பொருக்கு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பொருக்கு(பெ)
- பருக்கை, உலர்ந்த பருக்கை
- சேறு முதலியன உலரும்போது மேலே காய்ந்தெழும்பும் ஏடு; செதிள்
- மரப்பட்டை
- பொருக்குமண் - செதிளாய்ப் பேர்ந்த மண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- grain of boiled rice
- flake, skin, thin layer that peels off, scale, scab
- bark
- flake which rises on parched ground
விளக்கம்
பயன்பாடு
- சோற்றுப்பொருக்கு - small remains of rice
- பொருக்காங்கட்டி - clot
- பொருக்கு வெடித்த சருமம். புகைஞ்சு போன கண்கள். தோடு இல்லாமல் மூடுப்பட்டுப் போன காதுகள். (விடியும்!(நாவல்), க. அருள்சுப்பிரமணியம்)
(இலக்கியப் பயன்பாடு)
- காக்கைக்குச் சோற்றிலோர் பொருக்குங் கொடுக்க நேர்ந்திடா (அருட்பா, vi,ஆற்றாமை. 3, 1).
- பூசுகந்தம் தனத்திற்பொரிந்தது . . . பொருக்கெழும்பி (தனிப்பா. i, 381,27).
- வெள்ளிலோத்திரத்தின்பூம்பொருக் கரைத்த சாந்து (சீவக. 622).
- சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப்
- பொருக்குலர்ந்த வாயா (காளமேகம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பொருக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +