தமிழ்

தொகு
 
பெரியார்:
ஈ.வே. ராமசாமி-சேலம் பெரியார் பல்கலையில் இருக்கும் பெரியார் சிலை.
 
பெரியார்:
என்றால் ஞானியர்/படம்--வால்மீகி
(கோப்பு)

பொருள்

தொகு
  • பெரியார், பெயர்ச்சொல்.
  1. மூத்தோர் - 'பெரியார்'என்றால் மூத்தவர்.
  2. சிறந்தோர்
    (எ. கா.) பெரியார் பெருமை சிறு தகைமை (நாலடி. 170).
  3. ஞானியர்
    (எ. கா.) பெரியாரும் பணித் தார் (குறள். 381, பரி. அவ.).
  4. அரசர்
    (எ. கா.) பெரியார் மனையகத்தும் . . . வணங்கார் குரவரையுங் கண்டால் (ஆசாரக்.'73).'
  5. கொடையாளி
  6. தான தருமம் செய்பவர்
  7. தமிழகத்தில் போராட்டங்கள் வழியே, சமூக மாற்றத்தையும், அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்திய ஈ.வே.ராமசாமி எனும் இயற்பெயருள்ள ஒரு சமூக சீர்திருத்தவாதி சமூக அக்கறை, அறிவு, அனுபவம், வயதின் காரணமாகப் பெரியார் என்றழைக்கப்பட்டார்.

மொழிபெயர்ப்புகள்

  • ஆங்கிலம்
  1. the aged
  2. the great
  3. saints, sages
  4. kings
  5. donor
  6. benefactor
  • குறிப்பு: தமிழ்ப் பாட்டி ஔவையார், தன் நல்வழி எனும் நூலில் தன்னிடம் இருப்பதை தான, தருமமாக பிறருக்குக் கொடுத்து உதவும் பரோபகாரிகளையும் பெரியார் என்றுக் குறிப்பிடுகிறார்...

இலக்கியம்

தொகு

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ளபடி.
நல்வழி--2


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெரியார்&oldid=1451115" இலிருந்து மீள்விக்கப்பட்டது