பொறை
ஒலிப்பு
|
---|
பொருள்
பொறை , (பெ)
- சிறு குன்று அறையும் பொறையு மணந்ததலைய (புறநா. 118)
- மலை நெடும்பொறை மிசைய குறுங்காற் கொன்றை (ஐங்குறு. 430)
- பாரம் குழையு மிழையும் பொறையா (கலித். 90)
- கனம் பொறை தந்தனகாசொளிர் பூண் (கம்பரா. அதிகா. 40)
- பூமி பொறைதரத் திரண்ட தாரு (இரகு.தசரதன்சாப. 50)
- பொறுமை வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை(குறள்.153)
- அடக்கம் அருந்தகிமுதலிய மகளிராடுதல் புரிந்தனர் பொறையுநாணு நீங்கினார் (கம்பரா. மீட்சி. 88)
- கருப்பம்
- வலிமை போதகாதிபன் முதலை வாயிடைப் பொறை தளர்ந்து (பாரத.வேத்திரகீய. 1)
- சலதாரை முதலிய அடைக்கும் கல்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- small hill, hillock
- mountain
- burden, load
- weight, heaviness
- earth
- patience; forbearance
- calmness; meekness
- pregnancy
- strength
- a stone to close up a channel or a spout
பயன்பாடு
- பொறையுடைமை - possession of patience
- பொறை - பொறுமை; பொறுத்தல் - பிழையை மன்னித்தல் (தாங்கிக் கொள்ளுதல் எனக் காண்க) "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை' நிலம், தன்னை ஆழமாக வெட்டி அல்லது குழிதோண்டி எடுப்பவர்களையும் சாய்த்துவிடாமல், தாங்கிக் கொள்வது போல (வெட்டுபவர் அந்த நிலம் மீது நின்றே வெட்டுகிறார்) தம்மையே இகழ்ந்து - பழித்துப் பேசுபவர்களையும் தாங்கிக் கொள்ளுதல் தலையாய பண்பு. (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக் கதிர் )
- பொறையன் - any king of the Sera dynasty, as lord of a mountainous district
(இலக்கியப் பயன்பாடு)
- பொறையிலார் - பொறுமை இல்லாதவர்
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +