தமிழ்

தொகு
 
முல்லை:
 
முல்லை:
 
முல்லை:
(கோப்பு)

பொருள்

தொகு
  • முல்லை, பெயர்ச்சொல்.
  1. கொடிவகை
    முல்லை வைந்நுனை தோன்ற (அகநா. 4)
  2. கொடி வகை
  3. காட்டுமல்லிகை
  4. ஊசிமல்லிகை
  5. ஊசி முனை இலைகள் உள்ள ஒரு கொடிவகை
  6. ஈசுரமூலி
  7. ஐந்திணையுள் ஒன்றான முல்லைநிலம். (தொல். பொ. 5.)
  8. முல்லைநிலப்பண்வகை
  9. சாதாரிப்பண்
  10. உரிப்பொருளில் ஒன்றாகிய இருத்தல்.
    முல்லை சான்ற புறவு (மது ரைக். 285)
  11. கற்பு.
    தானுடை முல்லை யெல்லாந் தாதுகப் பறித்திட்டானே (சீவக. 686)
  12. சிறப்பியல்பு. (பு. வெ. 8, 17, உரை.)
  13. வெற்றி
    முல்லைத்தார்ச் செம்பியன் (பு. வெ. 9, 34)
  14. முல்லைப்பாட்டு. பாணிரண்டு முல்லை (பத்துப்பாட்டு, தனிப்பா.). (தக்க யாகப். 54, உரை.)
  15. முல்லைக்குழல். (சிலப். 17, பாட்டு 3.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - mullai
  1. Arabian jasmine, m. sh., Jasminum sambac
  2. Trichotomus-flowering smooth jasmine, m.cl., Jasminum trichotomum
  3. Wild jasmine
  4. Eared jasmine
  5. Pointed leaved wild jasmine, m. cl., Jasminum malabaricum
  6. Indian birthwort
  7. Forest, pastoral tract, one of ai-n-tiṇai
  8. A melody-type of the forest tracts
  9. A secondary melody-type
  10. Patient endurance of a lady during the period of separation from her lover
  11. chastity
  12. Chief characteristic
  13. victory
விளக்கம்

மிக்க நறுமணமிக்க இந்த மல்லிகைப் பூக்களின் காம்புகள் நீண்டு ஊசியைப் போலுள்ளதால் ஊசிமல்லிகை என்னும் பெயரும் உண்டு...

  • மருத்துவ குணங்கள் இந்தப்பூக்களால் கணமாந்தம், வயிற்றுப்பிசம், குழந்தைகளுக்கு உண்டாகும் உதிர சம்பவப்பிணிகள்,சுரம், சோபை ஆகியவன போம்... மாலையாகவாவது, கூந்தலிலாவது அணிய இதன் நறுமணத்தால் மூளைக்கு ஒருவிதமான உற்சாகத்தை உண்டாக்கி மனோவியாதியால் நேர்ந்த உள்வெப்பத்தையும் போக்கும்
சுண்ணவாசி - சடாபுட்பம் - கெச்சம்- தளவம் - முல்லைச்சூட்டு- முனல் - மௌவல்- யூதிகை - வரடம்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முல்லை&oldid=1636163" இலிருந்து மீள்விக்கப்பட்டது