ஆங்கிலம்

தொகு
 
horned desert viper:
-பாலைக் கொம்பு விரியன்
  1. Horned + desert + viper
  2. Cerastes cerastes..(விலங்கியல் பெயர்)

பொருள்

தொகு
  • horned desert viper, பெயர்ச்சொல்.
  1. பாலைக் கொம்பு விரியன்
  2. ஒரு பாலைவனத்து நஞ்சுள்ளப் பாம்பு வகை

விளக்கம்

தொகு
  1. இதொரு மிகக்கொடிய விடமுள்ளப் பாம்புவகை...ஆப்பிரிக்காக் கண்டத்தின் வட பகுதியும், மத்தியக்கிழக்கு பகுதிகளும் இதற்குத் தாயகம்...மணலின் நிறத்தையேக் கொண்டிருப்பதால், இரைப் பிராணிகள் காணாதவாறு, தன்னைக் கற்பாறை அல்லது புதர்களுக்கு அருகே மணலினடியில் உடலை மறைத்துக்கொண்டு , தலையைமட்டும் சற்றே வெளியே நீட்டிக்கொண்டு, கிட்ட வரும் சிறுபறவைகள் அல்லது எலிகளின்மீது திடீரென்றுப்பாய்ந்துப் பிடித்து, அவைகளை உணவாக்கிக்கொள்ளும்...இதன் தலையில் ஒவ்வொரு கண்ணுக்கும் மேல் கொம்பு போன்ற அமைப்பு இருப்பதால் horned என்னும் சொல்லைச் சேர்த்து அடையாளப்படுத்தப்படுகிறது...கொம்பில்லாத வகைகளுமுண்டு...


( மொழிகள் )

சான்றுகோள் ---horned desert viper--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=horned_desert_viper&oldid=1753077" இலிருந்து மீள்விக்கப்பட்டது