பினை
பொருள்
பினை வினைச்சொல் .
- பிசை (பிசைதல்)
மொழிபெயர்ப்புகள்
- mix ஆங்கிலம்
- ...இந்தி
விளக்கம்
- பினைதல் என்பதும் பிசைதல் என்பதும் ஒரே பொருள் கொண்டது.. ச-ன போலி. (சான்று: கு. அரசேந்திரன், தமிழறிவோம், பக்கம் 140. ); பூனை-பூசை என்பது இந்த ச-ன என்பதற்கு மற்றுமொரு சான்று. மலையாளத்தில் பூச்ச (പൂച്ച) என்றால் பூனை. தமிழில் பூனை, பூசை பூஞை என்பன ஒரே விலங்கைக் குறிக்கும் சொல். பினைதல் என்னும் சொல் வினையாக வரும்பொழுது பினை என்பதற்கு மாறாக பேச்சு வழக்கில் பெனை என்றும் வழங்கும்( பெனைதல்,பெனைஞ்சு) என்று வழங்கும்.
பயன்பாடு
- சோறு வாழப்பழம் பால் சீனி எல்லாம் சேர்த்து நல்லா பெனைஞ்சு தீத்திவிட்டா பிள்ளைங்க விரும்பித் தின்பாங்களே! ( தமிழ் மன்றம் கூகுள் குழுமத்தில், கவிஞர் புகாரி)
- அந்த நெய்சோத்தினை பருப்பில் பினைந்து முழுங்காவிட்டால் என்ன குடிமுழுகிப் போய்விடும்? (பிரவாகம் குழும உரையாடல்)
- பாலில் அரச்சு ஸ்பூன் மூலம் கொடுத்து பாருங்க, இல்லை சாதத்தில் பினைந்து கொடுத்துப்பாருங்கள் அறுசுவை
- மேலும் எடுத்துக்காட்டுகள்:மின் தமிழ் கூகுள் குழும உரையாடல்
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பினை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற