மோட்டார்

மின்னாற்றலால் இயங்கும் சிறு மோட்டார்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • மாந்த ஆற்றல் இன்றி மின்சாரம், வேதியியல் வினையாற்றல் போன்ற புற ஆற்றல்களால் விசையுடன் சுழலும் பொறி.
    • காந்தப்புலத்தில் இருக்கும் சுழலியில் மின்னோட்டம் பாய்ச்சி சுழலும் மின்னியக்கிகள் மோட்டார்களுக்கு எடுத்துக்காட்டுகள்.
    • தானுந்துகளில் இயங்கும் உள்ளெரி பொறியால் சுழன்றியங்கும் இயக்கியும் மோட்டார் எனப்படும் (தானுந்துகள் மோட்டார் வண்டிகள் எனப்பட்டன).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • இலத்தீன் மொழியில் moto என்றால் நகர்ந்து செல்லும் ஒருவர் அல்லது ஒன்றை அசையச்செய்வது/அசைப்பவர் நகரச்செய்வது/நகரச்செய்பவர் என்று பொருள். இச்சொல் இலத்தீனில் இருந்து 16-17 ஆவது நூற்றாண்டுகளில் ஆங்கிலத்தில் கடன்வாங்கப்பெற்று, 19 ஆம் நூற்றாண்டு முதல் ஆங்கிலத்திலும் ஐரோப்பிய மொழிகளிலும் புற ஆற்றலால் இயங்கி உந்துவிசை தரும் ஒரு பொறி என்னும் பொருளில் ஆளப்படுகின்றது. ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகராதி 1853 ஆண்டில் பட்னாம் மாத இதழ் (Putnam's Monthly Mag. Jan. 102/1) என்னும் இதழில் மோட்டார் (motor) என்னும் சொல்லை இப்பொருளில் முதல்முதலாக ஆண்டதற்கான எடுத்துக்காட்டைத் தருகின்றது (அங்கே சுட்டப்பட்ட சொற்றொடர்: The invention of new motors has always been a source of fruitful inquiry. (நன்றி OED)).



  • ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகராதி. Oxford English Dictonary, Draft Revision June 2010.


( மொழிகள் )

சான்றுகள் ---மோட்டார்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மோட்டார்&oldid=1636236" இலிருந்து மீள்விக்கப்பட்டது