பள்ளி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பள்ளி(பெ)
- இடம்
- சொல்லிய பள்ளி நிலையின வாயினும் (தொல். எழுத். 100).
- சிற்றூர். (பிங். )
- இடையர் ஆயர்கள் வாழும் ஊர்
- காவும் பள்ளியும் (மலைபடு. 451)
- நகரம் (பிங். )
- முனிவர் வாழும் ஆசிரமம்
- மாதவி மாதவர் பள்ளியு ளடைந்த தும் (மணி. 18, 8)
- சமண, பௌத்தக் கோயில்.
- புத்தர் நோன்பியர் பள்ளியுள்ளுறை (திவ். பெரியதி. 2, 1, 5)
- அரசருக்குரிய அரண்மனை முதலியன, பள்ளித்தேவாரம்
- வேலைக்களம்
- தச்சன் வினைபடு பள்ளி (களவழி. 15)
- படுக்கை
- கழாஅக் கால் பள்ளியுள் வைத்தற்றால் (குறள், 840)
- தூக்கம். (கலித். 121.)
- விலங்குதுயிலிடம். (பிங்.)
- பள்ளிக்கூடம்
- பள்ளியி லோதி வந்ததன் சிறுவன் (திவ். பெரியதி. 2, 3, 8)
- அறை. (அக. நி.)
- அறச்சாலை. (W.)
- சாலை
- புதுப்பூம் பள்ளி (புறநா. 33)
- வன்னியர் என்னும் சாதி
- குறும்பர்
- ராஜாக்கள் போகப் பள்ளிகள் வந்து புகுரு மாபோலே (திவ். இயற். திருவிருத். 40, வ்யா. 235).
- கிறிஸ்தவக் கோயில்
- முகமதியர் தொழும் இடம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
n.
- place
- hamlet, small village
- herdsmen's village
- town
- hermitage, cell of a recluse
- temple, place of worship, especially of Jains and Buddhists
- Palace; anything belonging to royalty
- workshop
- Sleeping place or bed
- sleep
- Sleeping place of animals
- school
- room, chamber
- Alms-house
- enclosure
- The Vanniya caste
- Petty rulers
- Christian church
- mosque
பயன்பாடு
- பள்ளிகொள்ளுதல் என்றால் படுத்தல் என்று பொருள். சமணர் படுக்கும் குகைகள் பள்ளிகள் எனப்பட்டன. அங்கே கல்வி அளிக்கப்பட்டமையால்தான் பள்ளி என்ற சொல்லே வந்தது. அந்த கல்விக்காக சமணர் எழுதிய பாடநூல்களே நீதி நூல்களும் நன்னூல் போன்ற இலக்கணநூல்களும். (இலக்கியமும் வரலாறும்-கடிதங்கள், ஜெயமோகன்)