affidavit
- உறுதிமொழிப் பத்திரம்; உறுதிமொழி ஆவணம்
- பிரமாணப் பத்திரம்; ஆணை உறுதி ஆவணம்/ வாக்குமூலம்
- சத்தியவோலை, சத்தியக்கடதாசி
ஒலிப்பு (ஐ.அ) | இல்லை |
(கோப்பு) |
பயன்பாடு
- ஒரு மனிதனை வதைப்பது என்று ஒரு வங்கி தீர்மானித்துவிட்டால் அதைச் செய்வதற்கு எத்தனை வழிவகைகள் இருக்கின்றன என்று பார்க்கும்போது பிரமிப்புத்தான் ஏற்படும். ஒரு நீளமான படிவத்தை முதலில் நான் நிரப்ப வேண்டும். ஒரு சட்டத்தரணியின் முன்னால் கையெழுத்து வைத்த சத்தியக்கடதாசி ஒன்று தயாரிக்கவேண்டும். என்னுடைய கடவுச்சீட்டுகளின் ஒளிநகல்கள் உண்மையானவை என்று கனடா வங்கி மனேஜரின் கையொப்பம் பெறவேண்டும். இவை எல்லாவற்றையும் செய்து அனுப்பினால் வங்கிக் கணக்கை மீண்டும் உயிர்ப்பித்துவிடுவார்கள். (அம்மாவின் பெயர், அ.முத்துலிங்கம்)
- மகாத்மா காந்தி தன்னுடைய குடும்ப பெயரை ஃப்ரோஸ்கானுக்கு கொடுத்து அவரை ஃப்ரோஸ்கான் காந்தி (Feroze Gandhi) ஆக்கினார் என்றும் இப்பெயர் மாற்றத்தை லண்டனில் சத்தியக்கடதாசி (affidavit) முடித்து இப்பிரச்சினக்கு முடிவு கட்டியதாவும் கூறப்படுகிறது. ([1])
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +