அன்மொழித் தொகை
பொருள்
அன்மொழித் தொகை(பெ)example
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- தொகை எனில் தொகுத்து வருதல் (மறைந்து வருதல்).
- வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, வேற்றுமைத் தொகை இந்த ஐந்து தொகைகளின் வழியாக இவற்றுள் அடங்காத மற்றொரு சொல் மறைந்திருப்பது அன்மொழித் தொகை எனப்படும். அல் + மொழி + தொகை (அல்லாத சொல் மறைதல்) எ-டு: தேன்மொழி வந்தாள் - தேன் போன்ற சொல் பேசும் பெண் வந்தாள்- உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. (தேன்மொழி எனும் பெயருடைய பெண் வந்தாள்) பெண் எனும் சொல் ஈண்டு அன்மொழி. பைந்தொடி கேளாய் - பசிய (பச்சைநிற) வளையல் அணிந்த பெண்ணே கேள் (பெண் அன்மொழி). (மொழிப் பயிற்சி-26: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 13 பிப் 2011)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அன்மொழித் தொகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:அன்மொழி - தொகை - வேற்றுமைத்தொகை - வினைத்தொகை - பண்புத்தொகை - உம்மைத்தொகை