ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பொருத்து , (வி)

 1. பொருந்தச்செய். சந்துகள் புல்லறப் பொருத்துவதொன்று (கம்பரா. மருத்துமலை. 90)
 2. உடன்படச் செய். பொருடரும்படி யின்றுபொருத்தி (அரிச். பு. வஞ்ச. 8)
 3. கூட்டு பிரிந்தார்ப்பொருத்தலும் வல்ல தமைச்சு (குறள்.633)
 4. வேலைக்கமர்த்து
 5. அமையச்செய்
 6. இருபொருள்களை இணை
 7. தீபம் முதலியன ஏற்று
 8. போர் மூட்டு வாரணம் பொருத்துவாரும் (கம்பரா. நாட்டுப். 16)

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

 1. fit, adapt, prepare, adjust
 2. induce consent
 3. cause to agree; reconcile
 4. engage for labour
 5. bring over, as to a party or an opinion
 6. join together, knit, unite
 7. kindle; light, as a lamp
 8. stir up, as to a fight; instigate
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


பொருள்

பொருத்து , பெயர்ச்சொல்

 1. இணைப்பு
 2. உடல்மூட்டு. பொருத்தெலாங் கட்டுவிட்டு (பணவிடு. 298)
 3. மரத்தினிணைப்பு
 4. மரக்கணு
 5. ஒன்றுசேர்க்கை. பொருத்துறு பொருளுண்டாமோ (கம்பரா.கும்பகர்ண. 157)
 6. ஒப்பந்தம்
 7. கன்னப்பொட்டு

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

 1. joining, junction, confluence
 2. joint, suture of bones in the body
 3. joining, in carpentry
 4. knot of a plant
 5. uniting
 6. agreement, engagement
 7. temple of the head( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல்வளம்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=பொருத்து&oldid=1283124" இலிருந்து மீள்விக்கப்பட்டது