அக்கடா
பொருள்
அக்கடா(பெ)
- சுகம்; வாளா இருத்தல்.
- மண்ணெண்ணைத் திரியடுப்பைப் பற்றவைக்க நுனியில் தக்கை பொருத்திய கம்பி. [ வழக்குச் சொல்லகராதி - கி.ரா - பக்.1]
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- perfect ease
விளக்கம்
- அக்கடா என்று கிட என்று சொல்லுகிறோமே. இந்த அக்கடா என்பது கன்னடச் சொல். இதற்கு வாளா இருத்தல் என்பதே தமிழ். (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 6 மார்ச் 2011)
- ஊழல் நடந்திருக்கிறது, முறைகேடு நடந்திருக்கிறது என்பதெல்லாம் இருக்கட்டும். அதைப் பற்றிய விவாதமே கூடாது என்று ஆளும்கட்சித் தரப்பு கூறுமேயானால், பிறகு எதற்காக நாடாளுமன்றமும், சட்டப் பேரவைகளும்? அப்படியானால், ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி, ஆட்சியை ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு அக்கடா என்று இருந்துவிடலாமே... (தோண்டத் தோண்ட..., தினமணி தலையங்கம், 11 அக் 2011)
பயன்பாடு
- அக்கடா என்று கிடந்தேன்.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அக்கடா--- DDSA பதிப்பு + வின்சுலோ +