மாரன்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மாரன்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- மாரன் எனும் சொல் மன்மதனைக் குறிக்கும். மாறன் எனும் சொல் பாண்டியனைக் குறிக்கும். முன்னது வடசொல். பின்னது தமிழ்ச்சொல். மன்மதனுக்குத் தனித் தமிழ்ச் சொல் வேள் என்பது. வேட்கையை உண்டாக்குபவர் என்பது பொருள். மன்மதன் கருநிறம் கொண்டவன். சிவந்த நிறமுடைய வேள் செவ்வேள் எனும் முருகப் பெருமான் ஆவான். சுகுமாரன் என்பது அழகிய மன்மதன் என்னும் பொருள் கொண்ட வடசொல். (மொழிப் பயிற்சி - 20: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக் கதிர், 27 டிச 2010 )
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மாரனார் வரிவெஞ் சிலைக்கு (திவ்.பெருமாள். 3, 3)
- மாரனை வென்று வீரணாகி (மணி. 30, 11).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மாரன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +