முடை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முடை(பெ)
- துர்நாற்றம்
- புளித்த மோர் முதலியவற்றின் வீச்சம்
- நெருக்கடி, தடை (மேற்கொண்டு தொடரமுடியாதத் தடை, முட்டு, முட்டுக்கட்டை)
- புலால்
- தவிடு
- குடையோலை
- ஓலைக் குடை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- stench, offensive odour
- smell of sour buttermilk or curd
- straits, urgency, as of poverty
- flesh
- bran
- basket of palm leaves
- umbrella of palm leaves
விளக்கம்
பயன்பாடு
- பணத்துக்கு முடையாயிருக்கிறது.
- பின்னுவது என்றால் மையத் தமிழ்நாட்டில் முடைதல். முடை என்றால் பணம் இல்லை என்று மதுரை வழக்கு என்றால் குமரிமாவட்டத்தில் மூட்டம் போடுதல் அது. அந்த முடையை இங்கே முட்டு என்பார்கள். அதை முழங்கால் முட்டு என்று நெல்லைக்குமேல் புரிந்துகொள்வார்கள் (வட்டார வழக்கு, ஜெயமோகன்)
- மீன் வாடை, கடல் தண்ணீரின் முடை நாற்றம் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு அழகியநம்பி நின்றான். (வட்டார வழக்கு, ஜெயமோகன்)
- கூடை ஒன்றை முடைபவன் தன் அகத்தையும் சேர்த்தே முடைகிறான். (இந்திய ஞானமரபும் காந்தியும், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- மூடப் பழக்கத்தின் முடை நாற்றம் வீசுகின்ற
- முடைச் சாகாடு (நாலடி, 48)
- முடையரைத் தலைமுண்டிக்கு மொட் டரை (தேவா. 423, 4)
- இடைப்பேச்சு முடைநாற்றமுமாய்விட்டது (திவ். திருப்பா. வ்யா. அவ.)
(இலக்கணப் பயன்பாடு)
- ----
முடை (வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஒரு கிழவி மட்டும் அப்படிப் போகாது , மர நிழலில் உட்கார்ந்து கூடை முடைந்து கொண்டிருந்தாள். ([1])
- "'பாய் பின்னுறோம். மூங்கில், நாற்காலி கூடை முடையறோம். (கிடைக்கற காசு) போறலியே" (ஒட்டக சவாரி, சிறுகதை, அம்பை)
- திருநெல்வேலி மாவட்டத்தில் பனை ஓலை மற்றும் பனை நார் மூலம் கூடை, கொட்டான் முடையும் தொழில் பிரபலம். (நாகரிக மோகத்தால் அழியும் பனை ஓலைத் தொழில்!, தினமணி, 12 நவ 2009)
- பின்னுவது என்றால் மையத் தமிழ்நாட்டில் முடைதல். முடை என்றால் பணம் இல்லை என்று மதுரை வழக்கு என்றால் குமரிமாவட்டத்தில் மூட்டம் போடுதல் அது. அந்த முடையை இங்கே முட்டு என்பார்கள். அதை முழங்கால் முட்டு என்று நெல்லைக்குமேல் புரிந்துகொள்வார்கள் (வட்டார வழக்கு, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- உலர்ந்த பழுத்தலை முடைந்து வேய்ந்த தனிமனை (பெரும்பாண். 353, உரை)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முடை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:வீச்சம் - நாற்றம் - துர்நாற்றம் - துர்வாசனை - பின்னு