மாறன்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மாறன்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- மாரன் எனும் சொல் மன்மதனைக் குறிக்கும். மாறன் எனும் சொல் பாண்டியனைக் குறிக்கும். முன்னது வடசொல். பின்னது தமிழ்ச்சொல். சுகுமாரன் என்பது அழகிய மன்மதன் என்னும் பொருள் கொண்ட வடசொல். இதனைச் சிலர் சுகுமாறன் என்றெழுதுகிறார்கள். இது சரிதானா? திருமாறன், நெடுமாறன், நன்மாறன் - இப்பெயர்கள் எல்லாம் தனித்தமிழ்ப் பெயர்கள். இந்தப் பெயர்களில் உள்ள மாறன் (பாண்டியன்) எனும் தமிழ்ப் பெயரை சுகு என்ற வடசொல்லோடு ஓட்டலாமா? அது சுகுமாரன் என்றே எழுதப்பட வேண்டும். சுகுமாறன் என்று இருமொழியும் இணைத்துப் பொருளற்றதாக ஆக்கிவிடுதல் பிழை. (மொழிப் பயிற்சி - 20: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக் கதிர், 27 டிச 2010 )
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பூந்தார் மாற (புறநா. 55)
- சடகோபன்மாறன் (திவ். திருவாய். 2, 6, 11)
- வல்வினைக்கோர் மாறன் (திருவரங்கத்தந். காப். 5)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மாறன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பாண்டியன் - மாரன் - மன்னன் - மாற்றான் - பகைவன் - நம்மாழ்வார்