விதிமுறை
பொருள்
விதிமுறை(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- rule and method
விளக்கம்
- இந்தச்சொல் 'ஒரு காரியம் செய்வதற்கான விதி அதை செயல்படுத்தும் முறை எனப் பொருள் படும்'... எந்தச் செயலை செய்ய வேண்டும்/கூடாது என்று சொல்லுவது விதி... அந்தச் செயலை எப்படிச் செய்யவேண்டும்/கூடாது என்று சொல்லுவது முறை... எடுத்துக்காட்டாக ஓர் அலுவலகத்தில் பணி புரியும் ஊழியர் முன் அனுமதியின்றி விடுப்பு எடுக்கக்கூடாது என்பது 'விதி'... விடுப்பு எடுக்க அதற்கான படிவத்தில் விவரங்களை நிரப்பி தன் உடனடி அலுவலரின் பரிந்துரையைப் பெற்று பின்னர் விடுப்பு தர அதிகாரமுள்ள அதிகாரியின் ஒப்புதலை எழுத்து மூலமாக அந்தப் படிவத்தில் பெற்ற பிறகே விடுப்பில் செல்லவேண்டும் என்பது 'முறை'...இவையெல்லாம் சேர்ந்ததே 'கோட்பாடு'.