விதிவிலக்கு
உரிச்சொல்
தொகுவிதிவிலக்கு
- மற்றவையில் இருந்து வேறுபட்டது
- உரிய விதிகளுக்கு உட்படாமல் தனியே விலகி இருப்பது/செய்வது
விளக்கம்
- உலகில் எல்லா ஒழுங்கு/முறைப் படுத்தப்பட்ட விடயங்களிலும் இப்படித்தான் செய்யவேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று வரையறை செய்யப்பட்டிருக்கும்...இவைகளை விதி என்பர்கள்...என்றாலும் எந்தெந்த சூழ்நிலைகளில் இந்த விதிகளை மீறலாம் என்பதையும் தெளிவுப்படுத்தி இருப்பர்...அதுவே விலக்கு எனப்படும்...எடுத்துக் காட்டாக விமான நிலையங்களில் எல்லாப் பயணிகளும் வரிசைக் கிரமமாகத்தான் விமானம் ஏறவேண்டும் என்பது விதி...ஆனால் வயோதிகர்கள் மற்றும் சிறுவர்கள், கைக்குழந்தைகள் உள்ள பெண்களை முன்னதாகவே ,பொதுவரிசையில் நிற்காமல், விமானமேற சில நேரங்களில் அனுமதிப்பர்...இதுவே விலக்கு ஆகும்...
பயன்பாடு
- தமிழிலும் புலமை பெறாமல், ஆங்கிலத்திலும் புலமை பெறாமல் இரண்டுங்கெட்டானாகி விடுகிறார்கள் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள். மாநகரங்களில் உள்ள சில பள்ளிகள் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம்.(தமிழா, நீ பேசுவது தமிழா?, தினமணி, 20 ஆகஸ்டு 2010)
- மேற்கண்டச் சொற்றொடர் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் எந்த மொழியிலும் புலமை பெறுவதில்லை என்பது எழுதப்படாத நடைமுறை விதியாக இருந்தாலும் சில மாநகரப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இரு மொழிகளிலும் அந்த விதியிலிருந்து விலக்காகப் புலமை பெற்றுவிடுகிறார்கள் என்னும் பொருள் கொண்டது...
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - exception