யூதர்
யூதர்(பெ)
பொருள்
- யூத மதத்தை (நாட்டை, இனத்தை) சார்ந்தவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- "யூதர்" என்னும் சொல் "யூதா" என்னும் பெயருடையவரை மூலமாகக் கொண்டு எழுந்ததாகும். யூதா என்பவர் திருவிவிலிய வரலாற்றின்படி இஸ்ரயேல் (யாக்கோபு) என்பவரின் மூன்றாம் மகன் ஆவார். இவரின் வழிவந்தோர் "யூதர்" என்று அழைக்கப்பட்டனர். காலப்போக்கில் இப்பெயர் யாக்கோபுவின் பன்னிரு மகன்களின் குலத்தாரையும் குறிக்கலாயிற்று. இதற்குக் "கடவுளைப் புகழும் மக்கள்" என்பது பொருள்.
- "யூதர்" என்னும் சொல்லுக்குத் திருவிவிலியத்தில் "இஸ்ரயேல்", "இஸ்ரயேலர்" என்னும் சொற்களும் பலகாறும் ஆளப்பட்டுள்ளன.
பயன்பாடு
- "லேயா மீண்டும் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்தார். 'இப்போது ஆண்டவரை நான் மாட்சி படுத்துவேன்', என்று சொல்லி அவனுக்கு 'யூதா' என்று பெயரிட்டார்" (தொடக்க நூல் 29:35) திருவிவிலியம்
(இலக்கியப் பயன்பாடு)
( சொற்பிறப்பியல் )
ஆதாரங்கள் ---யூதர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:கிறித்தவம் - மதம் - இசுரேல் - இசுலாமியம் - விவிலியம்