ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

வேதகம்(பெ)

  1. வேறுபடுத்துகை
    • உயிரு மாயா வுடலையும் வேதகஞ்செய் தாண்டவங்கணனே (கோயிற்பு. இரணிய. 56)
  2. வேறுபாடு
    • விண்களி கூர்வதோர்வேதகம் வந்து வெளிப்படு மாகாதே (திருவாச. 49,1)
  3. விரோதம்
    • அவனால்இவ்வளவு வேதகமு முண்டாயிற்று.
  4. துரோகம்
    • வேதகமுண்டானால் இராச்சியம்சளைக்கும்.
  5. புடமிடுகை
    • வேதகப்பொன்.
  6. புடமிட்ட பொன்
    • விளங்காநின்ற வேதகமே (தாயு. பெற்றவட். 10)
  7. இரும்பு முதலிய உலோகங்களைப் பொன்னாக்கும் பண்டம்
    • இன்புறு வேதகத் திரும்பு பொன்னானாற்போல (பெரியபு. கண்ணப். 154)
  8. வேதங்கம், சிறுதுகில்
  9. கர்ப்பூரம்
  10. தானியம்
  11. வெளிப்படுத்துகை
    • இரகசியத்தை வேதகம்பண்ணலாகாது.

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=வேதகம்&oldid=1242006" இலிருந்து மீள்விக்கப்பட்டது