரு உரையாடல்/பேச்சின் இறுதியிலும் இடுங்கள். அங்ஙனம் இட்டால், அது பல நன்மைகளைத் தரும்.
- (எ.கா) நீங்கள் என்னிடம் ஏதேனும் கேள்வி கேட்டால், அதனை விக்கிமொழி, நான் மீண்டும் புகுபதிகை செய்யும் போது, பின்வரும் அறிவிப்பாக ஞாபக படுத்தும்.
- (~~~~ குறியீடை பயன்படுத்தாவிட்டால், விக்கிமொழி, இங்ஙனம் ஞாபகப் படுத்தாது.)
'அவரை கேள்வி கேட்டேன். அதற்கு பதிலே சொல்லவில்லை' என்று நீங்கள் நினைத்துக் கொள்வீர்கள். உங்களது செயல்தவிர்ப்பை உணருங்கள்.
மிகச்சுருக்கமாகச்சொன்னால், ~~~~ என்ற கையெழுத்துக்குறியீடை இடுங்கள். (த.உழவன் 07:41, 7 ஜூலை 2009 (UTC))
Wikinews
தொகு- விக்சனரியில் உள்ளது போல wikinewsஇல் தமிழ் மொழி கிடையாதா? (Srunika rajkumar)
- இத்தள முதற்பக்கத்தின் கீழே பார்க்கவும். அங்குள்ள விக்கித்திட்டங்களுக்கு சென்றறியவும். இப்பக்கத்தின் மேலுள்ள, (Wikinews) அறிவிப்பையும் பாருங்கள். (த.உழவன் 07:32, 5 ஜூலை 2009 (UTC))
"நாம் ஏன் விக்கி செய்திகள் நிறுத்தப்படக்கூடாது என்று கூறுவதுடன் நிறுத்திவிடவேண்டும்? செய்திகளிலும் journalismஇலும் ஆர்வமுடைய பயனர்கள் செய்திகளை விக்கி செய்திகளில் தோற்றுவித்தால் அது மறுபரிசீலனைக்கு உதவியாக இருக்கும் அல்லவா? நாம் செய்ய வேண்டியதை செய்வோம். நம்மால் இயன்ற மட்டும் கட்டுரைகளை எழுதுவோம். மற்றதை இறைவன் பார்த்துக்கொள்வான்." என்பதே என்னுடைய கருத்து.
பகுப்புகள் பகுதி
தொகு- பகுப்புகள் பகுதியை நீங்கள் சீர் படுத்துவது, சிறப்பாக உள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் பிரஞ்சு மொழியினை, நீங்கள் பகுத்தது அருமை.
- எனினும், அங்கு பயன் படுத்தியுள்ள தமிழ் சொற்களுக்கு நிகரான மொழிப்பெயர்ப்புகளைச்செய்தால், நன்றாக இருக்குமெனக் கருதுகிறேன். எனக்கு பிரெஞ்சு முன்விபக்தி, பிரெஞ்சு இடைபஞ்சொல், பிரெஞ்சு வியப்பிடைச்சொல் என்பன பற்றி, தமிழில் விளக்கம் இருந்தால் நன்றாக இருக்கும்.
- தமிழ் மொழியிலிருந்து, பிற மொழிகளுக்கு செல்லும் ஆக்கங்களை நாம் செய்தால் நன்றாக இருக்குமெனக் கருதுகிறேன். குறிப்பாக, இந்திய மொழிகளுக்கான மொழிப்பெயர்ப்புகள். ஆங்கிலத்திலிருந்து, பிற ஐரோப்பிய மொழிகளுக்குச் செல்ல பலகணினி நிரல்கள் இருக்கின்றன. இல்லையா? நம் தமிழ் மொழியிலிருந்து..
- உங்கள் ஆழமான மொழியறிவைப் பயன்படுத்தி, தமிழை அகலப்படுத்த வேண்டுகிறேன்.
- தங்களைப் போன்ற மொழியறிவு, எனக்கு இல்லாதக் காரணத்தால் நிழற்படங்களையும், நிகழ்படங்களையும் பயன் படுத்துகிறேன்.
மேலும், அவைகளைப் பயன்படுத்துவது, உள்ளங்கை நெல்லிக்கனியல்லவா?
- என்றும் ஏற்புடன், (த*உழவன் 02:10, 17 ஜூலை 2009 (UTC))
தங்களது பாராட்டிற்கு நன்றி. தமிழ் சொற்களை பிறமொழி விக்சனரிகளில் பதிப்பிடநினைப்பது பாராட்டத்தக்க விஷயம் தான். எனினும், தாங்கள் தமிழ் சொற்களை முதலில் தமிழ் விக்சனரியில் பதிபிக்கசெய்வது எனக்கு பெரும் உதவியாக இருக்கும். தங்களது பாராட்டிற்கும் ஊக்குவிப்பிற்கும் நன்றி. Srunika rajkumar 23:16, 17 ஜூலை 2009 (UTC)
சரி பார்க்கவும்
தொகுempesar-உரையாடற் பக்கம் என்ற கருத்து சரியா?த*உழவன் 13:16, 18 ஜூலை 2009 (UTC)
ஆம். empezar என்பது தான் சரியான எழுத்துவழக்கு ஆகும். ஏனெனில், எசுப்பானிய மொழியில் என்னும் 'z' எழுத்து பயன்படுத்தப்பட்டாலும், அதன் பலுக்கல் 'ஸ்' போன்று தான் ஒலிக்கும். சோர்வினாலும் களைப்பாலும் நான் ஏதேனும் சிறு தவறுகள் செய்திருப்பின், அதையும் இதைப்போன்றே என் கவனத்திற்கு கொண்டுவரவும். இம்முறை இதை என் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி. Srunika rajkumar 19:43, 18 ஜூலை 2009 (UTC)