வீசு
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
வீசுதல் (வி) | ஆங்கிலம் | [[இந்தி ]] |
எறி | throw, fling, as a weapon; cast, as a net | |
காற்று முதலியன அடித்தல் | blow, as the wind | |
பரவுதல் | spread; be diffused or emitted, as fragrance, rays, etc. | |
துர்நாற்றம் அடித்தல் | be emitted, as a bad smell | |
சிறகடித்தல் | flap, as wings | |
ஆட்டுதல் | swing, as the arm | |
இரட்டுதல் | fan | |
சுழற்றுதல் | wave, flourish, as a sword | |
அடித்தல் | strike, beat, flog | |
விரித்து நீட்டுதல் | open out, spread; lengthen, stretch | |
மிகுத்திடுதல், சேர் | accumulate | |
வரையாது கொடுத்தல் | give liberally | |
சிந்துதல். | spill | |
சிதறுதல் | strew, scatter; sow, as seeds | |
களைதல் | lay aside, throw off | |
கை விடு, செய்யாது ஒழி | abandon, leave off, drop |
விளக்கம்
பயன்பாடு
- பந்தை வீசினான் (He threw the ball)
- பலத்த காற்று வீசியது (Strong wind blew)
- துர்நாற்றம் வீசுகிறது (There is bad smell emanating)
- சிறுமி கையை வீசி நடந்தாள் (The little girl walked with her hands swinging)
- சந்திரன் ஒளி வீசியது (The moon was shining)
- மீனவன் வலையை வீசினான் (The fisherman cast the net)
(இலக்கியப் பயன்பாடு)
- கை வீசம்மா கை வீசு (குழந்தைப் பாடல்)
{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ