தமிழ் தொகு

 
புலால்:
பல்வகை இறைச்சி உணவு-
 
புலால்:
ஆட்டின் புலால்/இறைச்சி
 
புலால்:
கோழியின் புலால்/இறைச்சி
 
புலால்:
மீனின் புலால்/இறைச்சி
(கோப்பு)

பொருள் தொகு

  • புலால், பெயர்ச்சொல்.
  1. ஊன் முதலியன
    (எ. கா.) உண்ணாமை வேண்டும் புலாஅல் (குறள். 257)
  2. இறைச்சி
  3. மாமிசம்
  4. கறி
  5. பொலா
  6. முடை
  7. புலால் நாற்றம்
    (எ. கா.) கயற்புலால் புன்னை கடியும் (நாலடி. 97).
  8. தசைநரம்பு (இங். வை.த்)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. flesh, raw meat, fish
  2. smell of raw meat,flesh or fish
  3. muscle


விளக்கம் தொகு

  1. மனிதர்களுக்கு உணவாகக்கூடிய விலங்குகள், பறவைகள் மற்றும் மீன்களின் உடல்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட தசைப் பகுதிகளும், ஏனைய உண்ணக்கூடிய உடலுறுப்புகளும் புலால் எனப்படும்...
  2. புலாலுணவு, தாவர உணவுகளில் கிடைக்காத மிருகப் புரதச் சத்து நிறைந்துள்ளவை..
  3. எனினும், இதயநோயாளிகளும், இரத்தக்கொதிப்புள்ள பிணியாளர்களும், உடற்பருமனுள்ளவர்களும் புலாலுணவை, அதிலுள்ள அதிகக் கொழுப்புச் சத்தின் காரணமாக, தவிர்ப்பது சிறந்தது என்று மருத்துவ உலகினரால் அறிவுறுத்தப்படுகின்றனர்...குறிப்பாக செந்நிறப் புலாலை அறவே உண்ணக்கூடாது...
  4. இந்த புலால் எனும் சொல்லுக்கு புலால் நாற்றம், தசைநரம்பு ஆகிய அர்த்தங்களுமுண்டு...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புலால்&oldid=1460429" இலிருந்து மீள்விக்கப்பட்டது