பாரதூரம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாரதூரம், .
- பெருந்தூரம்
- முக்கியமானது, மிகப் பெரிது
- ஆழ்ந்த முன்யோசனை
- முழு விவரம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- இலங்கைத் தமிழ் வழக்கு; பாரம்+தூரம் = பாரதூரம்
பயன்பாடு
- அச் செயலினால் அரசாங்கத்துக்கும் அம்மாணவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் பாரதூரம் சாதாரணமானதல்ல என்பது மட்டும் உண்மை. (ஊவா கல்விக் கல்லூரி சம்பவம் தரும் படிப்பினை!, தினகரன் செய்தி)
- மாணவ-மாணவியர் ஆட்டோகிராப் புத்தகங்களில் தங்கள் ஞாபகங்களை எழுதி இறுதியில் (அதாவது அன்புடன்) என்று கையொப்பமிட்டிருந்தனர். அதைப் பார்த்த பள்ளியின் தலைமை ஆசிரியை எந்த அர்த்தத்தில் அந்த வார்த்தை எழுதப்பட்டது என்பதைகூடப் புரிந்துகொள்ள முயற்சிக்காமல் மாணவிகளை அடிக்கத் தொடங்கினார். எத்தனை பேரை காதலிக்கிறாய் எனக் கேட்டார். பிறகு ஆட்டோகிராப் புத்தகங்களை நெருப்பிலிட்டார். இவை மாணவ, மாணவியரின் பரீட்சையில் பாரதூரமான விளைவை ஏற்படுத்தியது. (விம்மி வெடிக்கும் விசும்பல், தினமணி, 27 Apr 2012 ')
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பாரதூரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற