மகத்துவம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மகத்துவம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ராமன் மேல் காதல் கொண்டவளாயினும் சீதையின் மகத்துவம் அவளது கற்பிலேயே உள்ளது. (இணைவைத்தல், ஜெயமோகன் )
- திருமாங்கல்யம் என்ற மங்கல சூத்திரத்துக்கு, எத்துணை மகத்துவம் கற்பிக்கப்பட்டு இருக்கிறது? கருவறைக்குள் நிகழும் புனிதமான செயல்களுக்கு எத்துணை மகத்துவம் உண்டு? தேவியின் திருவாபரணங்களை, திருமாங்கலியத்தையும், இப்படி எண்ணி எண்ணி வில்லைச் சேவகரிடம் ஒப்புவிக்கும் செயலுக்கு என்ன மகத்துவம்? (புதிய சிறகுகள், ராஜம் கிருஷ்ணன் )
- இந்த மஞ்சக் கயிறு மகத்துவம், எல்லாம் கூடி இருந்தாத்தான். இல்லேன்னா வெறும், வெறும் கயிறு! இது கழுத்தை - இல்ல - வாழ்க்கையை அறுக்கிற கயிறு! (புதிய சிறகுகள், ராஜம் கிருஷ்ணன் )
- எல்லாம் மனிதர்கள் தாம் செய்கிறார்கள். சாதாரண காரியங்களுக்கு அற்பங்களுக்கு மகத்துவம் ஏற்றுகிறார்கள். ஆனால் அதைச் சுமந்து பொறுப்பேற்றவர்கள், மிகவும் அற்பமாக அந்த செயல்களின் முக்கியத்துவத்தைக் கழற்றி விடுகிறார்கள். (புதிய சிறகுகள், ராஜம் கிருஷ்ணன் )
- நடுச்சந்தியிலும் மூலை முடுக்குகளிலும் கூட அழகைக் கூடை கூடையாக வாரலாம். ஆனால், அன்பு அப்படியா? அதன் மகத்துவம் எவ்வளவு மேலானது! (மன நிழல், புதுமைப்பித்தன் )
- புனிதம் உன்னதம் மகத்துவம் என்றெல்லாம் வழிபடு பிம்பங்களை உருவாக்கும் செயலை பகடி தலைகீழாக்குகிறது. (பகடி, ஜெயமோகன் )
- வான்மீகி ராமாயணத்துக்கு அதன் எளிமையே மகத்துவம் என்றால் வியாச பாரதத்துக்கு அதன் சிக்கலே மகத்துவம். கம்பராமாயணத்துக்கு அதன் விரிவே மகத்துவம் என்றால் சிலப்பதிகாரத்துக்கு அதன் சுருக்கமே மகத்துவம். (இரண்டு வானோக்கிய சாளரங்கள், ஜெயமோகன் )
- நல்ல சமத்துவம் வந்தாகணும்
- அதிலே மகத்துவம் உண்டாகணும்
- ஓடி ஓடி உழைக்கணும்..ம்...ஒ...ஓ...ஓ... (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- மகத்துவமாப் பிரமாண்டமாகச் செய்யும் (தாயு. தந்தைதாய். 6)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மகத்துவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:உன்னதம் - மேன்மை - மகிமை - சிறப்பு - முக்கியத்துவம்