மத்து(பெ)

  1. தயிர் முதலியன கடையும் கருவி
  2. தயிர்
  3. மோர்
  4. ஊமத்தை
    • நன்மத்தை நாகத்தயல் குடிய நம்பனேபோல் (கம்பரா. உருக்கா. 81)
தயிர் கடையும் கருவியான மத்து
மத்து
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. churning-staff
  2. yogurt, curd, curdled milk and cream
  3. buttermilk, watery curds
  4. thorn apple or purple stramony
பயன்பாடு
  • மத்தால தயிரைக்கடைஞ்சா வெண்ணெய் வரும். துக்கத்தைக் கடைஞ்சாக்க வாறது தெளிவு. (மத்துறு தயிர் [சிறுகதை]-1, ஜெயமோகன்)
  • ’மத்துறு தயிர் என வந்து சென்று இடை தத்துறும் உயிரோடு’ன்னு ஏன் சொல்றான்? மத்தாலே கடையற மாதிரி உயிர் அலைக்கழியுதுங்கிறான். கடையற தயிர் எப்டி இருக்கும் பாத்திருக்கேளா? ஒருபக்கமாட்டு சுத்திச்சுழன்று நொரையோட மேலேறி இந்தா இப்ப தளும்பி வெளியே பாஞ்சிரும்னு வரும். உடனே மத்து அந்தப்பக்கமாட்டு சுத்தும். அந்தப் பக்கமாட்டும் அது வெளிய சாடீரும்னு போயி உடனே இந்தப்பக்கமாட்டு சுத்தும். ஒரு செக்கண்டு நிம்மதி கெடையாது. நுரைச்சு பதைஞ்சு …மனுஷனோட பெருந்துக்கமும் அதேமாதிரித்தான். அந்த அலைக்கழிப்பு இருக்கே அதாக்கும் கொடுமை. இதுவா அதுவா, இப்டியா அப்டியான்னு. வாழவும் விடாம சாகவும் விடாம… அதைச் சொல்லுதான் கம்பன்’. (மத்துறு தயிர் [சிறுகதை]-1, ஜெயமோகன்)
  • (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

  • ஆயர்மத்தெறிதயிரி னாயினார் (சீவக. 421)
  • மத்துறு தயிர் என வந்து சென்று இடை
தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும் (கம்பராமாயணம்)
  • அவந்தி மத்துமாற்றப் பளவைப் படிப்பலமாம் (தைலவ. தைல. 59)



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :தயிர் - மோர் - ஊமத்தை - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=மத்து&oldid=1990386" இலிருந்து மீள்விக்கப்பட்டது